Lankamuslim.org

One World One Ummah

ரமழான் கதிரோவ் ரஷியாவின் பலமான மனிதன்

leave a comment »

ramஎஸ் .எம் . மஸாஹிம் ( இஸ்லாஹி ) : ரஷியாவின்  ஆளுகையின்  கீழ் இருக்கும் செச்சினியாவில் அதன்  தலைவராக ரஷியாவின் ஜனாதிபதி பூட்டினாள் நியமிக்கப்பட்ட ரமழான் கதிரோவ் ரஷியாவில் செல்வாக்கு மிக்க தலைவராக பார்க்கப்படுகின்றார், செச்சினியாவில் மட்டுமின்றி மொஸ்கோ மற்றும்  ரஷியாவின் எந்த பகுதியிலும் தான்

நினைத்தைக் செய்யக் கூடிய சக்தி கொண்டவராக இவர் கருதப்படுகின்றார் ,

ரஷ்ய ஜனாதிபதி பூட்டினின் மிக நம்பிக்கைக்குரியவராக தன்னை வெளிப்படுத்தும் இவர் ரஷியாவின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்படுகின்றார் என்பதுடன் சிலவேளைகளில் பூட்டின்  தனக்கு தலையிடியாக ரமழான் கதிரோவை கருதும் அளவுக்கு இவரின் செல்வாக்கும் ,செயற்பாடுகளும் மொஸ்கோவில் அதிகரித்துள்ளது  என மேற்குலக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் , செச்சினியா, ரஷியாவை கட்டுப்படுத்துகின்றதா  ( Is Chechnya Taking Over Russia? ) என்று நியூ யோர்க் டைம்ஸ் போன்ற ஊடகங்கள் தலைப்பிட்டு  ரமழான் கதிரோவின் செல்வாக்கை  சுட்டிக்காட்டும் அளவுக்கு அவரின் நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றது . இவர் பூட்டினின் தீர்மானத்துக்கு அமைவாக   செச்சினிய இராணுவத்தை சிரியாவுக்கு அனுப்பி  பூட்டின் மீதான தனது விசுவாசத்தை நிரூபித்திருந்தார் .

இதேவேளை ரமழான் கதிரோவை பூட்டின் எதிர்த்தால் அல்லது கட்டுப்படுத்த முற்பட்டால் மொஸ்கோ, செச்சினியாவுடன் மூன்றாவது யுத்தத்துக்கு தயாராக இருக்கவேண்டும் என சில  அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கும்  அளவுக்கு அவரின் அதிகூடிய  பலம்  பற்றியும்  பேசப்படுகின்றது  .

இதேவேளை  செச்சினியாவின் தலைவராக ரஷியாவின் ஜனாதிபதி பூட்டினாள் நியமிக்கப்பட்ட ரமழான் கதிரோவ்வின்  இஸ்லாமிய உலகு மீதான  இவரின் செயல்பாடுகள் இரு வகையாக  பார்க்கப்படுகின்றது  ஒன்று  எகிப்து சர்வாதிகாரி அப்துல் பதாஹ் அல் சிஷியின்  துணையுடன் இவர்  ஏற்பாடு செய்யும்  இஸ்லாமிய மாநாடுகளும் அதன் தீர்மானங்களும் சூபித்துவ தரீகாக்ளை  தவிர  மற்ற சிந்தனை முகாம்களை எல்லாம் இஸ்லாத்துக்கு முரணானவையாக காட்டுவதுடன் இஸ்லாமிய உலகில் ரஷிய ஆதரவு முகாம் ஒன்றை சூபித்துவ தளத்தில் கட்டமைக்க  முற்படுபவராக  ஒரு புறம் இவர் மீது  குற்றசாட்டு முன்வைக்கப்படுகின்றது  , இவரை விமர்சனம் செய்யும் சில அறபு ஊடகவியலாளர்கள்   ரமழான் கதிரோ மொஸ்கோவின் தூண்டுதலினால்  மொஸ்கோவின் வெளிநாட்டு கொள்கைக்கு சார்பான பத்வாக்களையும் , கருத்துக்களையும் உற்பத்தி செய்யும் இஸ்லாமிய மாநாடுகளை கூட்டிவருவதாக இவர் மீது குற்றச்சாட்டுக்களை  முன்வைக்கின்றனர்  . என்பதுடன் இவர் முஸ்லிம் உம்மாவின் மத்தியில் ஸலபிஸ முகாம் , இஹ்வானி முகாம் ஆகியவற்றுக்கு எதிராக சூபித்துவ முகாம் ஒன்றை கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் உள்ளது இதேவேளை இவர் ஸலபிஸ முகாம்  மற்றும் சூபித்துவ முகாம்களை ஒன்றிணைத்து  இஹ்வானிய முகாமிற்கு எதிராக செயல்படுவதாகவும் அதற்கு துணைபோவதாகவும் இன்னும் சிலர் குற்றசாட்டுக்களை  முன்வைக்கின்றனர். சிரியாவின் சர்வாதிகாரி பஸார் அல் அசத்துக்கு ஆதரவான சிரியாவுக்கு வந்த ரஷிய படைகளில் பெரும் பகுதி செச்சினிய இராணுவத்தை கொண்டிருந்தது என்பதுடன் இவரின் பூட்டினின் முகாமை நிபந்தனையற்ற வகையில் ஆதரித்ததாக குற்றம்சாட்டப்பட்டார் என்பதுடன் ஈரானுடன் மிக நெருக்கமான உறவை பேணிவருகின்றார் ,

  மறுபுறத்தில்  மியன்மார் முஸ்லிம் இனச் சுத்திகரிப்பு விவகாரத்தில் மியன்மார் அரசுக்கு ஆதரவான  ரஷியாவின் தீர்மாணத்துக்கு மிக கடுமையான  எதிர்ப்பை ரமழான் கதிரோவ் முன்வைத்திருந்தார்  என்பதுடன்  மியன்மார் முஸ்லிம்களின்  விவகாரத்தில் துருக்கி ஜனாதிபதி அர்தோகானின் நிலைப்பாட்டை பாராட்டியுமிருந்தார் , மியன்மார் முஸ்லிமகளின் விடையத்தில் ரஷியா தவறான கொள்கையை கொண்டுள்ளது என குற்றசாட்டை முவைத்ததுடன் பல இலட்சம் மக்களை திரட்டி மியன்மார் முஸ்லிம் இனச் சுத்திகரிப்புக்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன் ரஷியாவின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்ப்பதாகவும் அறிவித்திருந்தார் இதேவேளை  துருக்கி வெளிநாட்டு அமைச்சு ரமழான் கதிரோவுடன் நெருக்கமான  உறவை வலுப்படுத்தி வருவதாக  தெரிவிக்கப்படுகின்றது

ரமழான் கதிரோவின் நடவடிக்கைகளை  விளங்குவதற்கு  செச்சினியாவின்   ( கவ்காஸஸ்)  வரலாற்று பின்னணியை சுருக்மாக பார்க்கவேண்டும்  செச்சன் என்பது ரஷ்யாவினால் சூட்டப்பட்ட பெயர். 18ம் நூற்றாண்டில் 1858 இல் இஸ்லாமிய அரசு ஒன்றை நிறுவும் நோக்குடன்  இமாம் ஷாமில் தலைமையிலான உள்நாட்டு மக்களுக்கும் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையிலான யுத்தத்தின்போது யுத்தம் தொடங்கிய கிராமம் அல்லது பரந்த காட்டு பகுதி ஒன்றே  செச்சன் என அழைக்கப்பட்டது பின்னர் அது முழு     கவ்காஸஸை  குறிக்க பயன்படுத்தப்பட்டது , 1858 தொடக்கம்  அடக் கு முறைகளை சந்தித்த இந்த  கவ்காஸஸ் மக்கள் 1991ம் ஆண்டில் கம்யூனிஸ  சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியை தொடர்ந்து   சுதந்திர   கவ்காஸஸ் (செச்னியா) என்ற இலக்கை  அடைய  முயன்றனர்  ஆனால் மேலாதிக்க சிந்தனை கொண்ட  போரிஸின் மற்றும் விளாடிமிர் பூட்டின் மற்றும் டிமிட்ரி மெட்வடே ஆகிய ரஷிய தலைவர்களின் ஆக்கிரமிப்புக் கொள்கை அதற்குத் தடைகளை போட்டன

கவ்காஸஸின்   சுதந்திரப் பிரகடனத்தை அதன் முனைப்புகளை ரஷ்யா கொடூரமாக ஒடுக்கியது . தனது ஆக்கிரமிப்பு படைகளை செச்னியாவுக்கு ஏவிவிட்டது 1994-தொடக்கம் 1996 வரை . ரஷ்யா மிக கொடூரமாக யுத்தம் ஒன்றை நடத்தியது ஆனால் ஷாமில் பஷயோ , அஸ்லான் மாஸ்ஹடோவ் போன்ற தளபதிகளினால் வழிநடாத்தப்பட்ட  போராளி அமைப்புக்கள் ரஷியாவுக்கு எதிராக போராடி வெற்றிகளை குவித்தன , இந்த  போரில் ரஷ்யாவால் எதையும் சாதிக்க முடியவில்லை குறுகிய காலத்தில் அதிகமான தனது இராணுவத்தை  இழந்தது பொறிஸ் யெல்ஸ்டினின் அரசாங்ம் யுத்த நிறுத்தம் செய்து ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது,  இதன்மூலம்   செச்சினியாவில் அமைதி திரும்பியது   1997 இல் தேர்தல்கள் நடத்தபட்டன இதில் அஸ்லான் மாஸ்ஹடோவ், ஷாமில் பஷயோ ஆகிய விடுதலைப் போராட்ட அமைப்புக்களின் தளபதிகள்  போட்டியிட்டனர் அஸ்லான் மாஸ்ஹடோவ் ஜனாதிபதியாக தெரிவு செய்பட்டார் ஷாமில் பஷயோவ் உதவி பிரதமர் ஆனார் அபிவிருத்தி நோக்கி செச்னியா என்ற இலக்குடன் முழுக்க அபிவிருத்தி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டது.

ஆனால் ரஷ்யா உளவுத்துறை FSB ( Federal Security Service of the Russian Federation ) பயங்கரவாதத்தை ஏவிவிடும் திட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்தியது  உளவு துறை தமது தோல்வியை வெற்றியாக மாற்றுவற்கு தேவையான வாய்ப்பாக இந்த காலப்பகுதியை பயன்படுத்தியது    உளவு துறையின் ஆய்வின்படி ரஷ்ய அதிபர் பொறிஸ் யெல்ஸ்டினின் அதிபராக இருக்க தகுதியற்றவர் இவரால் நாட்டின் தேசிய மேலாதிக்க நலன்களை பேன முடியாது என்ற முடிவுக்கு வந்தது,  விளாடிமி்ர் பூட்டின்  நாட்டை ஆள தகுதியானவரான கருதப்பட்டார் ,  பின்னர் பல நாசவேலைகளையும், கொலைகளையும் அரங்கேற்றியதன் மூலம் விளாடிமி்ர் பூட்டின் அதிகாரத்துக்கு வருவதற்கான சந்தர்ப்பத்தை   FSB-வெற்றிகரமான உருவாகியது , இதேவேளை  செச்சினிய போராளிகளின் ஒன்றுமையை உடைத்து     போராளி இயக்கங்களில் இருந்து காதிரிய்யா தரீக்கா, மற்றும் நக்க்ஷபந்தியா  தரீக்கா சார்பு போராளிகளை பிரிக்க முயன்றனர் அதில் ஆரம்பத்தில் தேல்வி கண்டாலும் பின்னர் பெரும் வெற்றி பெற்றனர்.

FSB யின் வெற்றிகரமான நடவடிக்கைகளின் பின்னர் 1999ல் மீண்டும் பூட்டினின் இராணுவம்  செச்னியாவை ஆக்கிரமித்தது  இஸ்லாமிய போராளிகள்  மத்தியில் FSB யினால் திட்டமிடப்பட்டது போன்று  பிளவு தோன்றியது இதில் ரமழான் கதிர்ரோவின் தந்தையான  அஹமத் கதிய்ரோவ் என்பவர் முக்கியமானவர் இவர் தனது சூபித்துவ போராளிகளுடன் ரஷ்யாவுக்கு சார்பாக ஸலபி போராளிகளை எதிர்த்து போரிட்டார் அப்போது இந்த செயல் பாரிய துரோகமாக பார்க்கப்பட்டது இதில் ரஷ்யா வெற்றிபெற்றது பூட்டினின்  திட்டப்படி அஹமத் கதிய்ரோவ் தலைமையில்  செச்சினியாவில் ரஷ்யா ஆட்சி மீண்டும் உருவாக்கபட்டது

ஆனால் அஹமத்  கதிர்ரோ 2004 ஆம் ஆண்டு  ஸலபி போராளிகளின் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார் இதன் பின்னர்  2007 இல்  அஹமத்  கதிர்ரோவின் மகனான  ரமழான்  கதிர்ரோ பூட்டினாள் நியமிக்கப்பட்டார்  இவர்  ரஷ்யாவில் அதிஉயர்விருதான Hero of the Russian Federation என்ற விருது கொடுக்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்  .

பூட்டின் மற்றும் ரமழான் கதிரோ ஆகிய  இருவரையும் பற்றி குறிப்பிடும் ஆய்வாளர்கள் சிலர் இவர்கள் ஒருவருக்கொருவர் மிக நெருக்கமானவர்கள் போன்று இருவரும் ஒத்த பண்புகளையும் ,பழக்கங்களையும் கொண்டவர்கள் என கூறுகின்றனர் . பூட்டின்  ஜுடோ  கலையில் சாம்பியன், ரமழான் கதிரோ பல்வேறு தற்காப்பு கலைகளில் வல்லவர் இருவரும் யுத்த கருவிகளுக்கு  முன்னாலும்  ,புலி போன்ற பயங்கர மிருகங்களுடன்  படங்களை எடுக்கவும் குதிரை சவாரி,  மிருக வேட்டை ஆகியவற்றை விரும்புபவர்களாகவும் உள்ளனர் இதேவேளை இவர்கள்  தன்னின சேர்க்கையாளர்களை  கடுமையாக வெறுப்பவர்களாகவும்  இருகின்றார்கள்  இதுபோன்று இருவரும் சர்வாதிகாரத்தையும் , அடக்குமுறையையும் கையாளுகின்றார்கள் , இவர்கள்  தமது இராணுவம் மற்றும் பாதுகாப்பு தரப்பின் மீதுதான  தம் இருப்பு தங்கியுள்ளதாக நம்புகிறார்கள்   , பூட்டினின் நிர்வாகத்தின் கீழ் ரஷியாவின் அரச ஊழியர்களில்  மூன்றில் ஒரு பங்கிற்கு அதிகமானவர்கள் பாதுகாப்பு தரப்பை சார்ந்தவர்கள் அல்லது FSB என்ற உளவு பிரிவை சார்ந்தவர்கள் என அவர்கள் கூறுகின்றனர் ,மேலும் ரமழான் கதிரோ செச்சினியாவை தனது பாதுகாப்பு தரப்பை பயன்படுத்தி தனது இரும்பு பிடிக்குள் வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர் . பூட்டின்  உளவு அமைப்பில் ( KGB ) யில் முக்கிய அதிகாரியாக செயல்பட்டவர் ,  ரமழான் கதிரோ ஆரம்பத்தில் ரஷியாவுக்கு எதிராக போராடிய கவ்காசஸ்  இஸ்லாமிய போராளிகள் அமைப்பில் வளர்தவர் .

சில அறபு ஊடகவியலாளர்கள்   குறிப்பிடுவது போன்று ரமழான் கதிரோ மொஸ்கோவின் தூண்டுதலினால்  மொஸ்கோவின் வெளிநாட்டு கொள்கைக்கு சார்பான பத்வாக்களையும் , கருத்துக்களையும் உற்பத்தி செய்யும் இஸ்லாமிய மாநாடுகளை கூட்டிவருவதான  குற்றச்சாட்டுக்களை  முழுமையாக மறுக்கமுடியாது என்றாலும் ரமழான் கதிரோவ் மேற்கு ஆதரவு அறபு உலக  தலைவர்களுடன்  ஒப்பிடும்போது அவர்களுடன் சமதரத்தில் உள்ளவர்தான், அவர்கள் மேற்கை கண்மூடித்தனமாக தமது சொந்த நலன்களுக்காக  ஆதரிக்கின்றனர் , இவர் ரஷியாவை தமது சொந்த நலன்களுக்காகஆதரிக்கின்றார் .
இந்த கட்டுரை விடிவெள்ளி பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 4, 2019 இல் 9:00 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: