Lankamuslim.org

One World One Ummah

‘உளவாளி முறுகல்’ : துருக்கி அமைச்சர்கள் மீது அமெரிக்கா நடவடிக்கை, துருக்கி பதிலடி !!

leave a comment »

qaqazaqஅமரிக்காவுக்கு உளவு பார்த்த மற்றும் பயங்கரவாத அமைப்பு ஒன்றுடன் தொர்புகளை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் அமெரிக்க கிறித்தவ மத போதகர் அன்ட்ரூ ப்ரூன்சனை தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு எதிராக துருக்கி நீதி மற்றும் உள்துறை அமைச்சர்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. வடக்கு கரோலினாவைச் சேர்ந்த சுவிசேஷகரான ப்ரூன்சன் அரசியல் குழுவொன்றுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கிட்டத்தட்ட கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

“அவர் நியாயமற்ற மற்றும் அநீதியால் பாதிக்கப்பட்டிருப்பதாக நாம் நம்புகிறோம்” என்று வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர் சாராஹ் சாண்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா ப்ரூன்சனை விடுவிக்குமாறு கோருவது ஏற்க முடியாது என்று துருக்கி கூறுவதோடு, அதனை எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டது. “இந்த தவறான முடிவை திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி அமெரிக்க நிர்வாகத்திடம் நாம் கோருகிறோம்” என்று துருக்கி வெளியுறவு அமைச்சு புதனன்று அறிவித்தது. இந்த ஆக்கிமிப்பு செயலுக்கு தாமதமின்றி பதில் கொடுக்கப்படும் என்றும் அது எச்சரித்தது.

துருக்கியில் மோசமான மனித உரிமை மீறல்களை முன்னெடுக்கும் அரச நிறுவனங்களின் தலைவராக உள்ள நீதி அமைச்சர் அப்துல்ஹமித் குல் மற்றும் உள்துளை அமைச்சர் சுலைமான் சொய்லு இலக்கு வைக்கப்படுவதாக அமெரிக்க கருவூலத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் இவ்வாறான ஒன்றுக்காக நேட்டோ நட்பு நாடு ஒன்றின் மீது அமெரிக்கா தடை விதிப்பது முன்னர் நிகழாதது என அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு பதிலடியாக துருக்கி ஜனாதிபதி அர்துகான் அமெரிக்க நீதி அமைச்சர் மற்றும் அமெரிக்க உள்துளை அமைச்சர்களின் சொத்துக்கள் துருக்கியில் இருந்தால் அவற்றை முடக்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்

துருக்கியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தோல்வி அடைந்த இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 20 அமெரிக்கர்களில் ப்ரூன்சனும் ஒருவராவார். அவர் மீது உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் நிலையில் அது நிரூபிக்கப்பட்டால் 35 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 4, 2018 இல் 10:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: