Lankamuslim.org

One World One Ummah

பொலிசார் படுகொலை : புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் கைது

leave a comment »

Police 2_CIமட்டக்களப்பு வவுணதீவில் நேற்றைய தினம் (30) இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் இன்று (01) காலை சரணடைந்துள்ளார்.

மாவீரர் நாள் நினைவேந்தல் செய்வதற்கு பொலிசார் இடையூறு வழங்கியதனால் பழிவாங்குவதற்காக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் என கருதி  விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், குறித்த நபர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நேற்றையதினம் (30) மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழு தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சந்தேகநபருடன் பணியாற்றியவர்களை கைது செய்ய பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், அவருடன் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவரும் பணியாற்றியமை தெரியவந்த நிலையில், நேற்றையதினம் (30) அவரை கைது செய்வதற்காக கிளிநொச்சிப் பொலிஸ் விசேட குழு ஒன்று தேடுதல் மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் அவர் இன்று (01) காலை கிளிநொச்சிப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சரணடைந்தவர், வட்டக்கச்சிப் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான இராசநாயகம் சர்வானந்தன் (48) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள்  உறுப்பினர் என பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், வவுணதீவுக்குச் சென்றுள்ள குற்றவியல் விசாரணைத் திணைக்கள (CID) அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, CID யினர் மேற்கொண்டுள்ளனர்.

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 1, 2018 இல் 9:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: