Lankamuslim.org

புத்தளத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டம் தொடர்கிறது

leave a comment »

qaqaqபுத்தளம் – அருவக்காட்டில், குப்பைகளைக் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளத்தில் வாழும் மூவின மக்களும் பாரிய ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்டமாக புதனன்று (13) கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

புத்தளம், கரைத்தீவு, கற்பிட்டி, முந்தல் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாலர் பாடசாலைகள், அரச, தனியார் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அரச அலுவலகங்களில் கடமைபுரியும் அரச உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டியணிந்து, பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்றனர்.

குறித்த பகுதியில், மார்ச் மாதம் 15ஆம் திகதி முதல் குப்பைகளைக் கொட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கடந்த 14ஆம் திகதி புத்தளத்திலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களையும் புனித நோன்பு நோற்குமாறும், அனைத்துப் பள்ளிவாசல்கள், அரபு மதரஸாக்கள் என்பனவற்றில் விசேட துஆ பிராத்தனைகளில் ஈடுபடுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் கிளைத் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். வெள்ளிக்கிழமை (15) இந்த எதிர்ப்புப் போராட்டத்தின் இறுதி நாளாகும்.

qaqaq

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 15, 2019 இல் 9:31 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: