Lankamuslim.org

One World One Ummah

பந்தாடப்படும் முஸ்லிம் தனியார் சட்டம் !!!

leave a comment »

qazaqazaqedஉலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி :அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி கடந்த 23 ஆம் திகதி இரவு சில முஸ்லிம் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்கு முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் தமது தரப்பு முன்­வைத்­துள்ள திருத்த சிபா­ரி­சு­களை தெளி­வு­ப­டுத்­தினார். இந்த நிகழ்வு உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் கட்­டா­ய­மாக மாற்­றங்கள் செய்­யப்­ப­ட­வேண்டும். அதில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மில்லை. ஆனால் மாற்­றங்கள் ஷரீ­ஆ­வுக்கு உட்­பட்­ட­ன­வா­கவே இருக்­க­வேண்டும். அல்­லாஹ்­வு­டைய வஹியின் வட்­டத்­துக்கு உட்­பட்­ட­தா­கவே எந்த மாற்­றங்­களை செய்­ய­மு­டி­யுமோ செய்­யுங்கள் என அவர் சட்­ட­வாக்க தரப்­பி­ன­ருக்கு வேண்­டுகோள் விடுத்தார்.

சட்­டத்­தி­லி­ருந்து மத்ஹப் நீக்­கப்­ப­ட­வேண்டும் என முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான பிரி­வி­னரின் சிபா­ரி­சினை ஒரு­போதும் உலமா சபை அனு­ம­திக்­காது என்றும் கூறினார்.

தொடர்ந்தும் அவர் இவ்­வாறு விளக்­க­ம­ளித்தார். 2009 ஆகஸ்­டி­லி­ருந்து 2018 ஜன­வரி வரை 8 ½ வரு­டங்­களில் 3 வரு­டங்கள் அதா­வது 2012 முதல் 2015 வரை சட்­டத்­தி­ருத்த குழுவின் அமர்­வுகள் நடை­பெ­ற­வில்லை. அதனால் தாம­தத்­திற்கு உலமா சபையை குறை கூற முடி­யாது.

‘மத்தாஹ்’ சட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டில்லை. இது சட்­டத்தில் உள்­வாங்­கப்­பட வேண்டும். பல­தா­ர­மணம் தொடர்பில் இப்­போ­துள்ள சட்டம் சில விதி­மு­றை­களைக் கூறி­யுள்­ளது. சவூ­தியில் போன்று நினைத்­த­வாறு பல­தா­ர­மணம் செய்து கொள்­ள­மு­டி­யாது.

இன்று உலமா சபையின் மீது குற்றம் சுமத்­து­கி­றார்கள், பழி­சு­மத்­து­கி­றார்கள். முஸ்லிம் தனியார் சட்­டத்தை உரு­வாக்­கிய எமது முன்­னோர்­களின் தியா­கத்­தையும் சேவை­யையும் பாராட்ட வேண்டும் என்று நான் தெரி­வித்த கருத்­தினை தவ­றாகப் புரிந்துகொண்­டுள்­ளார்கள்.

சட்­டத்­தி­ருத்த குழுவின் கூட்­டங்கள் 8 வரு­டங்­களில் 36 மாத்­தி­ரமே நடை­பெற்­றுள்­ளன. ஆகக்­கூ­டு­த­லான கூட்­டங்கள் 2016, 2017 ஆம் ஆண்­டு­க­ளிலே நடை­பெற்­றன. 2012– 2015 இற்­கி­டையில் 3 வரு­டங்­க­ளாக ஒரு கூட்­ட­மேனும் நடை­பெ­ற­வில்லை. அப்­ப­டி­யாயின் தாம­தத்­திற்குக் காரணம் நாங்­களா? குற்றம் எங்­க­ளு­டை­யதா?

முன்னோர் வகுத்­துள்ள சட்­டத்தில் ஒரு­சில விட­யங்­களில் மாற்­றங்­களைக் கொண்­டு­வர நாம் அனு­ம­திக்­கிறோம். முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையை 16 ஆக மாற்­று­வ­தற்கு இணக்கம் தெரி­வித்­துள்ளோம். ஆண்­களின் திரு­மண வய­தெல்லை 18 எனவும் எமது சிபா­ரிசு அமைந்­துள்­ளது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டத் திருத்த சிபா­ரிசுக் குழுவில் நாம் 9 பேர் ஷரீ­ஆ­வுக்­குட்­பட்ட திருத்­தங்­களை முன்­வைத்­துள்ளோம். ஜனா­தி­பதி பாயிஸ் முஸ்­த­பாவின் தலை­மையில் எமது குழு சிபா­ரி­சு­களை முன்­வைத்­துள்­ளது. இக்­கு­ழுவில் நீதி­ப­திகள், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள், கலா­நி­திகள், உல­மாக்கள் அடங்­கி­யுள்­ளனர்.

பெண் காதி­ நி­ய­ம­னத்தில் எமது நிலைப்­பாடு உறு­தி­யா­னது. பெண்­களை காதி­க­ளாக நிய­மிக்க முடி­யாது. ‘வொலி’ அனு­மதி வழங்­கு­வதில் இதனால் பிரச்­சினை ஏற்­படும். பெண்கள் காதி­யாக கட­மை­யாற்ற முடி­யாது என்­பதில் 4 மத்­ஹ­பு­களும் உறு­தி­யாக இருக்­கின்­றன.

குழுவின் அடுத்த பிரி­வினர் சட்­டத்­தி­லி­ருந்தும் ‘மத்ஹப்’ நீக்­கப்­பட வேண்­டு­மென சிபா­ரிசு செய்­துள்­ளார்கள். இது மிகவும் பயங்­க­ர­மான சிபா­ரிசாகும். சட்­டத்­தி­லி­ருந்து மத்­ஹபை நீக்­கி­விட்டால் வட்­டி­யையும் அனு­ம­திக்க வேண்­டி­யேற்­படும்.

பெண்கள் காதி­க­ளாக நிய­மனம் பெற­மு­டி­யாது என்­பது எமது நிலைப்­பா­டாக இருந்­தாலும் பெண்கள் காதி நீதி­மன்­றங்­களில் நியாய சகா­யர்­க­ளாக கட­மை­யாற்­றலாம். காதிகள் மேன்­மு­றையீட்டு நீதி­மன்றில் அங்கம் வகிக்­கலாம்.

முஸ்லிம் விவாகப் பதி­வா­ளர்­க­ளாக கட­மை­யாற்­றலாம் என்று நாம் சிபா­ரி­சு­களை முன்­வைத்து அறிக்­கையை சமர்ப்­பித்­துள்ளோம். எமது சிபா­ரி­சு­க­ளுக்கு உலமா சபையின் தலைவர், செய­லாளர் மற்றும் இரு நீதி­ப­திகள், இரு ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள், இரு சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணிகள், கலா­நிதி ஒருவர் கையொப்­ப­மிட்­டுள்­ளனர் என்று விளக்­க­ம­ளித்தார்.

இரு அறிக்­கைகள்

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு இரண்­டாகப் பிள­வு­பட்டு இரு­வேறு சட்­டத்­தி­ருத்த அறிக்கைகளை நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ர­ள­விடம் சமர்ப்­பித்துள்­ள­மை­யி­னால் எந்த அறிக்­கையை ஏற்­றுக்­கொள்­வது என்று நீதி­ய­மைச்சர் குழம்பிப் போயி­ருக்­கிறார். இத­னா­லேயே அவர் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் உத­வியை நாடி­யுள்ளார்.

குழுவின் தலை­வ­ரான முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழுவில் அவர் உட்­பட 9 பேர் ஓர் அறிக்­கையில் கையொப்­ப­மிட்­டுள்­ளனர். பின்­வ­ருவோர் அந்த சிபா­ரிசு அறிக்­கையில் கையொப்­ப­மிட்­டுள்­ளனர். ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சுஹத கம்லத், சட்ட பேரா­சி­ரியர் சர்யா சாரன் குயுவெல் (Sharya Scharenguivel), ஜெஸீமா இஸ்­மா­யில, சர்­மிளா ரசூல், சட்­டத்­த­ர­ணிகள் ரஸ்­மரா ஆப்தீன், சபானா குல் பேகம், பளீலா பி ஜுரங்­பதி (Faleela Be Jurangpathy), தில்­ஹரா அம­ர­சிங்க ஆகியோர் கையொப்­ப­மிட்­டுள்­ளனர்.

திரு­மதி. தில்­ஹார அம­ர­சிங்க, சலீம் மர்­சூபின் தலை­மை­யி­லான குழுவின் உறுப்­பி­ன­ரல்ல. ஆனால், அவர் குழுவின் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இதனை நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ர­ளவும் ஊட­கங்­க­ளுக்குச் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

ஷரீஆ சட்­டத்­துக்கு முரண்­ப­டாத வகை­யி­லான திருத்­தங்­களை ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா தலை­மை­யி­லான பிரி­வினர் முன்­வைத்­துள்­ளனர். அந்தக் குழுவில் பின்­வ­ருவோர் அடங்­கி­யுள்­ளனர். ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, முன்னாள் சட்­டமா அதிபர் சிப்லி அஸீஸ், மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் முன்னாள் தலைவர் ஏ.டபிள்யூ.ஏ.சலாம், நீதிச்­சே­வைகள் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் உதவிச் செய­லாளர் மொஹமட் மக்கி, ஜாமிஆ நளீ­மிய்­யாவின் பணிப்­பாளர் கலா­நிதி எம்.ஏ.எம்.சுக்ரி, காதிகள் சபையின் முன்னாள் தலைவர் சட்­டத்­த­ரணி நத்வி பஹா­வுதீன், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி, செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், சட்­டத்­த­ரணி பஸ்லத் சஹாப்தீன் ஆகி­யோ­ராவர்.

குழுவின் தலைவர் முன்னாள் நீதி­ய­ர­சரின் தலை­மை­யி­லான பிள­வு­பட்­டுள்ள குழுவில் அநே­க­மாக பெண் பிர­தி­நி­தி­களும் மாற்­று­மத பிர­தி­நி­தி­களும் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. இதே­வேளை, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பா­வின தலை­மை­யி­லான குழுவில் ஒரே­யொரு பெண் பிர­தி­நி­தித்­து­வமே இடம்­பெற்­றுள்­ள­மையை அவ­தா­னிக்­க­மு­டி­கி­றது. அத்­தோடு இக்­கு­ழுவில் உல­மாக்கள், ஜாமிஆ நளீ­மிய்யா பணிப்­பாளர், முன்னாள் காதிகள் சபை தலைவர், நீதிச்­சேவை ஆணைக்­கு­ழுவின் முன்னாள் உதவிச் செய­லாளர், ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிகள் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

முன்னாள் நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொட உலமா சபை­யுடன் சந்­திப்பு

தனது பத­விக்­கா­லத்தில் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் தேவை­யான திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு முன்னாள் நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் குழு ஒன்­றினை நிய­மனம் செய்த அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொட கடந்த 30 ஆம் திகதி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்தார்.

உலமா சபையின் பிர­தி­நி­தி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போது அவர், தான் நீதி­ய­மைச்­ச­ராக இருந்­த­போது முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழுவை நினை­வு­ப­டுத்­தினார். முஸ்லிம் சமூ­கத்­திற்கு நற்­கா­ரியம் புரி­ய­வேண்டும் என்­ப­தற்­கா­கவே இக்­கு­ழுவை தான் நிய­மித்­த­தா­கவும் தெரி­வித்தார். முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு மிகவும் இன்­றி­ய­மை­யாத ஒன்­றாகும். இச்­சட்­டத்தில் மாற்­றங்கள் தேவை­யென்று நீண்­ட­கா­ல­மாக கோரிக்கை விடுக்­கப்­பட்டு வந்­த­தை­ய­டுத்து இந்த குழு அன்று 2009 ஆம் ஆண்டு நிய­மிக்­கப்­பட்­ட­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். முன்னாள் நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­வு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலாமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி மற்றும் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம்.முபாரக் ஆகி­யோரும் பங்கு கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ரிசு செய்­வ­தற்­கான குழு­வினை நிய­மிப்­ப­தற்கு முன்னாள் நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொ­ட­விற்கு ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­த­பாவே தேவை­யான வழி­காட்­டல்­களை வழங்­கி­யுள்ளார். அதனால் அக்­கு­ழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்­றுக்­கொள்­ளு­மாறு பாயிஸ் முஸ்­தபா வேண்­டப்­பட்­டாலும் அவர் பெருந்­தன்­மை­யோடு நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் பெயரை தலைமைப் பத­விக்கு சிபா­ரிசு செய்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

முஸ்­லிம்­களின் சன்­மார்க்க விட­யங்­களை ஆராய்ந்து தீர்வு காணும் அறிவும், திற­மையும் மார்க்க அறி­ஞர்­க­ளுக்கே உள்­ளது. அதனால் குழுவில் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்­தி­யையும் அதன் செய­லாளர் எம்.ஏ.எம்.முபாறக் மௌவி­யையும் உள்­ள­டக்­கி­ய­தாக முன்னாள் நீதி­ய­மைச்சர் மிலிந்த மொர­கொட தெரி­வித்­துள்­ளமை கவ­னத்­திற் கொள்­ளப்­ப­ட­வேண்­டி­ய­தாகும்.

மார்க்க அறி­ஞர்­க­ளான உலா­மாக்­களின் கருத்­துக்­களை உள்­ள­டக்­கிய அறிக்­கையை கவ­னத்திற் கொள்ள வேண்டும் என நீதியமைச்சர் தலதா அத்துக் கோரளவுக்கு தான் சிபாரிசு செய்வதாகவும் மிலிந்த மொரகொட உலமா சபையுடனான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

எனது முயற்சி முஸ்லிம் சமூகத்திற்குப் பயனுள்ளதாக அமையவேண்டும் என எதிர்பார்த்திருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட குழுவை நியமித்த முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொட எமது முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்தில் திருத்தங்களுக்கு மிகவும் ஆர்வமுடையவராக இருக்கிறார் என்பது இதிலிருந்து தெரியவருகிறது. இந் நிலையில் குழுவிற்குள் ஏன் இந்த முரண்பாடுகள் இழுபறிகள் என்று சிந்திக்கத்தோன்றுகின்றது.

நான் முன்னாள் நீதியமைச்சராக இருந்தபோதும் இன்று இந்நாட்டின் சாதாரண பிரஜை என்ற வகையில் உலமாக்கள் சமர்ப்பித்த அறிக்கை கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் வேண்டியுள்ளார்.

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் ஷரீஆவுக்கு முரணான திருத்தங்கள் இடம் பெறக்கூடாது என்பதே முன்னாள் நீதியமைச்சர் மிலிந்த மொரகொடவின் நிலைப்பாடாகவும் இருக்கிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

தாமதம் வேண்டாம்

முஸ்லிம் விவாக, விவ­கா­ரத்துச் சட்­டத்தில் தாம­தங்கள் வேண்டாம். இழு­பறி வேண்டாம் என்றே சமூகம் எதிர்­பார்க்­கி­றது. எமது நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு கிடைத்­துள்ள வரப்­பி­ர­சா­தமே தனியார் சட்­ட­மாகும். காதி­நீ­தி­மன்ற கட்­ட­மைப்பு இதில் முக்­கிய இடத்­தினைப் பெறு­கி­றது.

எமக்குள் நாம் முரண்­பட்டுக் கொள்­வதால் எமக்கு கிடைத்­துள்ள சலு­கைகள் பறிக்­கப்­பட்­டு­வி­டலாம்.

எமது நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யான சட்­டங்கள் தேவை­யில்லை. அவர்கள் பொதுச் சட்­டத்தின் கீழே ஆளப்­ப­ட­வேண்டும் என்று பல இன­வாத அமைப்­புகள் குரல் எழுப்பி வரு­கின்­ற­மையை நாம் தொடர்ந்தும் அவ­தா­னித்து வரு­கிறோம். பொது­ப­ல­சேனா அமைப்பு இந்த கோஷங்­களை எழுப்­பு­வதில் முன்­நிற்­கி­றது.

எனவே நாம் சிந்­திக்­க­வேண்டும். குறிப்­பாக முஸ்லிம் பெண்கள் தூர­நோக்­கு­டை­ய­வர்­க­ளாக செயற்­பட வேண்டும். ஷரீ­ஆ­வுக்கு முரண்­ப­டாத சட்­டங்கள் மூலம் உரி­மை­களைப் பெற்­றுக்­கொள்ள முடி­யாதா? நாம் ஷரீ­ஆ­வி­லி­ருந்தும் தூரப்­ப­டுத்­தப்­பட்­டு­விட வேண்­டுமா? என்­பது தொடர்பில் கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­த­வேண்டும்.

முஸ்லிம் பெண்கள் அமைப்பு அரச சார்­பற்ற வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளினால் தூண்­டப்­ப­டு­கின்­றது. அத­னா­லேயே போராட்­டங்கள் இடம்­பெ­று­கின்­றன என்று முஸ்லிம் பெண்கள் அமைப்­புகள் மீது குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான தம்­மீ­தான குற்­றச்­சாட்­டு­களை களை­வதன் மூலம் மாத்­தி­ரமே சமூ­கத்தின் ஆத­ர­வி­னைப்­பெற்றுக் கொள்ள முடி­யு­மாக இருக்கும்.

குழு பிள­வு­பட்டு இரு பிரி­வாக ஊடக மாநா­டு­களை நடத்தி, தத்தம் பக்க நியா­யங்­களை தெளி­வு­ப­டுத்திக் கொண்­டி­ருக்­காது ஓர் இலக்­கினை எய்­து­வ­தற்கு ஒன்­று­ப­ட­வேண்டும். இரு தரப்பு முரண்­பா­டு­க­ளையும் ஒரு நிலைப்­ப­டுத்­து­வ­தற்கு தற்­போது நிய­மனம் பெற்றுள்ள மூவரடங்கிய குழு முனைப்புடன் செயற்பட வேண்டும். முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களுடன் ஓர் புதிய காதிநீதிமன்ற செயற்பாடுகளுக்கு பிரார்த்தனை புரிவோம். ஏ .ஆர் . ஏ.பரீல் -விடிவெள்ளி

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 11, 2018 இல் 10:52 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: