Lankamuslim.org

அந்த ஏழு வாலிபர்களின் நிலை

leave a comment »

qaqzaqaqகடந்த சில நாட்களாக பெரும்பான்மை ஊடகங்களையும் சமூக ஊடகங்களையும் வியாபித்து -பலராலும் விமர்சிக்கப்பட்டு நிற்கும் விடயமாக அநுராதபுர -ஹொரவப்பொத்தானையில் காணப்பட்ட புராதன “சைத்திய ” வின் மேலே 7 பொறியியல் பீட மாணவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படவிவகாரம் அமைந்திருப்பதை காணலாம்…

உண்மையில் இது தவறான விடயம்தான், இந்நிலையில் குறித்த இளைஞர்களின் இந்த புகைப்படம் மீதான விமர்சனத்தை பெரும்பான்மையினருக்கு புறம்பாக அதன் பின்புலம் , பின்னனி , நடைபெற்ற காலம் என எதைப்பற்றியும் ஒரு தெளிவான விளக்கம் இல்லாமல் நம்மவர்களே காரசாரமான விமர்சனங்களை
முன்வைப்பதை காணலாம்….

குறித்த புகைப்படம் கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி குறித்த இளைஞர்களால் அதாவது தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட இறுதியாண்டு மாணவர்களால் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டது, சரியாக ஒரு வருடம் கடந்த நிலையில் இன்று பெறும் சர்ச்சைக்குரியதாக மாற்றப்பட்டுள்ளதென்றால் , இதன் பின்புலம் பற்றி தெளிவாக ஆராயப்பட வேண்டுமே ஒழிய நாமும் அவர்கள் மீது விமர்சனக் கணைகளை அள்ளி வீசி , மேலும் மேலும் பிரச்சனைக்குள் சிக்கி இருக்கும் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி நோவினை படுத்த முற்படக் கூடாது.

உண்மையில் சுற்றுலாத்தளமாக அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட குறித்த பகுதி பற்றி அதன்புனிதத்துவம் பற்றி எவ்வித அறிவுருத்தல்களுமே வழங்கப்பட்டிருக்கவில்லை, குறைந்தது இது ஒரு புனித தளம் மேலே ஏறுவது தடை செய்யப்பட்டதான எதுவித விளம்பர பதாகைளோ, ஏன் ஒருதொல் பொருள் தினைக்களத்தின ஊழியர் கூட அப்போது கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கவில்லை ,ஒரு புனித பகுதியாக அவர்கள் இதை ஏலவே அறிந்திருந்தால் , அல்லது அவர்களுக்கு யாரும்சொல்லி இருந்தால் நிச்சயம் இதை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள், சரியாக ஒரு வருடம்கழித்து இதற்காக தண்டனையை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்காது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஏழு பேரும் -இறுதியாண்டு பொறியியல் பீட பரீட்சையைவெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தங்களதும் தங்களின் பெற்றோரதும் கனவுகளை நிறைவேற்றிஇறுதி இலக்கினை எட்டி நிற்கும் தருணத்தில் பேரிடியாக குறித்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த இளைஞர்கள் இந்த நாட்டை கட்டி எழுப்ப தங்களை அர்ப்பணிக்க தயாராகும் ஏழுபொறியியலாளர்களாக பார்க்கப்பட வேண்டுமே ஒழிய – இனத்தின் பெயரால் ஓரங்கட்டப்பட இடமளிக்ககூடாது.

தெரியாத்தனமாக இன்று சிக்கலில் மாட்டி உள்ள இவர்களை மீட்டெடுப்பதானது அனைவர் மீதும் ஒருதார்மீக பொறுப்பிற்கு ஒப்பானது, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் அதற்கு மாற்றுக்கருத்து கிடையாது , ஆனால் குற்றத்தின் பாரதூரம் , விளைவு, ஏன் இது குற்றம் என தெரியாமல் இன்றுசட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள இவர்களுக்காக நிச்சயம் கருணை காட்டப்படல் வேண்டும்.

உரிய பெரும்பான்மை தரப்பினரை அனுகி அவர்களின் மன்னிப்பின் ஊடாக மீட்டெடுக்க போதுமான ஒத்துழைப்பினை எமது அரசியல் தரப்பினரும் சமூக தலைவர்களும் , சிவில் அமைப்புக்களும்மேற்கொள்ள முன்வர வேண்டும்,

தெரியாத்தனமாக செய்த தவருக்காக மன்னிப்புக் கோர ஏற்பாடு செய்து , பௌத்த
உயர்மட்டத்தினருக்கு நிலைமைகளை புரிய வைத்து இன்று சட்டத்தின் பிடியில் உள்ள அவர்களைமீட்டெடுக்க அனைவரும் தங்களது முழுமையான பங்களிப்பை ஆற்ற முன்வர வேண்டும்.

நடுநிலையாக யதார்த்தத்தை உணரக்கூடியதான பெரும்பான்மை சமூக ஆர்வலர்களை அடையாளம் கண்டு- அவர்களுக்கு இவர்களது நிலைமையை எடுத்துச் சொல்லி -அவர்களின் அழுத்தங்கள் மூலமாகஇவர்கள் மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிப்பதற்கான வழி வகைகளை இயலுமானவர்கள் செய்ய வேண்டும் …

நேரடியாக பொதுத்தளத்திலே மத நிந்தனைகளிலும் , இன வெறுப்பு பிரச்சாரத்திலும் , மதஸ்தலங்கள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுக்கவும் , சிறைத்தண்டனை பெறும் அவ்வாறானவர்களை விடுவிக்கவும் பிரயத்தனங்கள் முன் கொண்டு செல்லப்படுகின்றநிலையில் நம் சமூகத்தின் 7 பொறியியலாளர்கள் இன்று தங்களின் அறியாமையால் பிரச்சனையைஎதிர் கொள்கிறார்கள், இவர்களுக்காக துளியேனும் எமது அக்கறையை வெளிப்படுத்த வேண்டும், நடந்த சம்பவம் பற்றியும் அவர்களது அறியாத்தனம் பற்றியும் விமர்சித்துக் கொண்டுவியாக்கியானம் வழங்கிக் கொண்டிருப்பதில் ஆன பலன் ஏதும் இல்லை,

யாரோ ஏழு பேர், எப்படிப் போனால் எமக்கென்ன என்ற மனோ நிலையில் இருந்து நாம் மாறுபடவேண்டும், நம் வீட்டிலும் இனத்தை காரணம் காட்டி எங்கோ , என்றோ ஒரு பிரச்சனை கதவைத்தட்டாது என்ற எந்த உத்தரவாதமும் இல்லை….

ஆக மனிதாபிமானத்துடடன் அந்த ஏழு பேரின் விடுதலைக்காகவும் எம்மால் முடியுமானபங்களிப்பை வழங்குவது தொடர்பில் சிந்திப்போம்…அந்த 7 பொறியியல் தம்பி மாருக்காகவும் , நிலைகுலைந்து கண்ணீரோடு நிற்கும் அவர்களதுஉறவுகளுக்காகவும் – விரைவில் இந்த துயரிலிருந்து மீண்டு வர பிரார்த்திப்போம்.

-Asmy-

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 25, 2019 இல் 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: