Lankamuslim.org

One World One Ummah

ஞானசார : மஹிந்தவும் கவலை. ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தல் !!

leave a comment »

bbmahiஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து சிக்கல் உள்ளதாகவும், அத்தண்டனை பாரதூரமானது என்றே கருதுவதாகவும், நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை மக்கள் நன்கு அவதானித்துக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

பத்தரமுல்லையிலுள்ள அபேகம வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார் ஞானசார தேரருக்கு எதிரான தீர்ப்பை அவசியம் மேன்முறையீடு செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கமும் ஜனாதிபதியும் நேரடியான தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும் என இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -09- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி விரும்பவில்லை என்றால், அது குறித்து இரண்டு முறை சிந்திக்க வேண்டும்.

பிக்கு ஒருவர் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியோ,  கொள்ளையில் ஈடுபட்டிருந்தாலோ ஜனாதிபதியிடம் மன்னிப்பு வழங்குமாறு கோர மாட்டோம்.

எனினும் நாட்டுக்காகவும் இனத்திற்காகவும் படையினருக்காகவும் குரல் கொடுத்தவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவில்லை என்றால் அது தேசிய குற்றம்.ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கும் இடத்திற்கு கொண்டு வருவதற்காக நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 10, 2018 இல் 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: