Lankamuslim.org

Archive for the ‘முஜாகிதீன்கள்’ Category

காஸா எல்லையை எகிப்து நிரந்தரமாக திறக்கின்றது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: எகிப்து பாலஸ்தீன் காஸா ரபாஹ் எல்லையை சனிக்கிழமை தொடக்கம் நிரந்தரமாக திறக்கபோவதாக அறிவித்துள்ளது இந்த அறிவிப்பை எகிப்து எகிப்தின் அதிகார பூர்வ தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த அறிவிப்பை பலஸ்தீனர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். காஸா ரபாஹ் எல்லையை நிரந்தரமாக திறக்கபட்டால் கடந்த நான்கு ஆண்டுகால காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகை உடைக்கப்படும் என்பது குறிபிடத்தக்கது.

எகிப்தின் இடைக்கால வெளிநாட்டு அமைச்சர் நபீல் அல் அரபி கடந்த ஏப்ரல் மாதம் இறுதி பகுதியில் காஸா மீதான முற்றுகை முடிவுக்கு கொண்டுவர முக்கிய தீர்மானம் எடுக்கபோவதாகவும் எதிர் வரும் பத்து தினங்களில் நீதிக்கு விரோதமான காஸா மீதான முற்றுகையை நீக்கும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது விரிவாக

Advertisements

Written by lankamuslim

மே 26, 2011 at 8:31 பிப

பலஸ்தீன் இல் பதிவிடப்பட்டது

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் தொடர்ந்தும் நிலைகொள்ளுமாம்

leave a comment »

ஆப்கானிஸ்தானில் இருக்கும் நேட்டோ   படை 2014 ஆம் ஆண்டுக்கு பின்னரும் நீண்டகாலத்திற்கு நீடிப்பதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இது தொடர்பாக நேட்டோவின் தலைமை செயலரான அண்டர்ஸ் போக் ராஸ்முஸ்ஸன் கூறுகையில், நேட்டோ நாட்டை விட்டு வெளியேற தாலிபான்கள் காத்திருந்தால் அது அவர்களுக்கு ஏமாற்றம் தான் என்றும், தாங்கள் நீண்டகாலம் அங்கிருக்க போவதாக கூறியுள்ளார்

அத்தோடு தாம் இராணுவ செயல்களோடு நிறுத்திவிடாமல் மற்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதை தாங்கள் உணர்ந்து கொண்டு விட்டதாகவும் அவர் கூறினார். போர்த்துகலில் நடைபெற்ற நேட்டோ மாநாடு ஒன்றில் அவர் இக்கருத்துக்களை தெரிவித்துள்ளார் விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

நவம்பர் 21, 2010 at 10:04 முப

அப்கான் இல் பதிவிடப்பட்டது

விக்கிலீக் மீண்டும் 391,832 ஆவணங்களை வெளியிட்டுள்ளது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்

ஈராக் மீது  அமெரிக்க ஆக்கிரமிப்பு போர் குறித்த 391,832    ஆவணங்களை  விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று வெளிட்டுள்ளது இதில் 2004 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான காலத்தில் அமெரிக்கா உலகிற்கு மறைத்துள்ள ரகசியங்கள் கொண்டது எனினும் 2004ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாத சம்பவங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது    (except for the months of May 2004 and March 2009)

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது இரகசிய ஆவணங்களில் பிரகாரம் 2004 தொடக்கம் 2009 ஆண்டு வரையுள்ள 6 ஆண்டுகளில் ஈராக்கில் 109,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இவர்களின் 60 வீதமானவர்கள் பொது மக்கள் என்று விக்கிலீக் தெரிவித்துள்ளது விரிவாக பார்க்க

Written by lankamuslim

ஒக்ரோபர் 23, 2010 at 8:46 பிப

ஈராக் இல் பதிவிடப்பட்டது

ஈராக்கில் அதிகளவில் யுரேனியம் பாவித்ததை ஒப்புகொள்ளும் UK Defense Secretary Liam Fox

leave a comment »

S.M.அப்துல்லாஹ்

ஈராக்கில் ஐதான யுரேனியத்தை -depleted uranium- கொண்ட ஆயுதங்களை அமெரிக்காவும், பிரிட்டனும் பாவித்தமையை பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ்- Liam Fox- ஒத்துக்கொண்டுள்ளார் “UK forces used about 1.9 metric tons of depleted uranium ammunition in the Iraq war in 2003,” UK Defense Secretary Liam Fox said in a written reply to the House of Commons on Thursday, the Kuwait News Agency reported.

அதிகரித்துள்ள கேன்சர், பிறக்கும் குழந்தைகளின் ஊனம் போன்ற நோய்களுக்கான காரணங்களை உலக சுகாதார அமைப்பு- The World Health Organization- ஆராய தொடங்கியுள்ளது ஈராக்கில் 2000  டன் ஐதான யுரேனியம் அமெரிக்க, பிரிட்டன் ஆக்கிரமிப்பு படைகளால் பயன் படுத்த பட்டுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன ஈராக்கின் பலுஜா போன்ற பயங்கர அமெரிக்க தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் உடல் ஊனத்துடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது  அமெரிக்கா படு பயங்க இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே பிறக்கும் குழந்தைகளில் அதிகமானது உடற் குறைபாடுகளுடன் பிறப்பதாகத் ஈராக் மருத்துவ செய்திகள் கூறிவருகின்றது இதில் குறிப்பாக அதிகமாக ஐதான யுரேனியம் பயன் படுத்தபட்டுள்ளதுVideo விரிவாக பார்க்க

Written by lankamuslim

ஜூலை 26, 2010 at 4:45 பிப

ஈராக் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் இராணுவத்தை அனுப்பி காஸாவை பாதுகாக்க கோரும் ஆர்பாட்டங்கள் அதிகரித்து வருகின்றது

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்

காஸா இஸ்ரேலிய பயங்கரவாத இராணுவ முற்றுகைக்குள் 1.6 மில்லியன் பாலஸ்தீனிய காஸா மக்கள் போதுமான எந்த உணவு , மருந்து , மருத்துவம் எதுவும் இன்றி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையால் காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில் பெண்கள் , சிறுவர் , சிறுமியர் ,வயோதிபர் என்ற பாகுபாடுகள் இன்றி வதைக்க படுகின்றனர் .  வாழ்வதற்கு அத்தியாவசிய தேவையான , மின்சாரம், தண்ணீர், உணவு, மருந்து, சமையல் வாயு, எதுவுமே காஸா வுக்குள் இஸ்ரேலியஆக்கிரமிப்பு படையால் அனுமதிக்க படுவதில்லை இரண்டு வருடங்களுக்கு முன்னர் S.S. Free GAZA என்ற கப்பல்கள் 2008 ஆம் ஆண்டில் காஸாவை அடைந்தது அதன் பின்னர் எந்த நிவாரண உதவி கப்பல்களும் அனுமதிக்க படவில்லை மருத்துவமனைகளில் சிகிச்சை இன்றி குழந்தைகளின் இறப்புவீதம் மிக மேசமாக அதிகரித்துள்ளது. நான்கு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வது என்பது மிகவும் கடினமாக மாறிவருகின்றது காஸா  வில் 70 வீதமானவர்கள் மிகவும் மோசமான வறுமை நிலையில் போதுமான உணவு இன்றி உள்ளனர் முஸ்லிம் எகிப்து காஸாவின் பக்கமுள்ள தனது எல்லையை மூடி காஸா முஸ்லிம்களை பட்னி போட்டு கொலை செய்ய இஸ்ரேலுக்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கிவருகின்றது எகிப்து ஜனாதிபதி ஹு சனி முபாரக் ஒரு முஸ்லிம் உம்மாவின் துரோகியாக தன்னை அடையாளபடுத்தினார் காஸா மக்கள் வேறு வழி இன்றி காஸா வுக்கும் எகிப்துக்கும் இடையில் நிலக் கீழ் சுரங்கம் Video விரிவாக பார்க்க…

Written by lankamuslim

ஜூன் 10, 2010 at 3:33 பிப

பலஸ்தீன் இல் பதிவிடப்பட்டது

Webster Tarpley: பாகிஸ்தானில் இடம்பெறும் கொலைகளை செய்வது அமெரிக்கா

leave a comment »

Webster Tarpley அமெரிக்க புலனாய்வு எழுத்தாளரும் ஊடகவியலாலருமான இவர் பாகிஸ்தான் மக்கள் சந்தைகளிலும் , பொது இடங்களிலும் கொல்லபடுவது அமெரிக்காவினால் என்று கூறுகின்றார்

அமெரிக்க புலனாய்வு எழுத்தாளரும் ஊடகவியலாலருமான வேப்ச்ட்டர் தர்ப்லே- Webster Tarpley – பாகிஸ்தானில் நடைபெறும் குண்டு வெடிப்புகளுக்கு காரணம் அமெரிக்கா என்றும் பிளக் வேட்டர் -Black-Water என்ற அமெரிக்காவின் தனியார் இராணுவம் இந்த குண்டுகளை வைப்பதாகவும் தொடர்ந்தும் குற்றம் சாட்டிவருகின்றார் அமெரிக்கா பாகிஸ்தானில் தனது நலன்களை பேணும் இராணுவ குழுக்களை உருவாக்கியுள்ளதாகவும் அவற்றை பயன் படுத்தி அழிவு நாசவேலைகள் செய்வதாகவும் பாகிஸ்தானில் பரவலான குற்றசாட்டுகள் உள்ளன Webster Tarpley சில மாதங்களுக்கு முன்னர் வழங்கியுள்ள அவரின் பேட்டியை இங்கு பார்க்கவும் வீடியோ

Written by lankamuslim

மே 30, 2010 at 7:57 பிப

அப்கான் இல் பதிவிடப்பட்டது

பலஸ்தீன மக்கள் அகதிகளாக்கப்பட்ட தினம் :கலதாரியில்

leave a comment »

இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவராலயம் அல் நகபா என்று அழைக்கபடும்  பலஸ்தீன  மக்கள் இஸ்ரேல பயங்கரவாதத்தால்  அகதிகளாக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கொழும்பு கலதாரி ஹோட்டலில் இன்று  மாலை புகைப்படக் கண்காட்சி ஒன்றை   ஏற்பாடு செய்திருந்தது. புகைப்படக் கண்காட்சியை இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் டாக்டர் அன்வர் அல் அகார் ஆரம்பித்து வைத்து உரையாறியுள்ளார்  அங்கு பலஸ்தீன மக்களில் அவலங்களை சித்தரிக்கும் படங்களும்  , பலஸ்தீன மக்களின் பூர்விகத்தை  எடுத்து காட்டும் சான்றுகளும் காட்சிக்கு வைக்க பட்டிருந்தது , கடந்த புதன் கிழமை – 2010 மே மாதம் 12ம் திகதி  இலங்கைக்கான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தூதுவர் ஏற்பாடு செய்த  விழா ஒன்றுக்காக  விருந்துபசாரம் ஒன்று கொழும்பு கோல் பேஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்படிருந்து  இந்த நிகழ்வை ஆட்சேபித்து ஆர்பாட்டம் ஒன்று  கோல் பேஸ் ஹோட்டலில் முன்பாக நடைபெற்றது

பயங்கரவாத நாடான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு அதிகாரசபை, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரில் உள்ள பஸ்தான் காலனியை முற்றுமுழுதாக நிர்மூலமாக்குவதற்கான திட்டங்களில் முழுமூச்சாக இறங்கியுள்ளது’ என்று ஹமாஸ் பேச்சாளரான பவ்ஸி பர்ஹூம் குற்றஞ்சாட்டியுள்ளார் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மே 21, 2010 at 11:21 பிப

பலஸ்தீன், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது