Lankamuslim.org

One World One Ummah

வாழ்க இலங்கையின் ஜனநாயகம்

leave a comment »

QAZAQFayas Muhammadh :சதாகத்துல்லாஹ் மௌலவி. சில்வெஸ்டர்ஸ் கல்லூரி ஆசிரியராக அறிமுகமானவர். திகணையில் ஆரம்பித்து கண்டியை சூழ நடந்த இனவெறியாட்டத்தின் போது கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று முன்தினம் காலமானார். ஒரு ஆசிரியர், சமூக ஆர்வலர், மார்க்க அறிஞர் என பன்முகத்தன்மை கொண்டவராக வாழ்ந்தவர். கண்டி மாவட்ட ஜாமியதுல் உலமாவின் உபதலைவராக இருந்தார். அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொள்ளட்டும்.

ஒரு தனிநபருக்கும், 4 பேர் கொண்ட குழுவுக்கும் ஏற்பட்ட பிணக்கில் ஒருவர் மரணித்தமையே பிரச்சினைக்கு காரணம் என சொல்லப்படுகின்ற நிலையில், இவர் கலவரத்தில் கொல்லப்பட்டுள்ளார். அந்த கொல்லப்பட்ட ஒருநபர் பிரதேசவாசிகள் தவிர அறியப்படாதவர். இவர் கண்டியில் பிரபலமாக அறியப்பட்டவர். மார்க்க அறிஞர்.

இதுவே, கண்டி மாவட்ட பிக்குகளின் சம்மேள உபதலைவர் ஒருவர் கொல்லப்பட்டிருந்தால் நாட்டில் எத்தகு நிலைமை உருவாகியிருக்கும். ஜனாதிபதி முதல் சாதாரண குடிமகன் வரை இரங்கல் தெரிவிக்க ஊடகங்கள் போதாமல் இருந்திருக்கும். முஸ்லிம் சமூக அரசியல் தலைவர்கள், ஓலமாக்களின் அறிக்கை பிறந்திருக்கும். சிலவேளை மரிக்காகர் போன்றவர்கள் இறந்த பிக்குவிற்கு பதிலாக எம் சமூகத்தில் இருந்து பல இளைஞர்கள் பிக்குகளாக வேண்டும் என்று அறிக்கை விட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்று சதாகத்துல்லாஹ் மெளலவிக்காக எந்தவொரு ஊடகமோ, பெரும்பான்மையின தலைவர்களோ வாய் திறந்ததாக இல்லை. குறைந்த பட்சம் இவ்வாறான ஒரு நிகழ்வு நடந்ததாக பெரும்பான்மையின நடுநிலையானவர்களுக்கு கூட தெரியாமல் மறைக்கப்பட்டாகிவிட்டது. தாக்குத்தாலுடன் தொடர்புடைய யாரும் கண்டுபிடிக்கப்படவோ, விசாரணை செய்யப்படவோ இல்லை என்பது இலங்கையின் சட்டத்தின் ஆட்சியின் நிர்வாணம்.

#வாழ்க இலங்கையின் ஜனநாயகம்#

முகநூல் பக்கத்தில் இருந்து

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 28, 2018 இல் 2:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: