Lankamuslim.org

One World One Ummah

Archive for the ‘பலஸ்தீன்’ Category

காஸா எல்லையை எகிப்து நிரந்தரமாக திறக்கின்றது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்து பாலஸ்தீன் காஸா ரபாஹ் எல்லையை சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறக்கபோவதாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பை எகிப்து எகிப்தின் அதிகார பூர்வ தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பை பலஸ்தீனர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். காஸா ரபாஹ் எல்லையை நிரந்தரமாக திறக்கபட்டால் கடந்த நான்கு ஆண்டுகால காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகை உடைக்கப்படும் என்பது குறிபிடத்தக்கது.

எகிப்தின் இடைக்கால வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவர முக்கிய தீர்மானம் எடுக்கபோவதாகவும் எதிர் வரும் பத்து தினங்களில் நீதிக்கு விரோதமான காஸா மீதான முற்றுகையை நீக்கும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது விரிவாக

Advertisements

Written by lankamuslim

மே 26, 2011 at 8:31 பிப

பலஸ்தீன் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் இராணுவத்தை அனுப்பி காஸாவை பாதுகாக்க கோரும் ஆர்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்

காஸா இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவ முற்றுகைக்குள் 1.6 மில்லியன் பாலஸ்தீனிய காஸா மக்கள் போதுமான எந்த உணவு , மருந்து , மருத்துவம் எதுவும் இன்றி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையால் காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில் பெண்கள் , சிறுவர் , சிறுமியர் ,வயோதிபர் என்ற பாகுபாடுகள் இன்றி வதைக்க படுகின்றனர் .  வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான , மின்சாரம், தண்ணீர், உணவு, மருந்து, சமையல் வாயு, எதுவுமே காஸா வுக்குள் இஸ்ரேலியஆக்கிரமிப்பு படையால் அனுமதிக்க படுவதில்லை இரண்டு வருடங்களுக்கு முன்னர் S.S. Free GAZA என்ற கப்பல்கள் 2008 ஆம் ஆண்டில் காஸாவை அடைந்தது அதன் பின்னர் எந்த நிவாரண உதவி கப்பல்களும் அனுமதிக்க படவில்லை மருத்துவமனைகளில் சிகிச்சை இன்றி குழந்தைகளின் இறப்புவீதம் மிக மேசமாக அதிகரித்துள்ளது. நான்கு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வது என்பது மிகவும் கடினமாக மாறிவருகின்றது காஸா  வில் 70 வீதமானவர்கள் மிகவும் மோசமான வறுமை நிலையில் போதுமான உணவு இன்றி உள்ளனர் முஸ்லிம் எகிப்து காஸாவின் பக்கமுள்ள தனது எல்லையை மூடி காஸா முஸ்லிம்களை பட்னி போட்டு கொலை செய்ய இஸ்ரேலுக்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கிவருகின்றது எகிப்து ஜனாதிபதி ஹு சனி முபாரக் ஒரு முஸ்லிம் உம்மாவின் துரோகியாக தன்னை அடையாளபடுத்தினார் காஸா மக்கள் வேறு வழி இன்றி காஸா வுக்கும் எகிப்துக்கும் இடையில் நிலக் கீழ் சுரங்கம் Video விரிவாக பார்க்க…

Written by lankamuslim

ஜூன் 10, 2010 at 3:33 பிப

பலஸ்தீன் இல் பதிவிடப்பட்டது

பலஸ்தீன மக்கள் அகதிகளாக்கப்பட்ட தினம் :கலதாரியில்

leave a comment »

இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவராலயம் அல் நகபா என்று அழைக்கபடும்  பலஸ்தீன  மக்கள் இஸ்ரேல பயங்கரவாதத்தால்  அகதிகளாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று  மாலை புகைப்படக் கண்காட்சி ஒன்றை   ஏற்பாடு செய்திருந்தது. புகைப்படக் கண்காட்சியை இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் டாக்டர் அன்வர் அல் அகார் ஆரம்பித்து வைத்து உரையாறியுள்ளார்  அங்கு பலஸ்தீன மக்களில் அவலங்களை சித்தரிக்கும் படங்களும்  , பலஸ்தீன மக்களின் பூர்விகத்தை  எடுத்து காட்டும் சான்றுகளும் காட்சிக்கு வைக்க பட்டிருந்தது , கடந்த புதன் கிழமை – 2010 மே மாதம் 12ம் திகதி  இலங்கைக்கான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தூதுவர் ஏற்பாடு செய்த  விழா ஒன்றுக்காக  விருந்துபசாரம் ஒன்று கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்படிருந்து  இந்த நிகழ்வை ஆட்சேபித்து ஆர்பாட்டம் ஒன்று  கோல் பேஸ் ஹோட்டலில் முன்பாக நடைபெற்றது

பயங்கரவாத நாடான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகாரசபை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் உள்ள பஸ்தான் காலனியை முற்றுமுழுதாக நிர்மூலமாக்குவதற்கான திட்டங்களில் முழுமூச்சாக இறங்கியுள்ளது’ என்று ஹமாஸ் பேச்சாளரான பவ்ஸி பர்ஹூம் குற்றஞ்சாட்டியுள்ளார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 21, 2010 at 11:21 பிப

பலஸ்தீன், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன்று உலகின் பல பாகங்களிலும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஸ்டிக்க படுகின்றது

leave a comment »

Palestinian prisoners in Israeli vehicle before their release

ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி 2010 ஆம் ஆண்டு பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஷ்டிக்க உலகம் முழுவதிலும் உள்ள ஆதரவாளர்களை ,பலஸ்தீன பொது அமைப்புகள் கூட்டாக அழைப்பு விடுத்திருந்தது  தமது அறிக்கையில் 34 வது பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் முக்கியமான கால கட்டத்தில் வர இருப்பதாகவும் இந்த தினத்தை இஸ்ரேல சிறைகளில் வதைக்க படும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் பற்றிய விழிபுனர்வுகான வாரமாக கருதி வாரம் முழுவதும் கைதிகள் பற்றிய விழிபுணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்யுமாறும் ஏப்ரல் மாதம் 17 திகதி அன்று பலஸ்தீன் அரசியல் கைதிகளுக்கு தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக பட்டங்களை ஏற்றுமாறும் கூறியிருந்தது

இஸ்ரேலிய சிறைகளில் 7300 கும் அதிகமான் அரசியல் கைதிகள் வதைக்க படுகின்றார்கள் இவர்களில் 33 பேர் பெண்கள் , 300 பேர் சிறுவர்கள் , இவர்களில் 400 பேர் ஜெருசலத்தில் இருந்தும் , 745 பேர் காஸ பகுதியில் இருந்தும் , 6155 பேர் மேற்கு கறை பிரதேசத்தில் இருந்தும் இஸ்ரேலிய வதை முகாம்களில்   வதையுருகின்றனர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவ வதை முகாம்களில் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடனேயே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது – இன்று உலகின் பல பாகங்களிலும் பலஸ்தீன் அரசியல் கைதிகள் தினம் அனுஸ்டிக்க பட்டுவருகின்றது விரிவாக பார்க்க…

Written by lankamuslim

ஏப்ரல் 17, 2010 at 9:52 பிப

பலஸ்தீன் இல் பதிவிடப்பட்டது

இன்று பாலஸ்தீன மேற்கு கரை பகுதியில் இரு வாலிபர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்

leave a comment »

கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு பாலஸ்தீன மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான ஜெரூசலம், மேற்கு கரை போன்ற பகுதிகளில் அந்த மக்களுக்கும், அவர்களின் புனிதத் தலங்களுக்கும் எதிராக மிக மோசமான பயங்கரவாதத்தை மேற்கொண்டு வருகின்றது கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேலிய அராஜகங்கள் அல் குத்ஸ் மஸ்ஜித் பகுதியிலும் அதிகரித்துள்ளது இஸ்ரேலிய அராஜகங்கள்,எதிர்த்து மக்கள் மேற்கு கரை மற்றும் காஸா பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. மேற்கு கரை பகுதியில் இன்று இடம் பெற்ற இஸ்ரேலிய அராஜக துப்பாக்கி தாக்குதலில் இரு பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துப்பாக்கி சூட்டு தாக்குதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் விரிவாக பார்க்க…

Written by lankamuslim

மார்ச் 21, 2010 at 8:45 பிப

பலஸ்தீன் இல் பதிவிடப்பட்டது

இஸ்ரேலுக்கு துருக்கியின் கடும் எச்சரிக்கை

leave a comment »

http://merryabla64.files.wordpress.com/2009/01/erdogan-davos-photo-afp.jpg

துருக்கியப் பிரதமர் ரெசெப் தையிப் அர்டோகன் Recep Tayyip Erdogan, இஸ்ரேலை கடுமையாக விமர்சித்துள்ளார் இஸ்ரேல், காஸாவில் செய்யும் பொதுமக்களை படுகொலை, பொஸ்பரஸ் குண்டு தாக்குதல்கள் என்பன வற்றை அங்காரா அமைதியாக பார்த்துகொண்டு இருக்காது என எச்சரித்துள்ளார் மேலும் அவரின் எச்சரிகையில் காஸாவில் உட்கட்டமைப்பை  நிர்மூலமாக்கி, அதனை ஒரு திறந்த சிறைச்சாலையாக மாற்றிக் கொண்டிருப்பதை அங்காரா கண்களை மூடி அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போவதில்லை’ என்று எச்சரித்துள்ளார் . விரிவாக பார்க்க

Written by lankamuslim

பிப்ரவரி 2, 2010 at 6:34 பிப

பலஸ்தீன் இல் பதிவிடப்பட்டது

பலஸ்தீன் அகதிகளுக்கு உங்கள் உதவி தேவைப்படுகின்றது

leave a comment »

அனைத்துக் கனேடியர்கள் சார்பிலும்  மத்திய கிழக்கில் நீதியும் அமைதியும் நிலைநிறுத்தப்படும் வகையில் UNRWA உடன் ‘கனேடியன் எய்ட்’ (CANADIAN AID) அமைப்பை மீண்டும் இணைத்துக்கொள்வது தொடர்பில் உங்கள் பெறுமதியான நேரத்தில் முப்பது விநாடிகளைச் செலவிட்டு விரைந்து செயலாற்ற முன்வாருங்கள் என Canadians for Justice and Peace in the Middle East எனும் அமைப்பு அழைப்புவிடுக்கின்றது.

கடந்த வாரம் (டிசம்பர் 2010) பல தசாப்த காலமாக ஐ.நா.வின் நிவாரணப் பணிகளுக்கான முகவர்நிலையத்துக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டுவந்த உதவிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கனடாவின் ஹார்பர் அரசாங்கம் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி அறிவித்துள்ளது.

1949 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட UNRWA உலகெங்கிலுமுள்ள பலஸ்தீன் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கிவரும் மிகப் பிரதானமான அமைப்பாகத் தொழிற்பட்டு வருகின்றது. ஹார்பர் அரசின் இந்தத் தீர்மானம், பலஸ்தீன் அகதிகளுக்கு உதவுவது தொடர்பில் பாரம்பரியமாக மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு வழங்கிவரும் கனடாவின் நடுநிலைமைப் போக்கினைத் தகர்த்தெறிவதாக அமைந்துள்ளது. விரிவாக பார்க்க..

Written by lankamuslim

ஜனவரி 31, 2010 at 6:21 பிப

பலஸ்தீன் இல் பதிவிடப்பட்டது