Lankamuslim.org

நியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி

leave a comment »

wqaqqqqqq நியுஸிலாந்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள்; படுகொலை செய்யப்பட்டமையானது : அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய இஸ்ரேல் உலகளாவிய முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி

நியுஸிலாந்தின் கிறிஸ்சேர்ச் பகுதியில் உள்ள அன்னூர் மஸ்ஜித் மற்றும் லின்வுட்டில் உள்ள இஸ்லாமிய நிலையம் என்பனவற்றில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காகத் தயாராகிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்கா தலைமையில் ஐரோப்பிய இஸ்ரேல் சக்திகள் உலகளாவிய மட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் நாசகார பிரசாரத்தின் தொடர் எதிரொலியாகவே இந்தச் சம்பவம் பதிவாகி உள்ளது.

இவ்விரண்டு பள்ளிவாசல்களிலும் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். 2019 மார்ச் 15ல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் நியுஸிலாந்தின் வரலாற்றில் மிகவும் கரைபடிந்த ஒரு சம்பவமாகும்.

முதலாவது சம்பவம் இடம்பெற்ற போது பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினரும் அருகில் இருந்துள்ளனர். பள்ளிவாசலில் தொழுகைக்காக திரண்டிருந்த அப்பாவி நிராயுதபாணி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சுமார் 16 நிமிடங்கள் இணையவழியாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டும் உள்ளது. இதுதொடர்பான படங்கள் மற்றும் காட்சிகள் இணையவழியாக வலம் வந்த வண்ணம் உள்ளன. டுவிட்டரில் விரிவான விளக்க உரை ஒன்றையும் துப்பாக்கிதாரி வழங்கி உள்ளார். இன்னும் சில இணைய வழிகளில் தாக்குதல் தொடங்க ஒரு சில நிமிடங்கள் முன்பாக இதுபற்றிய அறிவிப்புக்களும் வெளியாகி உள்ளன. இவற்றில் எல்லாம் தற்போது மேற்குலகில் பொதுவாகப் பேசப்படும் இஸ்லாமோபோபியா அல்லது இஸ்லாம் மீதான மிதமிஞ்சிய அச்சம் தொடர்பான கருத்துக்களையும் அது பற்றிய சொற்பிரயோகங்கள் வாசகங்கள் மற்றும் வெள்ளை இன மேலாதிக்க தேசியவாத கருத்தக்கள் என்பனவற்றையும் காண முடிகின்றது. தாக்குதலை நடத்தியவர் 28 வயதான ஒரு அவுஸ்திரேலிய பிரஜை என இனம் காணப்பட்டுள்ளார்.

இந்தக் காட்சிகளும் படங்களும் காட்டுத் தீ போல் இணையங்களில் பரவி விட்டன. இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக நியுஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நியுஸிலாந்து உலகில் மிகவும் அமைதியான நாடுகளில் ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒரு ஈவு இரக்கமற்ற இனவாத குற்றச் செயல் நியுஸிலாந்து போன்ற ஒரு நாட்டில் நடக்கும் என்பதை யாரும் கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது. இதே தினத்தில் இஸ்ரேல் தனது வழமையான பாரம்பரிய காட்டுமிராண்டித் தனத்தை உலகின் மிகப் பெரிய திறந்தவெளி சிறைச்சாலை என வர்ணிக்கப்படும் காஸா பகுதியில் கட்டவிழ்த்து விட்டமையும் இங்கே கவனிக்கத் தக்கதாகும்.

‘கிறிஸ்சேர்ச் பகுதியில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளதை இன்னும் கூட என்னால் நம்ப முடியாமல் உள்ளது. உண்மையிலேயே இது நியுஸிலாந்தில் தானா நடந்தது என்பதும் அச்சரியமாகவே உள்ளது’ என்று கிறிஸ்சேர்ச் மேயர் லியான் டேன்ஸீல் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் தொடர்பான 16 நிமிட நேர நேரலை ஒளிபரப்பின் மூலம் அதை நடத்தியவர் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 28 வயதான பிரண்டன் டெரண்ட் என்பது ஊர்ஜிதமாகி உள்ளது.

நியுஸிலாந்து பிரதமர் ஜெஸிண்டா ஆர்டன் துரிதமான பதில் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். பள்ளிவாசல் தாக்குதலை நடத்தியவர்களை தனது நாடு கண்டிப்பதாகவும் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தெட்டத் தெளிவாக இதை ஒரு பயங்கரவாத சம்பவமாகத் தான் நாம் வர்ணிக்க வேண்டி உள்ளது. நாம் அறிந்த வகையில் இந்தத் தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் தீவிரவாத கருத்துக்களை உடையவர்கள். இத்தகைய தீவிரவாத கருத்துக்கு நியுஸிலாந்தில் திட்டவட்டமாக இடம் இல்லை. பெரும்பாலும் உலகில் எங்குமே இத்தகைய கருத்துக்களுக்கு இடமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மீது நாம் கரிசணை கொண்டுள்ளோம். அவர்களுக்காக பிராத்திக்கின்றோம். கிறிஸ்சேர்ச் அவர்களுக்கும் வாழ்விடம். அவர்களுள் பலருக்கு இது பிறந்த இடமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நியுஸிலாந்தை அவர்கள் தமது வாழ்விடமாகத் தெரிவு செய்துள்ளார்கள் என்று நியுஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர்கள் தமது அர்ப்பணிப்போடு வாழ்ந்து வருகின்றனர். தமது குடும்பங்களை உருவாக்கி உள்ளனர். அந்த சமூகத்தின் ஒரு அங்கமாக மாறி அவர்கள் தமக்கிடையில் அன்பையும் பரிமாறிக் கொண்டு வாழ்ந்துள்ளனர். அது அவர்கள் தமது பாதுகாப்புக்காகத் தெரிவு செய்த இடம். அங்கே அவர்களின் கலாசாரம் சமயம் என்பனவற்றை பின்பற்றவும் செயல்படுத்தவும் அவர்களுக்கு உரிமை உண்டு. நாங்கள் பல்லினத்தன்மை. இரக்கம், கருணை என்பனவற்றை பிரதிநிதித்துவம் செய்பவர்கள். எமது விழுமியங்களைப் பகிர்ந்து கொள்பவர்களுக்கும் தேவை உள்ள அகதிகளுக்கும் இதுவும் ஒரு வீடு. இந்த விழுமியங்களை ஒரு போதும் இத்தகைய தாக்குதல்களால் ஆட்டம் காணச் செய்ய முடியாது.

200க்கும் மேற்பட்ட இனங்களையும் 160 மொழிகளையும் கொண்ட ஒரு பெருமைக்குரிய தேசமே எமது தேசம். இந்த பன்முக நிலையிலும் நாம் பொதுவான பெறுமான்களைக் கொண்டுள்ளோம். இந்த சம்பவத்தின் மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு நாம் எமது அன்பையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று நியுஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதம மந்திரி தனது நாட்டின் பிரஜையான இந்த ஈனச் செயலைப் புரிந்த நபரை பயங்கரவாதி திவிரவாத கருத்துடைய வலது சாரிய போக்கு கொணட் பயங்கரவாதி என வர்ணித்துள்ளார். முரண்பாட்டு மோதல் நிலை ஆய்வாளரும் பயங்கரவாதம் மற்றும் மத்திய கிழக்கு தொடர்பான எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சி.ஜே.வெர்லமென் ‘இன்று பண்டிதர்கள் முஸ்லிம்களைப் பற்றி எதை வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம். அவை ஒரு போதும் மேல் மட்டத்தில் உள்ளவர்களால் வெளியிடப்படவோ அல்லது பிரசுரிக்கப்படவோ மாட்டாது. ஆனால் யூதத்துக்கு எதிரான, கறுப்பு நிறத்துக்கு எதிரான, ஆசிய இனவாதத்துக்கு எதிரான கருத்துக்கள் சரியான முறையில் வழமையாகக் கண்டிக்கப்படுகின்றன. இஸ்லாமோபோபியா தான் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு வகை இனவாதமாகக் காட்சி அளிக்கின்றது. சமூக ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய மட்டத்தில் அது காணப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

பொக்ஸ் நியுஸ் தொகுப்பாளர் ஜெனீன் பிரோ அமெரிக்க காங்கிரஸ{க்கு முதற் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கறுப்பு இன முஸ்லிம் பெண் அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு விசுவாசமானவராக இருக்க முடியாது. காரணம் அவர் ஹிஜாப் அணிகின்றார். யூத மதத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகின்றார். இரட்டை விசுவாச நிலைப்பாட்டை அவர் கொண்டுள்ளார். ஏன்று தெரிவித்துள்ளார். இவை எல்லாம் மேற்குலகில் இன்று பரவலாகக் காணப்படும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான அச்ச உணர்வு மற்றும் வெறுப்புணர்வு என்பனவற்றின் வெளிப்பாடாக உள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக நியுஸிலாந்து, அவுஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளின் சஞ்சிகைகள் முஸ்லிம்களைப் பற்றி தவறான பல கருத்துக்களை தொடர்ந்து பிரசுரித்து வந்துள்ளன. அவற்றுக்கு உணர்வினைத் தூண்டும் தலைப்புக்களையும் இட்டு வந்துள்ளன. கடந்த மூன்று மாத காலத்தில் பிரிட்டனில் இவ்வாறு தலைப்பிட்டமையை திருத்தி பிரசுரிக்குமாறு வலியுறுத்தப்பட்ட 20க்கும் மேற்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஏனைய பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஏதாவது குற்றம் இழைத்தால் அவற்றுக்கு கிடைக்கும் பிரபலத்தை விட முஸ்லிம்கள் ஏதாவது குற்றம் இழைத்தால் அவற்றுக்கு கிடைக்கும் பிரசாரம் நான்கு மடங்கு அதிகமாக இருக்கின்றமையும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.

அந்த வகையில் வெறுப்பையும், பிரிவினையையும் தூண்டும் ஊடக அரசியலால் தூண்டப்பட்ட ஒரு நபராகவே நியுஸிலாந்து தாக்குதலை நடத்தியவரும் காணப்படுகின்றார் என்று குறிப்பிடலாம். ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் அவர்களின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே கூட்டமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமையானது இஸ்லாமோபோபியா அல்லது இஸ்லாம் பற்றிய தீவிர அச்சமும் வெள்ளை மேலாதிக்கமும் இப்போது உள்ளதை விட இன்னும் பாரதூரமாகக் கருதப்பட வேண்டியவை என்பதையே உணர்த்தி நிற்கின்றன.

மேற்குலகையும் உலகின் ஏனைய பாகங்களையும் மறைமுகமாக ஆண்டு வரும் உலகின் ஆயுத உற்பத்தி சக்திகள், எண்ணெய் வளக் கம்பனிகள், ஏனைய கூடடாண்மை சாம்ராஜ்ஜியங்கள் என்பனவற்றோடு இணைந்து சிவப்புக் கம்யூனிஸ்ட்டுகளும சேர்ந்து;, இஸ்லாமும் முஸ்லிம்களும் தான் உலகின் நம்பர் வன் பொது எதிரி என்ற மாயையே ஏற்படுத்தி உள்ளன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜேர்ர்ஜ் புஷ் இஸ்ரேலின் இரகசிய சேவையான மொஸாட்டுடன் இணைந்து அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தை திட்டமிட்டு அழித்து தமது சொந்த மக்களையே கொன்று குவித்து அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டு அதன் தொடராக ஈராக்கை ஆக்கிரமித்தது முதல் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான பிரசாரம் வலுவடையத் தொடங்கியது. இதன் தொடர் விளைவாக இன்றுவரை பல மத்திய கிழக்கு நாடுகளில் இரத்த ஆறு ஓடவிடப்பட்டு அதில் பல இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். இன்னும் இலட்சக்கணக்கில் முஸ்லிம்கள் வாழ்வாதாரங்களை இழந்து சொந்த பூமியிலேயே நடுத்தெருவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். மேலும் இலட்சக்கணக்கானவர்கள் திக்குத் தெரியாமல் உலக நாடுகளில் அவலத்தோடு அகதிகளாக வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் தனக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களை பதவி கவிழ்த்தி அந்தப் பிராந்தியத்தை தனக்கு ஏற்ற வகையில் மீள் வடிவமைப்புச் செய்யும் நாசகார திட்டத்தை புஷ்ஷ{ம் அவரது சகாக்களும் ஏற்கனவே வரைந்து வைத்திருந்தார்கள். அதை அமுல் செய்வதற்கான சரியான தருணமாக அவர் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

நன்கு வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் பிரசாரம், முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான செயற்பாடாக பூகோள மட்டத்தில் மிகத் திவரமாக பரவலான முறையில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. அதன் படி பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களே மறந்து போயிருந்த பல விடயங்களைத் தோண்டி எடுத்து அவற்றுக்கு புது வடிவம் கொடுத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இரத்த ஆறு ஓட விடப்பட்டு அந்தப் பிரேசத்தின் அமைதிக்கு சாவு மணி அடிக்கப்பட்டது.

பொஸ்னியா, கொசோவோ, சோமாலியா, அல்ஜீரியா, செச்னியா, இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பலஸ்தீன பிரதேசம், ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், மத்திய ஆசிய குடியரசுகள், சீனாவில் உய்கர் பிராந்தியம், இந்தியாவில் பார்பரி மஸ்ஜித் விவகாரம், காஷ்மீர் பிரச்சினை, குஜராத் நிகழ்வுகள், தாய்லாந்தின் தென் பகுதி, மியன்மாரின் றோஹிங்யா, பிலிப்பீன்ஸின் பல பிரதேசங்கள் என முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்களும் அட்டூழியங்களும் உலகின் பல பகுதிகளில் இன்றுவரை தலைவிரித்தாடுகின்றன. முஸ்லிம்கள் பல நாடுகளில் அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே கொல்லப் பட்டுள்ளனர் இன்றும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

உலக முஸ்லிம்கள் மீது கரிசணைக் காட்ட இன்று எவரும் இல்லை. சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகள் கூட ஏகாதிபத்தியவாதிகளின் பிடியில் சிக்கிய கொடுங்கோல் ஆட்சிமுறை நாடுகளாகிவிட்டன. முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தங்களிலும் பிரசாரங்களிலும் தமது எஜமானர்களோடு அவர்களும் சரிசமமாகப் பங்காற்றி வருகின்றனர்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது உலக முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சூழ்ச்சியே. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் அரசியல், இராணுவ, பொருளாதார, நிதி, சமய, சமூக. சலாசார நிலைகளையும் மூலாதாரங்களையும் வாழ்வியலையும் இலக்கு வைத்து தாக்கித் தகர்ப்பது தான் இந்த சூழ்ச்சி.

உலகின் தனிப்பெரும் வல்லரசின் இந்த சூழ்ச்சி காரணமாக சகல முஸ்லிம் நாடுகளும் தனிநபர்களும், வங்கி முறைகளும் நிதிச் செயற்பாடுகளும் ஏனைய அமைப்புக்களும் குறிப்பாக தர்ம ஸ்தாபனங்களும் சமயப் பாடசாலைகளும் பள்ளிவாசல்களும் என இஸ்லாத்தோடும் முஸ்லிம்களோடும் தொடர்புடைய எல்லாமே சந்தேகத்தோடும் வெறுப்போடும் நோக்கப்பட்டு ஈவு இரக்கமின்றி குறி வைக்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் யாவும் மூடப்பட வேண்டும் என்ற கருத்து மேலைத்தேச ஊடகங்கள் வாயிலாக எதிரொலித்தது. கிறிஸ்தவ அடிப்படைவாத நிகழ்ச்சி நிரலுக்கு இது துணையாக அமைந்தது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாமிய செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர இது துணையாக அமைந்தது. உலகின் பல நாடுகளில் குறிப்பாக மேற்குலக நாடுகளில் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் தாடி, தொப்பி, ஹிஜாப் போன்ற இஸ்லாமியத் தோற்றத்தோடு வலம் வர அச்சப்படும் நிலை Nhற்றுவிக்கப்பட்டுள்ளது-

Advertisements

Written by lankamuslim

மார்ச் 24, 2019 இல் 9:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: