Lankamuslim.org

One World One Ummah

‘பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ‘

leave a comment »

தொல்பொருள்  கட்டளைத் திருத்த சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள இடங்களுக்கு, பாதிப்பை அல்லது இடையூறை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தொல்பொருள் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் ஆலோசனையின் படியே, இந்த சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகத் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கடந்த நாள்களில் புத்தர் சிலைக்கு, சேதம் விளைத்தவர்களென அடையாளங்காணப்பட்ட சந்தேகநபர்கள் 11 பேரை, மாவனெல்ல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) ஆஜர்படுத்தியதாகவும் மேலும் திணைக்களத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில்  பல மஸ்ஜித்துக்கள் தாக்கப்பட்டும் எரியூட்டப்பட்டும் , இஸ்லாத்துக்கும் , அல் குர்ஆனுக்கு இழுக்கு ஏற்றப்படுத்தும் விதமாக கருத்துக்களை வெளியிட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது மர்மமாகவே  உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்துரைத்துள்ளனர்

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 30, 2019 இல் 9:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: