Lankamuslim.org

One World One Ummah

பாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது

with one comment

parliபாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயல் சட்டவிரோதமானது, அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று ஐக்கிய தேசிய கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. நாட்டில் ஜனநாயகத்தின் மேன்மையை உறுதிசெய்யும் வகையில் இதை எதிர்த்து நாங்கள் போராடுவோம் என்றும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுனந்தா தேசப்பிரிய

உச்சநீதிமன்றத்தின் கருத்து கேட்கப்படாமல் நாடாளுமன்ற தேர்தலை நடத்தமுடியாது என்று இலங்கை தேர்தல் ஆணையக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் சகோதரரும், மூத்த ஊடகவியலாளரான சுனந்தா தேசப்பிரிய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா கவலை

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரத்துறை செயலகம் கவலை தெரிவித்துள்ளது. இதனால் அரசியல் நெருக்கடி அதிகாகும் என அதன் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்த ஜனநாயக அமைப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ:

தான் உண்மையான ஜனநாயகத்தில் எப்போதும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், மக்களின் விருப்பம் எப்போதும் மரியாதைக்குரியது, அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 10, 2018 இல் 9:31 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. “நான்கரை வருடங்கள் முடியும் வரை ஜனாதிபதி பாராளுமன்றை கலைக்க முடியாது.”- ஜனாதிபதியின் SLFP கட்சி 5 தினங்களுக்கு முன்னர் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சிரேஷ்ட அமைச்சர் நிமல் சறிபால கூறியது.

    Ajmal

    நவம்பர் 10, 2018 at 10:25 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: