Lankamuslim.org

One World One Ummah

தப்பிச்சென்ற ஆவா குழுவை சேர்ந்த மூவர் கைது

leave a comment »

qawqwqaqwqஅடையாள அணிவகுப்பிற்காக நாளை வரை விளக்கமறியல்,பல்வேறு குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய ‘ஆவா’ என அழைக்கப்படும் வாள்வெட்டு குழுவைச் சேர்ந்த மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாச்சி அம்மன் கோவிலுக்கு அருகில், இருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு காயம் ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்றைய தினம் (27) யாழ்ப்பாண குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட மூவரும் 19, 23, 25 வயதுடைய யாழ். மானிப்பாயை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து, சந்தேகநபர்கள் இன்றைய தினம் (27) யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அடையாள அணிவகுப்பின் பொருட்டு அவர்கள் நாளை (28) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.-TK

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 27, 2019 இல் 11:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: