Lankamuslim.org

One World One Ummah

இந்தியாவின் இரு இராணுவ விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் அறிவிப்பு

leave a comment »

pakistan_air_force_8_mediumதீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக இந்தியா முன்வைக்கும் அறிவிப்பை முற்றாக மறுத்திருக்கும் பாகிஸ்தான் அரசாங்கம், தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இடங்கள் எந்தவொரு மனிதர்களும் வசிக்காத வெற்றுப் பிரதேசம் எனத் தெரிவித்துள்ளது. இதேவேளை பாகிஸ்தான் இன்று இரண்டு இந்திய இராணுவ விமானங்களை சுட்டிவீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய விமானப்படையின் 2 விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக, பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிப் கபூர் கூறியுள்ளார். இந்திய விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறு இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இரு நாடுகளின் விமானப்படையும் எல்லைதாண்டி வந்து தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து, காஷ்மீர் வான் பகுதியில் போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசரமாக தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். இதில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர், பாதுகாப்பு, நிதி அமைச்சர்கள், கூட்டுப் படைகளின் பிரதானி, இராணுவ, விமானப்படை அதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர். தீவிரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளோம் என்ற இந்தியாவின் அறிவிப்பை பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புச் சபை முற்றாக மறுத்துள்ளது. இந்தியா மீண்டும் ஒருமுறை தனது சுயதேவைக்கான, பொறுப்பற்ற, கற்பனைக் கூற்றை முன்வைத்திருப்பதாகவும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

பிராந்தியத்தின் சமாதானம் மற்றும் நிலைப்புத் தன்மையை ஆபத்துக்குள் தள்ளி தேர்தல் சூழ்நிலையில் தனது உள்ளூர் தேவையை நிறைவேற்றுவதற்காக இவ்வாறான நடவடிக்கையை முன்னெடுத்திருப்பதாகவும் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.தாக்குதல் நடத்தியதாக இந்தியாவினால் கூறப்படும் இடங்களின் நிலைமைகளை முழு உலகமும் அறிந்துகொள்ள முடியும். இந்தப் பகுதிகளுக்கு உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் அழைத்துச் செல்லப்படும் என்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.”இந்தியா வேண்டுமென்றே ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் செயற்பட்டுள்ளது. இதற்கு பதிலடி வழங்குவதற்கான காலம் மற்றும் நேரம் என்பனவற்றை பாகிஸ்தான் தீர்மானிக்கும்” என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதேவேளை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டு சில மணி நேரங்களின் பின்னர் இராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, “நாடு தற்பொழுது பாதுகாப்பானவர்களின் கைகளில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறேன்” எனக் கூறினார். எந்தவொரு தரப்பினருக்கும் நாட்டை தாரைவார்த்துக் கொடுப்பதற்கோ அல்லது வளைந்துகொடுப்பதற்கோ இடமளிக்கப்போவதில்லையென்றும் அவர் கூறியுள்ளார் .

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2019 இல் 4:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: