Lankamuslim.org

One World One Ummah

ஒரு விரலால் தடைகளை வென்ற இர்பான் ஹாபிஸ் காலமானார்

leave a comment »

Irfan-Hafiz-Keyboard-Warrior-Booksதனது அசைவற்ற உடலில் அசையும் ஒரேயொரு பகுதியான விரல்களின் உதவியுடன் 03 புத்தகங்களை எழுதி, சாதனைக்கு தடை இல்லை என உலகிற்கு பறை சாற்றிய கீபோர்ட் வாரியர் (Keyboard Warrior) என்று அழைக்கப்படும் தர்கா நகரைச் சேர்ந்த இர்பான் ஹாபிஸ், தனது 37 ஆவது வயதில் நேற்று (25) தர்கா நகரில் தனது வீட்டில் மரணமடைந்துள்ளார்.

உடல் உறுதியிழந்த போதிலும், தனது தன்னம்பிக்கையில் நம்பிக்கையிழக்காத இவர் தனது 04 ஆவது வயதிலிருந்து டுச்சேர்ன் மசுகுளர் டிஸ்ட்ரோபி (Duchenne Muscular Dystrophy) நோயினால் பாதிக்கப்பட்டவர். நோயினால் தனது 18 வயதிலிருந்து, தசைகள் மேலும் பாதிக்கப்பட்டு, இவரால் நகர முடியாமல் செல்ல தனது மீதி வாழ்க்கையை இன்று வரை நீண்ட காலமாக படுத்த படுக்கையிலேயே நகர்த்த வேண்டி ஏற்பட்டது. இருப்பினும் இவரது ஒரு விரலை மட்டும் அசைக்க முடியும். இதனை வைத்தே இவர் 3 புத்தகங்களை தட்டச்சு செய்து பயன்படுத்தி எழுதி சாதனை படைத்துள்ளார்.

முழுமையாக இயலாமையுடன் இருந்து கொண்டு படுத்த படுக்கையில் இறையருளால் தனது தன்னம்பிக்கை ஒன்றையே ஆயுதமாக பயன்படுத்தி இன்று உலகை விட்டுப் பிரிந்திருந்தாலும் மக்கள் மனங்களில் சாதனை நாயகனாக இடம் பிடித்துள்ளார் இர்பான் ஹாபிஸ்.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 25, 2018 இல் 8:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: