Lankamuslim.org

One World One Ummah

சயோனிஸ ஆக்கிரமிப்பில் சிதைக்கப்படும் பலஸ்தீன மொட்டுக்கள்

leave a comment »

QAZAQAaLRIFIஎஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி): பலஸ்தீன 11 வயது சிறுவன் மொஹம்மத் நாஸிர் அல் ரீfபீ ஷஹீதானான், கடந்த வாரம் பலஸ்தீனில் பறிக்கப்பட்ட மற்றுமொரு இளம் மொட்டு அவன் , சயோனிஸ ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் ஆட்லறி மோட்டார் குண்டு தாக்குதலில் படுகாயடைந்திருந்த இந்த பாலகன் கடந்த 5ஆம் திகதி வபாத்தானான் , பலஸ்தீன மண்ணில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் துள்ளித்திருந்த அந்த இளம் மொட்டு சியோனிஸ ஆட்லறி மோட்டார் குண்டு தாக்குதலினால் சிதைக்கப்பட்டது , அந்த பாலகனின் வீட்டினுள் புகுந்து அவனை சிதைத்தது , ஆம் அவன் துள்ளித்திரிந்த அவன் வீட்டில் வெடித்த அந்த ஆட்லறி குண்டு அவனது தந்தையையும் , அவனின் உடன் பிறந்த சகோதரனையும் ,இரண்டு உறவினர்களையும் குதறிக்கொன்றது , இதில் அல் ரீfபீயின் முதுகெலும்பு உடைக்கப்பட்டு அவன் முடக்கப்பட்டான் ,படிப்பில் கொட்டிக்காரனான அல் ரீfபீ தான் ஒரு பொறியியலாளராக வரவேண்டும் என அடிக்கடி கூறுபவான இருந்துள்ளான் , இஸ்ரேலிய அந்த ஆட்லறி குண்டு அவனை , அவன் குடும்பத்தை, அவனின் கனவை எல்லாம் ஒரு வினாடியில் சிதைத்துவிட்டது , கடுமையான காயமடைந்த அவன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டான் மருத்துவர்கள் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தினர் வாழ்நாள் முழுவதும் படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது என்றனர் செயற்கை சுவாசக் கருவிமூலமாக சுவாசித்தான் நான்கு ஆண்டுகளை வைத்தியசாலையின் கட்டிலில் அந்த பிஞ்சு தாங்கக்கூடாத எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு வாழ்வுக்காக போராடிவந்தது, கடந்த வாரம் அந்த மொட்டு பலஸ்தீன் மற்றுமொரு ஷஹீதாக அந்த மண்ணில் விதையானது அன்று தனது குடும்பத்துடன் துள்ளித்திரிந்த அந்த சிறுவனுக்கு தனது வீட்டுக்கு ஒருபோதும் திரும்பமுடியாமலே போய்விட்டது. ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் ஆட்லறி குண்டுகளும் , காஸா மீதான அதன் முற்றுகையும் அல் ரீfபீயை போன்று ஆயிரம் ஆயிரம் பிஞ்சுகளை தினமும் சிதைத்துக்கொண்டே இருக்கின்றன ஆனால் அந்த பிஞ்சுகள் பலஸ்தீன மண்ணில் விதைகளாகவே வீழ்கின்றன .

அல்ரீfபீ பலஸ்தீன மண்ணில் சிதைக்கப்படும் ஒவ்வொரு குழைந்தைக்குமான ஒரு உதாரணம் கடந்த நான்கு ஆண்டுகளாக அவன் வைத்தியசாலையின் நிரந்தரமாக படுக்கையில் போடப்பட்டான், மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய அவன் , பல்வேறு சத்திரசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டான் மாத்திரைகளும் , ஊசிகளும் சத்திரசிகிச்சை கருவிகளும் அவனை தினமும் பதம் பார்த்தன, தினமும் பல்வேறு வதைகளை சந்தித்தான் இத்தனைக்கு மத்தியிலும் அவன் கற்கவேண்டும் என்ற ஆர்வத்தைகைவிடவில்லை வைத்தியசாலையில் இருந்தபடியே கற்றான் அவனின் கல்விமீதான ஆர்வத்தையும் , முன்னேற்றத்தையும் வைத்தியசாலைநிர்வாகம் பாராட்டி அண்மையில் ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தது , வேதனைக்கும் ,சோதனைக்கும் மத்தியில் தனது கற்றலையும், இறையச்சத்தையும், புன்முறுவலையும் அவன் கைவிடவில்லை தேற்றத்தில் அழகான ,படிப்பில் கெட்டியான அந்த சிறுவன் அத்தனை வேதனைகளையும் சுமந்து கொண்டு புன்னகைத்தான் , போராடினான் ஆனால் அவனுக்கு அந்த இஸ்ரேலிய ஆட்லறி மோட்டார் குண்டு ஏற்படுத்திய காயம் பயங்கரமானது , அல் ரீfபீயை சயோனிஸம் நான்கு ஆண்டுகள் சித்திரவதை செய்து இறுதியாக அவனை கடந்த சனிக்கிழமை 3/11/2018 – படுகொலைசெய்துள்ளது என்று கூறுவதுதான் பொருத்தமானது . இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன் .

மொஹம்மத் நாஸிர் அல் ரீfபீயை படுகொலை செய்துள்ளது போன்றுதான் சயோனிஸ ஆக்கிரமிப்பு இஸ்ரேல் ஆயிரக்கணக்கான பலஸ்தீன சிறுவர் ,சிறுமியர்களை படுகொலைசெய்துள்ளது .பலஸ்தீனில் இந்த 2018 ஆம் ஆண்டில் மட்டும் 30 சிறுவர் ,சிறுமியர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக Defense for Children International என்ற சர்வதேச சிறுவர் பாதுகாப்பு அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகின்றது, கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை சுமார் 2300 சிறுவர் .சிறுமியர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினால் சுட்டுகொல்லப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது, ,கடந்த 18 ஆண்டுகளாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை மூன்று நாளைக்கு ஒரு சிறுவன் என்ற வீதத்தில் சிறுவர்களை படுகொலை செய்துவருவதாக அந்த அமைப்பு மேலும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது , இது தவிர ஆயிரக்கணக்கான சிறுவர் ,சிறுமியர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர் அதிக எண்ணிகையிலான சிறுவர் ,சிறுமியர் வாழ்நாள் முழுவதையும் பாதிக்கும் காயங்களுக்கு உட்டுப்படுத்தப்பட்டுள்ளனர் என அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது .

இதேவேளை ஆண்டு ஒன்றுக்கு சுமார் 700 சிறுவர் சிறுமிகளை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதாக Defence of Children International மேலும் குறிப்பிடுகின்றது , மேலும் பல்வேறு சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்களின் தகவல்களின் படி கடந்த 2000 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை 14,000ஆயிரம் சிறுவர் சிறுமியர் கைது செய்யப்பட்டு மோசமான சித்தர்வதைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் இவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் பல ஆண்டுகளாக இஸ்ரேலிய வதை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு வதைக்கப்படுவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது. பெண்கள் ,சிறுமியர் வதை முகாம்களில் நிர்வாணமாக்கப்பட்டு உடல் மற்றும் உளவியல் சித்திரவதைக்கு உட்படுத்தபட்டுள்ளதாகவும் அந்த அந்த அமைப்பின் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதேவேளை 239 சிறுவர் ,சிறுமியரை தாம் சிறையில் வைத்திருப்பதாக சயோனிச இஸ்ரேலிய இராணுவம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது .

பலஸ்தீனின் பல பகுதிகளில் நடுநிசியில் வீடுகளை உடைத்துகொண்டு உற்புகும் ஆகிரமிப்புபடை பெண்களையும், வாலிபர்களையும் ,சிறுவர்களையும் நூற்றுக்கணக்காக கைது செய்துவருவகாகவும் பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சாட்டிவருகின்றன .இதேவேளைஇந்த ஆண்டு 2018 மார்ச் மாதம் தொடக்கம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை மேற்றுகொண்டுவரும் தாக்குதல்களில் 215 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 18000 பேர் காயமடைந்துள்ளனர் அவர்களில் 400 வரையானவர்கள் உயிராபத்தை ஏற்றப்படுத்தும் காயங்களுக்கு உட்பட்டுள்ளதாக பலஸ்தீன தகவல்கள் குறிப்பிடுகின்றன. The Palestinian Prisoners’ Clubஎன்ற அமைப்பு கடந்த மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேலிய வதை முகாம்களில் குறைந்த 62 பெண்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் ஆறு பேர் சிறுமியர் எனவும் இவர்கள் அனைவரும் பல்வேறு உடலியல் ,உளவியல் வதைகளை எதிர்கொண்டுவருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது .

இதேவேளை கடந்த 12 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை கான் யூனுஸ் பகுதியினுள் ஆழ ஊடுருவி நடாத்திய தாக்குதலில் 7 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் இவர்களில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய இராணுவ கொமாண்டரும் ஒருவர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது . இந்த தாக்குதலில் ஒரு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சிப்பாயும் கொல்லப்பட்டுள்ளான் இத்தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய பகுதிகள் மீதுரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளது, ஹமாஸ் இயக்க தலைவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்துவதை இஸ்ரேல் அண்மைக்காலமாக நிறுத்திவைத்திருந்த நிலையில் மீண்டும் இத்தாக்குதல் மூலம் ஹமாஸ் தலைவர்கள் இலக்குவைக்கப்படும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது .

deswqa

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 19, 2018 இல் 8:15 பிப

கட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: