Lankamuslim.org

One World One Ummah

மாவனெல்லை: சமய நிந்தனை, கைது , கண்டனம் !!

leave a comment »

qaqazaaqபகுதியில் நேற்று முன் தினம் புத்தர் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெரும்பான்மையினத்தவர்கள், சிறுபான்மை இன ஒருவரை பிடித்து பொலிஸில் ஒப்படைக்கப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாலை நான்கு மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை (அஸ்பர் என்பவரை) பிரதேச வாசிகள் பிடித்த போது ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகவும் மற்றவரை அப்பிரதேச வாசிகள் பொலிசில் ஒப்படைத்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிங்கள ஊடக செய்திகள் அவ்வாறு குறிப்பிட்டுள்ள போதும்,

*குறித்த வாலிபர்கள் அதிகாலை நான்கு மணியளவில் அவ்வழியாக வெலம்படை நோக்கி சென்றதாக அவர்கள் கூறியுள்ளதாகவும் தங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறியுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.*

மாவனல்லை ரன்திவல,மகதேகம ஆகிய பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இரு புத்தர் சிலைகளே விசமிகளால் சேதமாக்கப்பட்டிருந்தன. மாவனல்லையை அண்மித்த சில இடங்களில் விசேட அதிரடிப்படை பந்தோபஸ்து போடப்பட்டு உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபடுகிறது.-madawala news

ஊடக அறிக்கை

சமய நிந்தனைக்கான செயற்பாடுகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் பௌத்தர்கள் வழிபடக்கூடிய புத்தரின் சிலையை சேதம் செய்தமை இனங்கள் மத்தியிலுள்ள சௌஜன்யத்தையும், புரிந்துணர்வுகளையும் இல்லாமல் செய்து விடும் செயலாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காண்கிறது. இவ்வாறு சிலைகளை சேதம் செய்வதோ, அல்லது அவற்றை இழிவு படுத்துவதோ இஸ்லாமிய போதனைகளல்ல என்பதைக் கூறி வைக்க
விரும்புகின்றது.

பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்நாட்டில் முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் பேதமின்றி ஐக்கியமாகவும், புரிந்துணர்வுடனும் தத்தமது சமயப்போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்து வரும் இத்தருணத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட
காரணமாக அமைந்து விடும்.

எனவே இவ்விடயத்தை யார் மேற்கொண்டிருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்குரிய தீர்ப்பை உரிய முறையில் வழங்கி இத்தகைய செயல்கள் இனிவரும் காலங்களில் நடை பெறாத வண்ணம் இருக்க ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறும், இதனை காரணமாக வைத்து வன்முறையை தூண்டுவதை தடுத்து நிறுத்துமாறும் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர் ஆகியோரை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.

*அஷ்-ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்*
*செயலாளர் அகில இலங்கை ஜமஇய்யத்துல் உலமா*

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 26, 2018 இல் 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: