Lankamuslim.org

Archive for the ‘இஸ்லாம் பொதுவானவை’ Category

நான்கு பேரை கொன்ற கொலையாளி கைது பின்னர் தற்கொலை..!!

leave a comment »

murder_sceneவென்னப்புவ – நய்னமடுவ பிரதேச மருத்துவர், அவரது கணவர் மற்றும் அவர்களின் அவர்களின் இரண்டு பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காணாமல் போயிருந்த அவர்களது ஆலை காவலாளி பொலிசாரினால் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 3, 2015 at 5:55 பிப

இஸ்லாம் பொதுவானவை இல் பதிவிடப்பட்டது

உலக ஆசையும், அதிகார மோகமும்- சிந்தனை

with one comment

A.J.M.மக்தூம்
islam_insideபதவி மோகம், புகழாசை, பேராசை, பெருமை ஆகிய தீய பண்புகளே இன்று சமூகத்தில் தோன்றியுள்ள பல்வேறு பிரச்சினைகள், குழப்பங்கள், நெருக்கடிகள் போன்ற வற்றுக்கு மூல இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 16, 2013 at 5:12 பிப

இஸ்லாம் பொதுவானவை இல் பதிவிடப்பட்டது

இஸ்லாத்தை பற்றி வரலாறு படைத்தவர்கள் என்ன கூறியுள்ளார்கள்

leave a comment »

இஸ்லாத்தை பற்றி  உலக அறிஞர்கள் , வரலாறு படைத்தவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்வது உலக வரலாறு பற்றிய எமது பார்வையை விரிவாக்க உதவும் என்பதுடன் இஸ்லாம் என்பது ஒரு மதம் அல்ல அது ஒரு மனிதம் கொண்ட கோட்பாடு என்பதை அறிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் என்ற காரணத்தால் இந்த வீடியோவை இங்கு பதிவு செய்கிறோம்.

Written by lankamuslim

மார்ச் 16, 2010 at 6:41 பிப

இஸ்லாம் பொதுவானவை இல் பதிவிடப்பட்டது

கிலாபத் அழிக்கபட்டு இன்றுடன் 85 வருடங்களும் 334 நாட்களும்

with one comment

கலீபா அப்துல் மஜீத்

86 வது வருடதிற்கு   இன்னும் 31 நாட்கள் இருகின்றன

1924 மார்ச் 3 இம் திகதி  திங்கள்  கிழமை காலை வேளையில் கிலாபத் உலகை விட்டும் அழிக்கபட்டது இறுதியாக துருக்கியில் இஸ்லாமிய சாம்ராஜியதின் கலிபாவாக இருந்தவர் தான் இந்த படத்தில் இருக்கும் கலீபா அப்துல் மஜீத் இவர் கிலாபத் அழிக்கபட்டு ஒரு மணித்தியால அவகாசத்தில் குடும்பத்துடன் நாடு கடத்தபட்டார் இந்த சாம்ராஜிய அழிப்பை செய்தவன் முஸ்தபா கமால் அதா துர்க் என்ற இஸ்லாமிய சாம்ராஜிய துரோகி, முஸ்லிம் உம்மாஹ் அனாதையானது, கிலாபத் சாம்ராஜியம் கனவு தேசமானது, மேற்கு மேலாதிக்கம் கண்ட கனவு நிஜமானது, முஸ்லிம் உம்மத் துடித்தது ,அரசியல் அனாதையானது , ஆனால் சோர்வடைந்து ஒடி ஒதுங்கி இருக்க வில்லை மறு கணமே மீண்டும் சிந்தித்து செயல்பட புறபட்டது பயணம் மிகவும் நீண்டது இன்றும் தொடர்கின்றது விரிவாக பார்க்க…

Written by lankamuslim

ஜனவரி 31, 2010 at 11:42 பிப

இஸ்லாம் பொதுவானவை இல் பதிவிடப்பட்டது

ஐரோப்பா பெண்கள் பெற்றிருப்பது சுதந்திரமா?

leave a comment »

https://i1.wp.com/www.freewebs.com/black-legacy/Slave-hung-on-ship-1.jpg

சமீபத்தில் இணையச் செய்தி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில் இஸ்லாமும் மற்ற மதங்களைப் போலவே பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது என்று மக்கள் கலை இலக்கியக் குழவைச் சேர்ந்த நண்பர்கள் விமர்சனம் எழுதி இருந்தார்கள்.

அவர்களது விமர்சனத்திற்குப் பதில் கூறுமுகமாகவும், இஸ்லாத்தில் உள்ள பெண்களின் உரிமைகள் பற்றியும், அந்த உரிமைகள் யாவும் அவர்கள் கேட்டுப் பெற்றதோ அல்லது போராடிப் பெற்றதோ அல்ல என்றும், ஆனால் 1400 வருடங்களாக இன்னும் சொல்லப் போனால், பெண்களை இன்னும் போகப் பொருளாகவும், கடைச்சரக்காகவும், பண்டமாற்றைப் போலவும் அவர்களை நடத்தி வரும் சமூகங்களுக்கு மத்தியில் இஸ்லாம் அவர்களை எந்தளவு கண்ணியமான இடத்தில் வைத்துள்ளது என்பது புரிய வரும். இஸ்லாம் அவர்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாடுகள் யாவும், அவர்களின் பெண்மைக்கு இயைந்த மற்றும் பாதுகாப்பு என்ற நிலையிலே அல்லாது, அவர்கள் பெண்கள் என்ற காரணத்திற்காக என்றுமே அவர்களை தாழ்த்தி வைத்ததில்லை மற்றும் அடக்கி வைத்ததில்லை என்பதை சகோதரர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கட்டுரையைத் தருகின்றோம்- விரிவாக பார்க

Written by lankamuslim

ஒக்ரோபர் 5, 2009 at 8:21 பிப

இஸ்லாம் பொதுவானவை, கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ரமழான் 17 இல் பத்ர் போர் இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்

leave a comment »

battle-of-badr

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே பத்ர் போராகும். போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த நிகழ்ச்சி அதுவாகும். இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் -ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

செப்ரெம்பர் 6, 2009 at 8:33 பிப

இஸ்லாம் பொதுவானவை இல் பதிவிடப்பட்டது

ஹிந்துக்களின் வேதாகமத்தில் சொல்லப்படும், கடைசி அவதாரமான கல்கி, இறைதூதர் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவார்- பண்டிட் வைத் ப்ரகாஷ்

with one comment

இதை நான் சொல்லவில்லை, சமீபத்தில் ஹிந்தி மொழியில் வெளிவந்த புத்தகத்தின் சாராம்சமாகும். இந்த நூல் வெளியானபின், இந்தியாவே ஒரு கலங்கு கலங்கி
விட்டது என்றால் மிகையல்ல. இதை ஒரு இஸ்லாமியர் எழுதியிருந்தால், அவர் இந்நேரம் சிறையிலடைக்கப்பட்டிருப்பதோடு, அந்த புத்தகத்தையும் தடை செய்திருப்பார்கள்.

ஆனால், கல்கி அவதாரத்தைப் பற்றிய இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு, “பிரபஞ்ச இறைத்தூதின் வழிகாட்டி” என்னும் இந்த புத்தகம், வங்காளத்தில் இருந்து வெளிவந்ததாகும். இது அலஹாபாத் பல்கலைக்கழகத்தில் ஒரு முக்கிய
அத்தாட்சியாக இருக்கிறது. இதை எழுதியது, தலைசிறந்த ஆய்வாளரான பண்டிட் வைத் ப்ரகாஷ் என்னும், ஒரு பிராமண சமஸ்கிருத பண்டிட்டாவார்.

பண்டிட் வைத் ப்ரகாஷ, பன்னெடுங்கால கடின ஆராய்ச்சி மற்றும் அயரா உழைப்பில் உருவான இப்புத்தகத்தை, இதே போல ஆய்வு செய்யும் எட்டு கல்விமான்களிடம் சமர்ப்பித்து இருக்கிறார். அவர்களும், முழுக்க இப்புத்தகத்தை படித்துணர்ந்து, பலமான ஆதாரங்களினால், இப்புத்தகத்தின் தகவல், முழுக்க முழுக்க உண்மை தான் என்று சான்றளித்துள்ளனர்.

இந்தியாவின் தலைச்சிறந்த வேதங்கள், குறிப்பிடும் தூதரும் வழிகாட்டியுமான கல்கி அவதாரம், மக்காவில் பிறந்த முஹம்மது என்னும் மாமனிதரே ஆவார்.ஆதனால், ஹிந்துக்கள், இனியும் கல்கி அவதாரத்துக்காக காத்திராமல்,
ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்பு, இவ்வுலகில் உதித்து, இறைத்தூதை எத்தி வைத்து, வாழ்வின் இறுதிவரை இறைபணியாற்றிய இறைவனின் கடைசி தூதரைஏற்று இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். இவரது ஆராய்ச்சியின் இறையாண்மையை நிரூபிக்க, பண்டிட், தம் வேதத்திலிருந்து தக்க சான்றுகளை முன்வைக்கிறார்.

1.வேதங்கள், கல்கி அவதாரம் தான், பகவானின் இறுதித் தூதர் என்கிறது. இது, கடைசி தூதர், முஹம்மதுடைய விஷயத்தில் மட்டுமே சரியாக இருக்க முடியும்.2.ஹிந்து வேதங்களின் முன்னறிவிப்பின் படி, கல்கி நீரினால் சூழப்பட்ட ஒரு
இடத்தில் தான் அவதாரம் எடுப்பார். அது தான் ‘ஜஸீரத்துல் அரப்’ என்று சொல்லக் கூடிய கடலால் சூழப்பட்ட அரேபிய தீபகற்பமாகும்.

3.ஹிந்து புனித நூல்களில், கல்கி அவதாரத்தின் தந்தையை, விஷ்னு பகத் என்றும் தாயை சொமானிப் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.சமஸ்கிருதத்தில் விஷ்னு என்றால், இறைவன், அதாவது அல்லாஹ் என்று பொருள். அதோடு, பகத் என்றால் அடிமை என்று அர்த்தம். ஆக, விஷ்னு பகத் என்பது, அல்லாஹ்வின் அடிமை அதாவது அரபியில், அப்துல்லாஹ்
என்னும் பதத்தைத் தருகிறது. சொமானிப் என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு, சாந்தமான அமைதி என்று பொருள். அரபியில் ஆமினா என்ற வார்த்தைக்கும் இதே அர்த்தம் தான். ஆக, இறுதித் தூதர் முஹம்மதின் பெற்றோர் அப்துல்லாஹ்
மற்றும் ஆமினா என்பது, உறுதிப்படுகிறது.

4.அதோடு, கல்கி அவதாரம், ஆலிவ் மற்றும் பேரித்தங்கனிகளை உண்டு வாழ்வார் என்றும், வார்த்தை தவறாத நேர்மையாளராக இருப்பார் என்றும் ஹிந்துக்களின் புத்தகங்களில் உள்ளது. ஆக, இது முஹம்மதின் விஷயத்தில் உண்மையாகிறது என்பதாக பண்டிட் ப்ரகாஷ் எழுதுகிறார்..

5.கல்கி அவதாரம் உயர்ந்த மதிப்பு மிக்க குலத்தில் பிறப்பார் என்று வேதங்கள் சொல்கின்றன. இதுவும், மிக உயரிய, மதிப்புமிக்க குறைஷி குலத்தில் பிறந்ததால், முஹம்மதுடைய விஷயத்தில் சரியாகிறது.

6.கல்கி அவதாரத்துக்கு, ஒரு குகையில் இறைவனின் ஏவலர் மூலமாக ஞானம் கிடைக்கும் என்பதாக வந்துள்ளது. ஆக, மக்காவிலேயே, அல்லாஹ்வின் தூதர் ஜிப்ரீல் மூலமாக ஹீரா குகையில் ஞானம் பெற்றது முஹம்மது ஒருவர் தான்.

7.மேலும், கல்கி அவதாரத்துக்கு காற்றின் வேகத்தில் பறக்கும் குதிரை வழங்கப்படுமென்றும், அதன் மூலம் அவர், இவ்வுலகத்தையும், ஏழு வானத்தையும் சுற்றி வருவார் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘மிஃராஜ்’ இரவில்,
‘புராக்’ வாகனத்தில் தூதர் முஹம்மது பயணமானது, இதைத்தானே சொல்கிறது?

8.அதோடு, கல்கி அவதாரத்துக்கு இறைவனின் உதவி பெருமளவில் இருக்கும் எனவும், இறைவனால் வலுவூட்டப்படுவார் எனவும் புத்தகங்களில் வந்துள்ளது. முஹம்மதுக்கு, பத்ரு போர்க்களத்தில், இறைவனின் உதவி நேரடியாக தன்
ஏவலர்கள் மூலம் இறங்கியது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.

9.மேலும் சில விஷயங்கள் வேதங்களில் குறிப்பிடப்படுகின்றன. அதாவது, கல்கி அவதாரம், குதிரையேற்றத்திலும், அம்பெய்துவதிலும், வாள் பயிற்சியிலும் சிறந்து விளங்குவார். இந்த இடத்தில், பண்டிட் வைத் ப்ரகாஷ் என்ன
சொல்கிறார் என்பது, அதி முக்கியமான, கவனத்தில் கொள்ளத் தக்க விஷயமாகும். அதாவது, குதிரை, வாள் மற்றும் ஈட்டிகளின் காலம் வெகு நாட்களுக்கு முன்பே போய் விட்டது, தற்போது, நவீன ஆயுதங்களான, துப்பாக்கிகள், பீரங்கிகள்,
ஏவுகணைகள் என போர்முறை முற்றிலும் மாறி விட்டது. அதனால், வாளுடனும் வில்லுடனும் போராடக்கூடிய கல்கி இனிமேல் அவதாரமெடுப்பார் என்று இனியும் நம்பிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. உண்மையில், வேதங்களில்
குறிப்பிடப்பட்டிருக்கும் கல்கி அவதாரம் என்பது, புனித குர்ஆன் வழங்கப்பட்ட தூதர் முஹம்மதேயன்றி வேறில்லை என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

பேராசிரியர் பண்டிட் வைத்  ப்ரகாஷ் எழுதியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது
மீர் அப்துல் மஜீத்.

இதை தமிழில் மொழி பெயர்த்த சகோதரி சுமஜ்லா அவர்களுக்கு நன்றி!!

Written by lankamuslim

செப்ரெம்பர் 6, 2009 at 1:03 பிப

இஸ்லாம் பொதுவானவை இல் பதிவிடப்பட்டது