Lankamuslim.org

One World One Ummah

சர்வ கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவு

leave a comment »

010611085517clipart_board_meetingஇணைப்பு-2: பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது. இன்று மாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல் சுமார் இரண்டரை மணி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சபாநாயகர் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த சந்திப்பிற்கான ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.எனினும் என்ன உடன்பாடுகள் ஏட்பட்டுள்ளது என்பது பற்றி தகவல் உடனடியாக வெளியாகவில்லை எனினும் ,அமைச்சர் விமல் வீரவன்ச இந்த கூட்டத்தில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ளார் .

இணைப்பு-2

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை வாய்மொழி மூலம் நடத்துவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பிலேயே சிறிசேன இதனை குறிப்பிட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

வாய்மொழி மூலம் வாக்கெடுப்பை நடத்துவது பொருத்தமானதல்ல என தெரிவித்துள்ள ஜனாதிபதி பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்தவேண்டும் அல்லது இலத்திரனியல் முறையில் நடத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மோதல் இன்றி பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு சர்வகட்சி கூட்டாரத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடக பிரிவு நாளைய அனைத்து கட்சி கூட்டத்தில் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பாக தீர்மானமொன்றை எடுப்பதாக இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 18, 2018 இல் 8:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: