Lankamuslim.org

One World One Ummah

ஹெரோயின் பொதி செய்த ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவர் கைது

leave a comment »

Arrestedஹெரோயின் போதைப் பொருளை பொதி செய்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஒரே குடும்பத்தின் நால்வர் உட்பட ஐவரிடமிருந்தும் 481.3 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர், ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த ஐவரும் இன்று (14) காலை மஹரகம வீரமாவத்தை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து, கைது செய்யப்பட்டிருந்தனர்.

தில்ருக்ஷி அயேஷா (27), பெண்ணின் காதலன் என தெரிவிக்கப்படும் சாமர பெனாண்டோ (24), பெண்ணின் தந்தையான மத்து அய்யா என அழைக்கப்படும் அலுத்கெதர ஆரியதாச (57), பெண்ணின் தாய் நில்மினி (45), குறித்த பெண்ணின் சகோதரியான மல்கி சானிகா (17) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரும், கல்கிஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்தவகர்கள் என்பதோடு, மஹரகமவிலுள்ள குறித்த வீட்டை, ரூபா 28,000 இற்கு வாடகைக்கு பெற்றுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.-TK

Advertisements

Written by lankamuslim

ஜூலை 14, 2018 இல் 3:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: