Lankamuslim.org

One World One Ummah

சடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா?

leave a comment »

Usthath hajulakbarஉஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்: சமூகவியலாளர் பெட்ரிம் சொரோகிங் முதலாம் உலகப் போரின் போது உலக அமைதி கெட்டுப்போனதற்கு ஜேர்மன் சக்கரவர்த்தியான கெய்ஸர் வில்லியம் தான் காரணம் என நேச நாட்டுப் படைகள் குற்றம் சுமத்தின. அதே வேளை உலக சமாதானத்திற்கு இங்கிலாந்து முறியடிக்கப்பட வேண்டுமென கெய்ஸர் வில்லியம் கூறினார்.

இரண்டாவது உலகப் போரின் போது ஹிட்லரின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதிலேயே சமாதானம் தங்கியிருப்பதாக ஒரு கருத்து நிலவியது. வின்சன்ட் சேர்ச்சில் நீக்கப்பட வேண்டும் என வேறு சிலர் கூறினர். முசோலினி பிறக்காமலே இருந்திருக்க வேண்டும் என மற்றுமொரு சாரார் ஆதங்கப்பட்டனர். ஹிரோஹிட்டோ ஜப்பானின் ஆட்சியில் அமராதிருந்திருந்தால் உலகம் நன்றாக இருந்திருக்கும் என அமெரிக்கா கூறியது. ரஷ்யாவில் ஸ்டாலினின் இடத்தில் “ட்ரொஸ்கி” அமர்த்தப்பட்டிருந்தால் சமாதானம் தலைத்தோங்கியிருக்கும் என்ற ஆருடமும் சிலரால் முன்வைக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் இன்று இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர். எனினும் ஆக்கிரமிப்புகள், அடக்குமுறைகள், அநீதிகள், போர்கள், அவலங்கள் இன்னும் உலகைவிட்டுப் பிரிந்து செல்லவில்லை

இன்றைய பிரச்சினைகளுக்கும் கெய்ஸர், ஹிட்லர், சேர்ச்சில், முசொலினி, ஹிரோஹிட்டோ, ஸ்டாலின் என்போரா காரணம்?!!!

எமது காலகட்டத்தின் முக்கியமான கேள்வி முதலாளித்துவம், கம்யூனிசம், தேசியவாதம், சர்வதேசியவாதம் என்பவற்றில் எது மேலானது என்பதல்ல. மாறாக சடவாத கலாசாரம் ஒன்றின் இடத்தில் தலைசிறந்த வாழ்க்கைத்தத்துவம் ஒன்றை ஏற்படுத்த முடியுமா? என்பதே

சொரோகிங் அவர்களே! “உங்களுக்கு ஒரு வீர மரியாதை! சடவாதப் பானையில் சமூகம் என்ற கஞ்சியைக் காய்ச்சும் கலாசாரம் தொடரும் வரை ஹிட்லர்களின் மரணங்களால் உலகம் உய்வுறப் போவதில்லை” என்று சரியாகத்தான் சொன்னீர்கள்

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 12, 2018 இல் 5:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: