Lankamuslim.org

ஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்தும் வெள்ளை அடையாளத்துவம் ( Identitarianism)

leave a comment »

qwqaqqq.jpgஎஸ்.எம்.மஸாஹிம் (இஸ்லாஹி): மீள்பதிவு  மேற்கின் (ஐரோப்பாவின்) அடையாளம் வெள்ளையரும் ,கிறிஸ்தவமும் மட்டுமே என்ற கோஷத்துடன் வெள்ளை வலதுசாரி அமைப்பான Generation identity (G.I) என்ற அமைப்பு ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்துவரும் வெள்ளை மேலாதிக்க தீவிர வலதுசாரி அமைப்பாக அடையாளப்படுத்தப்படுகின்றது , குறிப்பாக இது பிரான்ஸில் அரசியல் பலம்பெற்றுவரும் அமைப்பாக தன்னை கட்டமைத்து வருவதாக சர்வதேச ஊடக புலனாய்வு அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகின்றது , இந்த வெள்ளை மேலாதிக்க தீவிரவாத அமைப்புடன் பிரான்ஸின் பிரதான முன்னணி அரசியல் கட்சிகளில் ஒன்றான the National Front என்ற கட்சியின் தலைவரான Marine Le Pen மற்றும் அந்த கட்சியின் பிரதானிகள் மிக நெருங்கிய இரகசிய தொடர்புகளை பேணிவருவதாக அந்த ஊடக புலனாய்வு அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது . Generation identity (G.I) என்ற அமைப்பு ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் ஐரோப்பாவிலிருந்து விரட்டியடிப்பதை நோக்கமாக கொண்டு செயல்படும் வெள்ளை மேலாதிக்க கிறிஸ்தவ அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது . இந்த அமைப்பு தன்னை வன்முறையற்ற , அமைதியான அமைப்பாக வெளிப்படையில் அறிமுகப்படுத்தினாலும் அந்தரங்கத்தில் அதன் உன்மையான முகம் வன்முறைகொண்டதும் , முஸ்லிமக்ளுக்கு எதிரான வன்முறையை தூண்டும் தன்மையை கொண்டதும் என கண்டறியப்பட்டுள்ளது .

qwaqqஐரோப்பாவின் அடையாளம் வெள்ளையரும் ,கிறிஸ்தவமும் மட்டுமே இஸ்லாத்தை தடைசெய்து முஸ்லிம்களை ஐரோப்பாவில் இருந்து வெளியேற்றவேண்டும் போன்ற கோஷத்துடன் ஐரோப்பா முழுவதும் பல்வேறு வெள்ளை கிறிஸ்தவ மதவாத தீவிர வலதுசாரி அமைப்புக்கள் பலம் பெற்று வருகின்றன என்ற செய்தியை இதற்கு முன்னரும் இந்த ஆக்கத்தின் கட்டுரையாளர் பல தகவல்களின் ஊடாக வாசகர்களுடன் பகிர்ந்துள்ளார் , இந்த பின்னணியில் குறிப்பாக பிரான்ஸில் இன்று பிரதான பெரிய அரசியல் கட்சியான the National Front ஆதரவனுடன் பலம் பெற்றுவரும் அமைப்பான generation identity என்ற அமைப்பு மற்றுமொரு முக்கிய பாத்திரத்தை பெற்றுள்ளது .

Generation identity (G.I) என்ற அமைப்பின் உறுப்பினர்கள் தம்மை வெள்ளை கிறிஸ்தவர்கள் எனவும் ஐரோப்பவின் அடையாளங்களை இஸ்லாத்தில் இருந்தும் ,முஸ்லிம்களிடம் இருந்தும் பாதுகாக்க வந்த சிலுவையுத்த வீரர்களாக அடையாளப்படுத்துவதாக அல் ஜெஸிராவின் ஊடக புலனாய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Generation identity ( பரம்பரை அடையாளம் ) என்ற அமைப்பு, identitarianism ( அடையாளத்துவம்) என்ற கொள்கைத்தளத்தில் செயல்பட்டுவருகின்றது , பிரான்ஸில் வேகமாக வளர்ந்து வரும் கிறிஸ்தவ வெள்ளைமேலாதிக்க தீவிர வலதுசாரி அமைப்புக்களில் இந்த அமைப்பு முக்கியமானதா அடையப்படுத்தப்படுகின்றது , இது பிரான்ஸை தளமாகக்கொண்டு ,இத்தாலி ,ஜெர்மனி அஸ்ரியா , ஐக்கிய ராஜ்ஜியம் என பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கிளைகளை உருவாக்கி ஐரோப்பாவில் இருந்து இஸ்லாத்தையும் , முஸ்லிம்களையும் துடைத்தெறிய வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு வழிகளில் செயல்பட்டுவரும் தீவிரவாத அமைப்பாகும் .

இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு பட்ட இராணுவ பயிற்சிகளின் ஈடுபட்டுவருகின்றனர் , அண்மையில் பிரான்ஸ் எல்லையை பாதுகாக்கப்போம் என்ற கோஷத்துடன் நூற்றுக்கணக்கான அதன் பயிற்றப்பட்ட உறுப்பினர்கள் எல்லைகளில் குவிக்கப்பட்டு பிரான்ஸுக்குள் முஸ்லிம்கள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் , இவர்கள் பிரான்ஸின் மஸ்ஜித்துக்களை ஆக்கிரமிப்பதுடன் முஸ்லிம்கள் மீது வன்முறை தாக்குதல்களையும் நடாத்தியுள்ளனர் இந்த அமைப்பினர் அண்மையில் பிரடியே என்ற இடத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் ஒன்றை ஆக்கிரமித்து எமது அடையாளத்தை பாதுகாப்போம், எமது இடங்களை மீட்டு எடுப்போம் போன்ற கோஷங்களை எழுப்பியதுடன் அந்த மஸ்ஜித்தின் மீது ஏறி முஸ்லிமகளை பிரான்ஸை விட்டும் வெளியேற்றக்கோரும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பொன்றை அரசாங்கம் நடத்தவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்து பேனர்களை தொங்கவிட்டிருந்தனர்.

இது தவிர இந்த அமைப்பினர் பிரான்ஸின் பல்வேறு நகரங்களில் பயிற்சி நிலையங்களை ஆரம்பித்து இளைஞர்களை மூளைச் சலவை செய்துவருவதாகவும் முஸ்லிம்கள் மீதும் ,மஸ்ஜித்துக்கள் மீதும் தாக்குதல்கள் நடாத்த அங்கிருந்து திட்டமிடுவதாகவும் அவ்வாறு திட்டமிடப்பட்ட பல தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீதும் ,மஸ்ஜித்துக்கள் மீதும்நடாத்தப்பட்டுள்ளதாகவும் அந்த புலனாய்வு தகவல்கள் குற்றம்சாட்டுகின்றன .

Generation identity அமைப்பு இஸ்லாத்துக்கும் ,முஸ்லிம்களுக்கும் எதிரான தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது இதற்கு வானொலி, தொலைக்காட்சி , இணையத்தளங்கள் , சமூக வலைத்தலங்கள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் , இரகசிய , பகிரங்க பிரசார கூட்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றது , இந்த அமைப்பினர் நடாத்தும் இரகசிய கூட்டங்களில் இஸ்லாத்துக்கும் , முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறை நடவடிக்கைகளை மேற்றுக்கொள்வது பற்றி கலந்துரையாடிவருவதாக அந்த புலனாய்வு தகவல்கள் குற்றம்சாட்டுகின்றன . இஸ்லாதையும், முஸ்லிம்களையும் ஐரோப்பாவின் பிரதான எதிரியாக சித்தரிக்கும் பிரசாரம் இந்த அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

பொதுவாக இந்த அமைப்பினர் முழு ஐரோப்பாவை விட்டும் ஐரோப்பியர் அல்லாத அனைவரும் வெளியேற்றப்படவேண்டும் எனகோரிக்கை முன்வைத்தாலும் முஸ்லிம்களை தமது பிரதான எதிரியாக கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது அந்நியர்கள் தமது நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவதற்கு தேவையான படகுகள், விமானங்கள் எம்மால் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது மற்றும் multiculturalism , pluralism (பல்கலாச்சார ,பன்முகத்தன்மை), coexistence (இணைத்து வாழுதல்) என்பன அர்த்தமற்றவை re -immigration மீள் அனுப்பப்படுதல் மட்டுமே எமக்கு தேவையானது ,ஐரோப்பாவின் அடையாளமான வெள்ளையும் ,கிறிஸ்த்தவமும் அப்போதுதான் பாதுகாக்கப்படும் என அந்த generation identity உறுதியாக கூறுகின்றது .

இதேவேளை மறுபக்கத்தில் அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் வெள்ளைமேலாதிக்க தீவிர வலது சாரி அமைப்புக்களின் ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றது அங்கு முஸ்லிமக்ளுக்கும் ,இஸ்லாத்துக்கும் எதிரான கோஷங்கள் எழுப்படுகின்றது அங்கு முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் அண்மையில் அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 22 பெரிய நகரங்களில் இஸ்லாமிய ஷரீயாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ACT for America அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு அவற்றில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

உருவாகியுள்ள வெள்ளை மேலாதிக்கவாத அமைப்புக்கள் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான கருத்துக்களை பகிரங்கமாக போதித்துவருகின்றன என்பதுடன் இந்த அமைப்புக்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அதிகாரிகள் அரசியல்வாதிகள் நெருக்கமான உறவை கொண்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது இந்த இஸ்லாமிய வெறுப்பு அமைப்புக்களுக்கு பெருந்தொகையான நிதி நன்கொடையாக வழங்கப்படுகின்றது இவற்றுக்கு வழங்கப்படும் நீதியின் 80 சதவீதமானதை இஸ்ரேலை ஆதரிக்கும் அமைப்புகள் வழங்கியுள்ளது என அல் ஜஸீராவின் மற்றுமொரு புலனாய்வு அறிக்கை குற்றம்சாட்டியுள்ளது , அமெரிக்காவில் செயல்பட்டுவரும் பல்வேறு இனவாத அமைப்புக்களின் எண்ணிக்கை 954 என்ற எண்ணிக்கையை தாண்டியுள்ளது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது , இதை pew research center என்ற ஆய்வு அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது .

வெள்ளை கிறித்தவ மேலாதிக்கவாதம் அமெரிக்காவின் மையநீரோட்ட அரசியலுக்குள் அதிகாரபூர்வமாக நுழைந்து விட்டதை போன்று ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளிலும் மையநீரோட்ட அரசியலுக்குள் அதிகாரபூர்வமாக நுழைந்து கொள்ள கடுமையாக உழைத்துவருகின்றது .

இலங்கை உட்பட உலகம் பூராவும் இஸ்லாத்துக்கும் ,முஸ்லிம்களுக்கும் எதிரான பிரசாரத்தின் சாரம் , சாராம்சம் ஒன்றாகத்தான் உள்ளது , திட்டமிடப்பட்ட அத்தகைய நிகச்சி நிரலை முன்னெடுக்கும் முகவர்களும் ,அமைப்புகளும் , நாட்டுக்கு நாடு தேவைக்கு ஏற்ப மாறுபடுகின்றனர்

Advertisements

Written by lankamuslim

மார்ச் 16, 2019 இல் 8:05 பிப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: