Lankamuslim.org

One World One Ummah

இந்த அசிங்கத்தை வெளிப்படுத்திய வண்ணம் உலகின் கண்களுக்கு முன்னால் அமர்ந்திருப்பது வெட்கமாக இல்லையா?

leave a comment »

srilanka_parliament-8உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்: மன்னராட்சி மனிதர்களின் கையில் இருக்கும் ஆட்சியாகும். அவர்கள் தமக்குத் தேவையான போது சட்டங்களை அமுல்படுத்துவார்கள். தமக்குத் தேவையான போது சட்டங்களை மீறுவார்கள். அவர்கள் நியமனம் வழங்குவார்கள், நியமனத்தை இரத்தும் செய்வார்கள், கூட்டுவார்கள், கலைப்பார்கள், குழப்புவார்கள், நிரபராதியைத் தண்டிப்பார்கள், குற்றவாளிகளை பதவிகளில் அமர்த்துவார்கள். நாட்டின் சொத்து செல்வங்களை தமது சொத்துசெல்வங்கள் போன்று கருதுவார்கள். நாட்டையும் கவனிப்பார்கள் தங்களையும் கவனித்துக்கொள்வார்கள். மரபுகள், சட்டங்கள் அனைத்தும் அவர்களுக்கு சாதகமாக இருந்தால் அவற்றிற்கு அவர்களும் சாதகமாக இருப்பார்கள். பாதகமாக இருந்தால் அவற்றின் முதல் தர எதிரியாக அவர்களே மாறுவார்கள்.

மன்னராட்சியின் சிறப்பியல்புகள் இவ்வாறு இன்னும் பல…

மக்களாட்சி என்பது அவ்வாறல்ல. மக்கள் அனைவரும் அங்கீகரித்த சட்டங்களின் ஆட்சிதான் மக்களாட்சியாகும். அங்கு ஆளுகின்றவர்களும் ஆளப்படுபவர்களும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருப்பர். பிரச்சினைகளை சட்டங்களினூடாகவே அவர்கள் தீர்த்துக்கொள்வர். சட்டங்களை மீறினால் சட்டத்தின் முன் ஆஜராவதற்கும், சட்டத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கும் அவர்கள் பின்நிற்கமாட்டார்கள்.

இலங்கையில் நடைபெறுவது என்ன?!! இலங்கை மக்கள் எந்த ஆட்சியை விரும்புகிறார்கள். இலங்கையின் பாராறுமன்ற உறுப்பினர்கள் மேற்கூறப்பட்ட இரண்டு ஆட்சிகள் விடயத்தில் எந்த நிலைப்பாட்டை ஆதரிக்கின்றார்கள்.

நாட்டை யார் ஆட்சி செய்வார்கள் என்பது முக்கியமல்ல. நாட்டை எது ஆட்சிசெய்கிறது என்பதே முக்கியமானது.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. மக்களாட்சி நடைபெறும் நாடு. சட்டங்களால் ஆளப்படுகின்றதொரு நாடு. இலங்கையின் இந்தப் பாரம்பரியத்தை உலகம் கௌரவிக்கின்றது.

எனினும் அந்த கௌரவம் இன்று பாதிக்கப்பட்டிருக்கின்றது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமுள்ள ஜனநாயக சக்திகள் தற்போது இலங்கையில் ஏற்பட்டிருகின்ற அரசியல் நெருக்கடி குறித்து கவலை தெரிவிக்கின்றன. ஊடகங்களும் ஜனநாயக சக்திகளின் கவலைகளையும் அதிருப்திகளையும் விமர்சனங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகின்றன.

இந்த நெருக்கடியை நிவர்த்திக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு போதுமானதே… அது அரசியல்வாதிகளின் தீர்ப்பல்ல. மாறாக சட்டத்தின் தீர்ப்பு. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை செல்லுபடியற்றதாக மாற்றும் ஒரு இடைக்காலத் தடையை உச்சநீதி மன்றம் பிறப்பித்திருக்கின்றது.
இனி அடுத்த கட்டமாக பெரும்பான்மையை நிரூபித்து ஒரு ஸ்திரமான ஆட்சியை நாட்டுக்கு வழங்கும் பொறுப்பை பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டும். சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்வதற்கான அடுத்தகட்டப் பணி அதுவேயாகும்.

எனினும் பாராளுமன்றத்தின் அந்த சட்ட ஏற்பாட்டை கௌரவிப்பதற்குத் தடையாக பெரும்பான்மைப் பலம் இல்லாதவர்கள் மாறியிருக்கிறார்கள். நவம்பர் 14, 15 ஆகிய இரு நாட்களும் பாராளுமன்றம் கூட்டப்பட்டாலும் பெரும்பான்மை பலத்தை பெற்றவர்கள் நிலையியல் கட்டளைக்கமைய அதனை உறுதிப்படுத்த முடியாத நிலை தொடருகின்றது.

இந்த அசிங்கத்தை வெளிப்படுத்திய வண்ணம் உலகின் கண்களுக்கு முன்னால் அமர்ந்திருப்பது வெட்கமாக இல்லையா?

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 21, 2018 இல் 4:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: