Lankamuslim.org

One World One Ummah

ஹலால் தொடக்கம் ஸுன்னத் வரை – ஐரோப்பிய முஸ்லிம்களையும் யூதர்களையும் இணைக்கும் புள்ளி

leave a comment »

qazaqaqazaqஐரோப்பாவின் முஸ்லிம்களையும் , யூதர்களும் இதற்கு முன் ஒன்று சேராமல் இருந்திருக்கலாம். ஆனால் சமீப காலமாக தங்களுடைய மத நம்பிக்கை சுதந்திரத்தைப் பாதிக்கும் சட்டங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். என மேற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெல்ஜியம் நாட்டில் ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ள சட்டம் சமீபத்திய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளைக் கொல்வதைப் பாதிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. ‘கோஷெர்’ மற்றும் ‘ஹலால்’ மாமிசத்துக்கு உரிய நடைமுறையை இது பாதிக்கிறது.

வலதுசாரி தேசியவாத கட்சிகள் இதுபோன்ற முயற்சிகளைப் பொதுவாக ஆதரிக்கின்றன என்ற உண்மை, இந்த சர்ச்சைகளுக்கு உள்ள அரசியல் கண்ணோட்டத்தைச் சேர்க்கிறது விலங்குகள் உரிமை இயக்கத்தினர் நீண்டகாலமாகவே இந்தச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் சுதந்திரத்துக்கான செயல் திட்டம் என்ற பெயரில் இது யூதர்களுக்கு விரோதமானது, முஸ்லிம்களுக்கும் விரோதமானது என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனியில் நாஜி ஆட்சிக் காலத்தில் விலங்குகளை உணர்வற்ற நிலைக்கு கொண்டு செல்லாமல் வெட்டக் கூடாது என்று தடை விதித்து 1933ல் இதேபோன்ற விவாதத்தை உருவாக்கினார் அடால்ஃப் ஹிட்லர். இதேவேளைகடந்த ஆண்டு ஐஸ்லாந்து நாட்டில் மருத்துவக் காரணங்களுக்காக அல்லாமல் சுன்னத் செய்வதற்குத் தடை செய்யும் மசோதா முன்மொழியப்பட்டு, கடும் எதிர்ப்பு காரணமாக ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தில் கைவிடப்பட்டது. யூதர்களும், முஸ்லிம்களும் சுன்னத் செய்து கொள்கிறார்கள்.

நான்கு வயது இஸ்லாமிய சிறுவனின் உடலில் நிரந்தரமான மாற்றத்தை ஏற்படுத்துவது, அவனுடைய மத நம்பிக்கைகளை முடிவு செய்யும் குழந்தைகள் உரிமையைப் பாதிக்கும் செயல் என்று நீதிமன்றம் கூறியதையடுத்து 2012ல் ஜெர்மனியில் சிறிது காலம் சுன்னத் தடை செய்யப்பட்டிருந்தது.”மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முடியாத அளவுக்கு உடல் அமைப்பில் கடுமையான மாற்றம் செய்வதை பெற்றோருடைய உரிமைகளோ அல்லது மத சுதந்திரமோ நியாயப்படுத்த முடியாது,” என்று நீதிமன்றம் கூறியிருந்தது.

அந்தத் தீர்ப்பு ஆறு மாதங்களில் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அந்தச் சட்டம் தங்களுடைய நம்பிக்கைகளின்படியான செயல்பாட்டுக்குத் தடை விதிப்பதாக இருந்திருக்கும் என்று முஸ்லிம்களும் , யூதர்களும் வாதங்களை முன்வைத்தனர்.

விலங்குகளைப் பாதுகாப்பதைவிட, சில மதக் குழுக்களுக்கு எதிராக களங்கம் ஏற்படுத்தும் மறைமுகமான முயற்சிதான் இந்தத் தடை உத்தரவு நடவடிக்கை என்று இஸ்லாமிய அமைப்புகளின் வழக்கறிஞர் ஜூஸ் ரோயட்ஸ், டைம்ஸ் இதழுக்குக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 13, 2019 இல் 9:50 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: