Lankamuslim.org

பற்றி எரியும் கஷ்மீர் !!!! எண்ணையூற்றும் மோடி !!!

leave a comment »

qawqqaqஎஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி): காஷ்மீர் பிரச்சனை என்பது 72 ஆண்டுகளாக காஷ்மீர் மீது இந்தியாவின் ஆக்கிரமிப்பு ,இராணுவக் குவிப்பு, கைதுகள் ,சித்திரவதைகள் , கூட்டு இராணுவ பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள், உடமைகள் அழிப்பு, உரிமை மீறல்கள் என்பனவற்றை குறிக்கின்றது என்று கூறுவதுதான் மிக சரியானதாக இருக்கும் , அரசியல் ரீதியில் நில எல்லை தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானிற்கும் இடையே நிலவி வரும் நில உரிமை தொடர்பான பிரச்சனைகள் என்று கூறப்பட்டாலும் காஷ்மீர் மீது இந்தியாவின் ஆக்கிரமிப்பு என்பதுதான் காஷ்மீர் பிரச்சனைக்கான பிரதான காரணமாக அடையப்படுத்தப்படுகின்றது.

புவியியல்ரீதியில் வடக்கில் சீனா, கிழக்கில் திபெத், தெற்கில் இந்திய ஹிமாச்சல் மற்றும் பஞ்சாப் மாநிலங்கள்,மேற்கில் பாகிஸ்தான் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ள பிரதேசமே கஷ்மீராகும். இது ‘பூலோக சுவனம்’ என வர்ணிக்கப்படுகிறது. காஷ்மீர் ஆக்கிரமிப்பு தொடர்பாக 1947, 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இந்தியா , பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கு இடையே மூன்று முறை போர்கள் நிகழ்ந்துள்ளன. இந்த போர்கள் தவிர்த்து அவ்வப்போது இராணுவ மோதல்களும் நிகழ்ந்துள்ளன. காஷ்மீரின் பெரும்பான்மையான பகுதியை இந்தியா தன் நேரடி ஆக்கிரமிப்பின் கீழ் வைத்துள்ளது. இவற்றில் ஜம்மு மாவட்டத்தின் அநேக பகுதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் மாவட்டம், சியாச்சின் பனியாறு ஆகிய பகுதிகளும் அடங்கும். இதேவேளை ஆசாத் கஷ்மீர், கில்ஜித்-பல்திஸ்தான் போன்ற காஷ்மீரின் சில பகுதிகளை ஆசாத் காஷ்மீர் என்ற பெயரில் பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இதேவேளை சீனா கஷ்மீரின் கிழக்குப் பகுதியில் சில இடங்களைத் தனது ஆக்கிரமிப்பில் வைத்துள்ளது. இந்த பகுதி அக்சய் ச்சின் என்று அழைக்கப்படுகிறது. அதாவது 1,51,360 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் 63 சதவீதம் இந்தியாவின் ஆக்கிரமிப்பில் . 35 சதவீதம் பாகிஸ்தானுடனும் மற்றுமொரு பகுதி சீனாவிடமும் உள்ளது.

கஷ்மீர் மக்களின் விடுதலை போராட்டம் இந்திய , பாகிஸ்தான் என்ற நாடுகள் பிறப்பதற்கு முந்தியது 150 ஆண்டுகளுக்கு அதிகமான கால வரலாற்றை கொண்டுள்ளது ஆனால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பிரிட்டிஷ்சிடமிருந்து சுதந்திரம் அடைந்த நாளுடன் அந்த மக்களின் விடுதலை போராட்டம் புதிய கட்டத்துக்குள் நுழைந்தது புதிய வடிவங்களை ஏற்படுத்திக்கொண்டது இன்று வரை இது தீர்க்கப்படாத பெரும் பிரச்சனையாக உள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கஷ்மீர் மக்கள் தமது சுய நிர்ணய உரிமை மூலம் தமது எதிர்காலத்தை தீர்மானிக்க, இந்தியா சர்வசன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என ஐநா பாதுகாப்பு சபை 38(1948), 39(1948), 47(1948) ஆகிய சரத்துகளினூடாக அறிவித்தது. ஆனால் இந்தியா பல காரணங்களைக் கூறி அதை செய்யமறுத்துவருகின்றது இதற்கு துணையாக மேலாதிக்க வல்லரசுகள் சில உள்ளன.

1948 ஜனவரி 1ஆம் திகதி அன்றைய இந்தியப் பிரதமரான ஜவஹர்லால் நேரு கஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு எடுத்துச் சென்றார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 21-4-1948 அன்று முதல் முறையாக தீர்மானம் நிறைவேறியது. கஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அவர்களின் கருத்தை அறிந்து முடிவெடுப்பது என்று ஐநா சபையில் ஒப்பந்தமானது இந்த வாக்கெடுப்பு கஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்புகிறார்களா? , பாகிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது தனிநாடாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார்களா? என்ற மூன்று கேள்விகள் அடிப்படையில் நடத்த வேண்டும், மக்கள் தீர்ப்பை சம்பந்தப் பட்ட தரப்புக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா. அறிவித்தது ஆனால் 71ஆண்டுகள் ஆகியும் எதுவும் நடக்கவில்லைஎன்பதுதான் இன்று உருவாக்கி வரும் பிரச்சினைக்ளுக்கு பிரதான காரணமாக உள்ளது. கஷ்மீர் மக்களின் பெரும்பாலானவர்கள் தாம் பாகிஸ்தானுடன் இணைவதை விரும்புவதாத பல வேறுபட்ட முறைகளில் உணர்த்திவருவதாக ஆசிய ஐரோப்பிய ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர் இதேவேளை மக்களின் உண்மையான கருத்தை அறியவிடாது இருப்பதில் இந்தியா பெரும்பங்காற்றிவருகின்றது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கஷ்மீரில் கடைசியாக சில தினங்களுக்கு முன்னர் போராளிகள் நடத்திய தாக்குதலில் 44 இந்திய சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர் , இந்த தாக்குதலுக்கு மேல் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் பிரதான பங்காற்றியுள்ளது , காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்து கொண்டிருப்பதாகவும், இந்தத் தாக்குதலுக்காக எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி மேலும் ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறார் .இது கஷ்மீர் அப்பாவி மக்களை மேலும் அச்சமடைய செய்துள்ளது . இதை தொடர்ந்து கஷ்மீரில் இந்திய இராணுவம் தனது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியது , பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் , இருப்பவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இப்படி பல மோசமான ஒடுக்கு முறைகளை எதிர்கொள்கின்றனர் ,இதை எதிர்த்து கஷ்மீர் முழுவதும் எதிர் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றது , இதை எதிர்த்து இராணுவம் பொது மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது .

இந்தியா இரவில் பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து ஜெய்ஷ் இ முஹம்மத் போராளிகளின் இலக்குகளை தாக்குவதாக கூறி குண்டுகளை போட்டுவிட்டு வந்தது , பதிலடியாக பாகிஸ்தான் விமானங்கள் பகலில் வந்து இந்திய இலக்குகளை தாக்கியது , பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த மிக் ரக விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது ,விமானி கைது செய்யப்பட்டார் , ஆனால் பாகிஸ்தான் பிரதமர் அடுத்த நாளே உயிருடன் பிடிக்கப்பட்ட அந்த கைதியை பத்திரமாக உயிருடன் விடுவித்தார் ஆனால் இந்தியா பீஹார் மத்திய சிறைச் சாலையில் இந்திய கைதிகளினால் மிக கொடூரமாக கல்லால் அடித்துக்கொல்லப்பட்ட பாகிஸ்தான் பிரஜையின் உடலை ஒப்படைத்தது , இந்திய பிரதமர் மோடி தேர்தல் மேடைகளில் உணர்ச்சிபூர்வமாக இந்துத்துவா தேசியவாதவெறியை தூண்டிவிடுகிறார் , ” இந்த நாடு பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று மோடி சொல்கின்றார் , பாகிஸ்தான் பிரதமர் தமது எல்லைக்குள் நுழைந்து தாக்கும்போது சுட்டுவீழ்த்தப்பட்டு கைது செய்யப்பட்ட இந்திய கைதியை சமாதான சமிக்கையுடன் விடுவித்துள்ளார். “மேலும் அவர் ”கண்ணியமான அடக்கத்துடன், கருத்துவேறுபாடுகளை பேசித்தீர்ப்போம் என்ற பிம்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் ” என்கின்றனர் நோக்கர்கள் , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் , இந்தியாவை மடக்குவதற்கு முயற்சிக்காமல் நிலைமையை சமாளிக்க, பிரச்சினையில் இருந்து தீர்வு காண வழி ஒன்றை அனுமதித்து நியாயமான தலைவராக தென்பட்டார் என்று இந்தியாவில் உள்ள பல்வேறு திறனாய்வாளர்களும் கூறுகின்றனர்”

ஆனால் ”இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் இந்திய விமானி விடுதலை செய்யப்பட்டது மோடியின் வெற்றி என்ற ரீதியில் (கதை)பின்னிவிட்டனர்.புல்வாமா தாக்குதலுக்கு பின்னால் உள்ள மாபெரும் புலனாய்வு தோல்வி குறித்தும் பாகிஸ்தானால் பட்டப்பகலில் எப்படி வான் பாதுகாப்பை தாண்டி வர முடிந்தது என்றும் வெகு சிலரே கேள்வி எழுப்பியுள்ளனர்.” ஏற்கின்றது BBC செய்தியொன்று.

.

ஐ.நா. சபையில் தீர்வுகள் இன்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன நாடுகளான பலஸ்தீன் மற்றும் கஷ்மீர் ஆகிய இரண்டுமே தொடர்ந்து இருந்து வருகின்றது. ஐ.நாவின் பக்கசார்பான நிலைப்பாட்டை அல்லது அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் எடுக்கும் தீர்மானத்தில் மட்டும் ஐ.நா தங்கிருப்பதை காட்ட போதுமான ஆதாரங்களாக கஷ்மீர் மற்றும் பலஸ்தீன் நாடுகளின் ஆக்கிரமிப்பு உள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் கிழக்கு தீமோருக்கு மிக விரைவில் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த ஐ.நா. சூடானில் இருந்து தெற்கு சூடானை மிரட்டி பிரித்த ஐநா. பலஸ்தீன், கஷ்மீர் விவகாரங்களை கண்டுகொள்ளாது உள்ளது.

இந்தியா ஆக்கிரமித்துள்ள கஷ்மீரில் படுகொலை , சித்திரவதை , என்பன சர்வசாதாரண விடயமாக நீண்டகாலமாக உள்ளது . கஷ்மீரிலோ 20 கஷ்மீரிகளுக்கு ஒரு ஆக்கிரமிப்பு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் யாரை வேண்டுமானாலும் அங்கு வீடு புகுந்து கொலை செய்யலாம் , பெண்களை கூட்டு கற்பழிப்பு செய்யலாம், பாடசாலை செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம், தாயின் முன் மகளையும், மகனின் முன் தாயையும் பாலியல் வதைகள் செய்யலாம், தந்தையின் முன் மகனையும், மகளையும் அடித்து கொலை செய்யலாம். யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம், மைதானங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை அடித்து உதைத்து இழுத்து செல்லலாம். தேவையான போது கொன்று புதைக்கலாம். என்ற நிலைதான் இன்று வரை தொடர்கின்றது ஆனால் கஷ்மீர் மக்கள் தம்மை ஆக்கிரமித்து நிற்கும் இந்திய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து கடுமையாக போராடிவருகின்றனர்.

ஆக்கிரமிப்பு ,இராணுவக் குவிப்பு , கைதுகள் ,சித்திரவதைகள் , கூட்டு இராணுவ பாலியல் வன்கொடுமைகள் , படுகொலைகள், உடமைகள் அழிப்பு , உரிமை மீறல்கள் என்பனவற்றை எதிர்த்து அங்கு இளைஞர்களும் யுவதிகளும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடுகிறார்கள்; அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களைத்தான் பெரும்பாலும் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர் இதற்கு இந்தியா முகம் கொடுக்க முடியாமல் தனது அடாவடித்தனத்தையும் , படுகொலைகளையும் அரங்கேற்றிவருகின்றது என்ற வசனத்தை எத்தனை வருடங்கள் கழித்து எழுதினாலும் பொருந்தும் என்ற நிலையில் தொடரான அக்கிரமங்களை பல சதாப்பதங்களாக கஷ்மீர் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர் . ஆனால் எந்த மேற்கு நாடுகளும் இதை கண்டுகொள்வதில்லை வழமை போன்று மக்கள் இடைவிடாமல் தொடராக போராட வீதிக்கு வருகின்றனர். மீண்டும் மீண்டும் வதைக்கப்படுகினறனர், கொல்லபடுகின்றனர் ஆனால் அவர்களின் விடுதலை தீ தொடராக ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எரிந்துகொண்டிருக்கின்றது, கஷ்மீர் முழுமையாக விடுதலை பெறும்வரை எம் போராட்டம் தொடரும் என்கின்றனர் கஷ்மீர் இளைஞர்கள்

Advertisements

Written by lankamuslim

மார்ச் 4, 2019 இல் 10:56 முப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: