Lankamuslim.org

One World One Ummah

அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஜனநாயக கட்சி வெற்றி – டிரம்புக்கு கடும் பின்னடைவு

leave a comment »

qazawqawqஅமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இடைக்கால தேர்தலில் வென்றதன் மூலம் ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் கீழவையை கைப்பற்றியுள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த வெற்றி அதிபர் டிரம்பின் முயற்சிகளை முறியடிக்கும் வாய்ப்பாக அமையக்கூடும்.

ஆனால், அதே வேளையில் செனட் சபையில் தனது பலத்தை அதிகரிக்க குடியரசுக் கட்சி முயலும்.அமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது. செவ்வாய்கிழமை நடந்த தேர்தல் வாக்கெடுப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்பட்டது.தேர்தல் சக்கரத்தில் பெண்களுக்கான ஆண்டு என்று கூறப்பட்ட நடப்பு ஆண்டில் பெண் வேட்பாளர்கள் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தல்களில் இம்முறைதான் மிக அதிக அளவு வாக்குப்பதிவு நடந்திருக்கக்கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொடக்கம் முதலே, இந்த இடைக்கால தேர்தலில் மிக அதிக அளவில் வாக்குப்பதிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முன்னதாக, இந்த இடைக்கால தேர்தல்களில், தனது கட்சியான குடியரசு கட்சிக்கு ஆதரவு சேகரிக்கும் கடைசி கட்ட முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈடுபட்டார். ”நாளைய தேர்தல் நம் சாதனைகள் அனைத்துக்கும் பதில் கூறுவதாக அமையும்” என்று டிரம்ப் கடைசியாக நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார்.

இந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அமெரிக்க காங்கிரஸ் என்பது செனட் (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) என்ற இரு அவைகளைக் கொண்டது.

தற்போது அமெரிக்க மக்கள் தொகையில் 60 சதவிகிதமாக இருக்கும் வெள்ளை இனத்தை சேர்ந்தவர்கள் 80 சதவிகித உறுப்பினர்கள் என்கிறது அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள். அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பாதியாக இருக்கும் பெண்களின் பங்களிப்பு அமெரிக்க காங்கிரஸில் வெறும் 20% மட்டுமே

சிறுபான்மையின குழுக்களை சேர்ந்தவர்களில், ஹிஸ்பானிக், ஆசியர்கள், ஆஃப்ரிக்க அமெரிக்கர்களின் பிரதிநிதித்துவம் காங்கிரஸில் குறைவான அளவில் இருக்கிறது. இந்த புள்ளிவிவரங்கள் ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி கவுன்சிலால் சேகரிக்கப்பட்ட சுயவிவரத் தரவிலிருந்து (Profile data) பெறப்பட்டது. இதில், அமெரிக்க காங்கிரஸில் பல்வேறு மக்கள் குழுக்களின் தற்போதைய பங்களிப்பை காட்டுகின்றன.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது 45 ஹிஸ்பானிக் அமெரிக்கர்கள் மற்றும் 48 ஆஃப்பிரிக்க அமெரிக்கர்கள் உள்ளனர்.பராக் ஒபாமா, அமெரிக்க செனட்டின் ஐந்தாவது ஆஃப்ரிக்க அமெரிக்க உறுப்பினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.-BBC

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இடைக்கால தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வென்றுள்ளது.  இந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435   உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவுகள் குறித்த ஐந்து முக்கியமான தகவல்களை காண்போம்.

  • பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் கீழவையை கைப்பற்றியுள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த வெற்றி அதிபர் டிரம்பின் முயற்சிகளை முறியடிக்கும் வாய்ப்பாக அமையக்கூடும்.
  • குடியரசு கட்சியை சேர்ந்த ஒருவர் நாட்டின் அதிபராக இருக்கும்போது, பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சி ஆதிக்கம் செலுத்துவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் அதிகம் நடந்திராத ஒன்றாகும்.
  • இந்த வெற்றியின் மூலம், டிரம்பின் ஆட்சியின் மீதுள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து ஜனநாயக கட்சியால் விசாரணைகளை மேற்கொள்ள இயலும்.
  • அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ள குடியேற்ற கொள்கை, வரி விதிப்பு, அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவது போன்ற பல்வேறு விவகாரங்களில் அதிபர் டிரம்பிற்கெதிரான தாக்குதலை ஜனநாயக கட்சி தொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தேர்தலில்தான் அதிகளவிலான பெண்கள் போட்டியிட்டுள்ளனர். இதுவரை வந்த முடிவுகளின்படி ஜனநாயக கட்சியை சேர்ந்த 80 பெண்களும், குடியரசு கட்சியை சேர்ந்த 12 பேரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

செனட் சபையின் நிலவரம் என்ன?

அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபைக்கு மட்டுமல்லாது செனட் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது.

தற்போதைய நிலவரத்தின்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சி செனட் சபையில் தன்னுடைய பலத்தை அதிகரிக்கும் நிலை காணப்படுகிறது.

அதாவது, ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய செனட் உறுப்பினர்களான ஜோ டோனெலி, கிளாரி மக்காஸ்க்கில், ஹெய்டி ஆகிய மூவரும் இத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

மேலும், ஜனநாயக கட்சியை சேர்ந்த மற்றொரு செனட் உறுப்பினரான பில் நெல்சன் தான் போட்டியிட்ட பிளோரிடாவில் தோல்வியடையும் நிலையில் உள்ளார்.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 7, 2018 இல் 3:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: