Lankamuslim.org

One World One Ummah

‘அமெரிக்கா நண்பன் உடையில் இருக்கும் எதிரி’- துருக்கி -அமெரிக்கா உறவு

leave a comment »

qazaqazaqஎஸ்.எம்.அப்துல்லாஹ்: துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கான வரிவிதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார். இதனால் துருக்கியின் பணமதிப்பான லிராவின் மதிப்பில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

துருக்கியின் பணமானது “அமெரிக்காவின் ஸ்திரமான டாலர்” மதிப்புக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது மேலும் அமெரிக்கா மற்றும் துருக்கி இடையேயான உறவில் சுமூக நிலை இல்லை எனவும் தனது ட்வீட்டில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் .

அயல்நாட்டு சக்திகள் தலைமையிலான பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே லிராவின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என துருக்கி ஜனாதிபதி ரஜப் தையூப் எர்துவான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி உயர்வு முடிவுக்கு எதிராக தக்க பதிலடி கொடுக்கப்படும் என துருக்கி எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவு இரு நாடுகளுக்கு இடையேயான உறவை பாதிக்கும் என்பதை அந்நாடு தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுடன் அங்காரா புதிய கூட்டாளியை தேடவேண்டிவரும் எனவும்துருக்கி ஜனாதிபதி எச்சரித்துள்ளார்  என துருக்கியின் வெளியுறவுத் துறை அமைச்சககம் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

அமெரிக்காவுக்கும் -துருகியிக்கும் இடையிலான உறவில் பல்வேறு காரனங்களினால் விரிசல் ஏற்பட்டு வருகின்றது  அமரிக்காவுக்கு உளவு பார்த்த மற்றும் பயங்கரவாத அமைப்பு ஒன்றுடன் தொர்புகளை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்க கிறித்தவ மத போதகர் அன்ட்ரூ ப்ரூன்சனை தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு எதிராக துருக்கி நீதி மற்றும் உள்துறை அமைச்சர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. வடக்கு கரோலினாவைச் சேர்ந்த சுவிசேஷகரான ப்ரூன்சன் அரசியல் குழுவொன்றுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கிட்டத்தட்ட கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இது தொடர்பிலும் கடந்த நாட்களில் இரு நாடுகளுக்கு இடையில் முரண்பாடுகள் ஏற்றப்பட்டுள்ளது இது தவிர பல்வேறு காரணங்களினால் முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன குறிப்பாக துருக்கியில் ஜனாதிபதி அர்த்துவானின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாம் எழுச்சி பெற்றுவருவது அமெரிக்காவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் மிகவும் கசப்பான ஒன்றாக உள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

இதேவேளை கட்டார் இஸ்லாமிய முன்னணி அறிஞர்களின் ஒருவரான முக்தார் அல் ஷன்கீதி அமெரிக்கா, துருக்கியை பொருத்தவரை நண்பன் உடையில் இருக்கும் எதிரி வெளிப்படையில் துருக்கியின் நண்பனாகவும் அந்தரங்கத்தில் துருக்கியின் எதிரியாகவும் அமெரிக்கா செயல்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

எனினும் துருக்கி தொழில்துறை அமைச்சு அமெரிக்கா இன்னமும் தொழில்துறையில் கூட்டாளியாக இருப்பதாகவும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் அழைப்பு விடுத்துள்ளது. நேற்றைய தினம் துருக்கியின் லிரா மதிப்பு 13 சதவீதம் குறைந்துள்ளது.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 11, 2018 இல் 7:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: