Lankamuslim.org

One World One Ummah

துறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவு

leave a comment »

qazaqqaqwqaகொழும்பு துறைமுக நகர நிர்மாணப் பணிகளுக்கான கடலை நிரப்பும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்காக 269 ஹெக்டயருக்கு மண் நிரப்பப் பட்டுள்ளது. இதனை சம்பிரதாயபூர்வமாக அறிவிப்பதற்கான நிகழ்வு துறைமுக நகரில் இடம்பெற்றது. பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

துறைமுக நகரத்திற்காக கடலை நிரப்பும் நடவடிக்கையின் காரணமாக, சில பிரதேசங்களில் கடற்கரைகள் அரிப்புக்குள்ளாவதாக சிலரால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க இதன் போது தெரிவித்துள்ளார். துறைமுக நகரத்தின் நிர்மாணப்பணிகளை முன்னெடுத்துவரும் சீன நிறுவனத்தின் ஊடாக குறித்த பகுதிகளை புனரமைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

துறைமுக நகரத் திட்டம் கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கொழும்பு இலகு ரயில் திட்டம் ஆகியவற்றோடு இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை துறைமுக நகரின் எதிர்கால அபிவிருத்திகளை விரைவாக மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக சீனத் தூதுவர் Cheng Xueyunan இந்நிகழ்வில் தெரிவித்துள்ளார்.-TK

qazaqqaqwqa

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 16, 2019 இல் 8:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: