Lankamuslim.org

One World One Ummah

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் வெறித் தாக்குதல்கள் தொடர்கிறது

leave a comment »

qazaqaazaqமுற்றுகையில் உள்ள காசா பகுதி மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்கள் மற்றும் ஆட்லறி தாக்குதல்களினால் கர்ப்பிணிப் பெண் மற்றும் 18 மாத குழந்தை உட்பட குறைந்தது மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் . இந்த தாக்குதல்களில் குறைந்தது 12 பலஸ்தீனர்கள் காயமடைந்ததாகவும் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவின் உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் பலஸ்தீன செய்தி நிறுவனமான வாபா குறிப்பிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய பட்டையின் முற்றுகைக்குள் இருக்கும் காசாவில் இருந்து சுமார் 150 ரொக்கெட் குண்டுகள் இஸ்ரேல் மீது விழுந்ததை அடுத்தே புதன்கிழமை இரவு இந்த தாக்குதல்களை தொடுத்ததாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. ரொக்கெட் குண்டுவீச்சுகளால் குறைந்தது ஆறு இஸ்ரேலியர்கள் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது.

இந்த வெறித்தனமான தாக்குதல்களை நடத்திவரும் ஆக்கிரமிப்பு இராணுவம் “தற்போது தொடரும் நிலைமை தீர்க்கமானதாகும். கடந்த மாதங்களில் தாம் தேர்வு செய்தது சரியான பாதையில்லை என்பது எதிர்வரும் மணி நேரங்களில் ஹமாஸுக்கு புரிந்து விடும்” என்று ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவ ட்விட்டர் கணக்கில் சிரெஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் பதிவிட்டுள்ளார்.

காசாவில் ஆயுத உற்பத்தி தளம், இராணுவ வளாகம் உட்பட 140க்கும் அதிகமான ஹமாஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இந்த பரஸ்பரம் தாக்குதல்களுக்கு பின்னர் மற்றொரு யுத்த நிறுத்தம் ஒன்றுக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காசாவில் இருந்து கடந்த புதன்கிழமை குறைந்தது 150 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவைகளில் குறைந்தது 25 இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இந்த ரொக்கெட் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றிருக்கும் ஹமாஸ் ஆயுதப் பிரிவு, எதிரி நிலைகள் மீது பெரும் எண்ணிக்கையிலான ரொக்கெட்டுகள் வீசப்பட்டதாக கூறியது.

ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்்ட பேச்சாளரான அப்துல்லதீப் அல் கானுௗ ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், “(இஸ்ரேலின்) தொடர்ச்சியான ஆக்கிரமிப்புக்கு பலஸ்தீனர்கள் சுயபாதுகாப்பிற்காகவே எதிர்ப்பதோடு எமது மக்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு பதில் கொடுப்பது எமது பணியாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்

காசாவில் இரு ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டு ஒரு தினத்திற்கு பின்னரே புதன்கிழமை மோதல் வெடித்துள்ளது. அதேபோன்று எகிப்து மற்றும் ஐ.நாவின் முயற்சியில் காசா மற்றும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு இடையில மற்றொரு யுத்த நிறுத்த உடன்பாடு எட்டப்பட்ட நிலையிலேயே மீண்டும் ஒருமுறை மோதல் ஏற்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு இஸ்ரேல் எல்லையை ஒட்டி கடந்த நான்கு மாதங்களாக காசா மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழலிலேயே அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. தமது பூர்வீக பூமிக்கு திரும்புவதற்கான உரிமையைக் கோரி கடந்த மார்ச் கடைசியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டங்கள் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படையினர் நடத்தும் ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூடுகளில் 160க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 16,000 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

காசா மீது இஸ்ரேல் 2008 ஆம் ஆண்டு தொடக்கும் மூன்று முறை போர் தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 10, 2018 இல் 10:11 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: