Lankamuslim.org

One World One Ummah

மனைவிக்காக வாங்கிய நோக்கியா போனை வழங்க 18 ஆண்டுகள் காத்திருந்த கணவர்!

leave a comment »

qaqzaqazaqபாத்திமா ஸனா : 2000ஆம் ஆண்டு வெளியான நோக்கியா 3310 மாடல் மொபைல் ஃபோன் இப்போது கிடைத்து என்ன பயன்? பிரத்யேகமாக அதில் ஒரு விசேஷமும் கிடையாது.ஆனால், காஸாவில் இமாத் அல் ஸஃப்தாவிக்கு இது வெறும் ஒரு மொபைல் ஃபோன் அல்ல.தனது பிரியத்திற்குரிய மனைவி மீதான அன்பின் சின்னமாகும்.காஸாவில் தனது மனைவிக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக துபாயில் இருந்து 2000ஆம் ஆண்டு வாங்கிய அந்த ஃபோனை, தனது மனைவிக்கு வழங்கும் நாளை எதிர்பார்த்து கடந்த 18 ஆண்டுகளாக இஸ்ரேல் சிறையில் காத்திருந்தார் ஸஃப்தாவி.

அவ்வாறு நீண்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு ஸஃப்தாவி சிறையிலிருந்து விடுதலையானார் அவருடன் அவரது மொபைல் ஃபோனுக்கும் விடுதலை கிடைத்தது.இன்றும் அந்த மொபைல் ஃபோனை அரிய பொருளாக பாதுகாத்து வந்த ஸஃப்தாவி, அதனை தனது மனைவிக்கு வழங்கியபோது மகிழ்ச்சியும், கவலையும் நிறைந்த பரவசத்தில் இருவரும் ஆழ்ந்தனர்.

2000-ஆம் ஆண்டு துபாயிலிருந்து காஸாவிற்கு திரும்பும்போது ரஃபா எல்லையில் வைத்து ஸஃப்தாவியை இஸ்ரேல் ராணுவம் கைதுச் செய்து சிறையிலடைத்தது. அவரிடமிருந்த பொருட்களையும் ராணுவம் கைப்பற்றியது.ஒரு நாள் தனது மனைவிக்காக வாங்கிய பரிசினை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் சிறையில் நாட்களை கழித்தார் அவர்.கடந்த 12-ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையானார் அவரிடமிருந்து கைப்பற்றிய பொருட்களை சிறை அதிகாரிகள் திருப்பி அளித்தனர்.தனது அம்மாவுக்கு, தந்தை வழங்கிய பரிசினை மகள் தான் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

qaqzaqazaq

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 26, 2018 இல் 5:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: