Lankamuslim.org

இரத்தக் கறை படிந்த மூலோபாயங்கள் !!

leave a comment »

2407made_in_the_usa_eagle_flag_tattooலத்தீப் பாரூக்: அமெரிக்கா, ஐரோப்பா ரஷ்யா மற்றும் இஸ்ரேல் தலைமையில் பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் என்ற போர்வையில்; முஸ்லிம் நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் உலக முஸ்லிம் நாடுகளை பல நூற்றாண்டுகள் பின்னோக்கித் தள்ளியதோடு மட்டும் அன்றி மில்லியன் கணக்கான முஸ்லிம்களை அகதிகளாக்கியும் உள்ளது.

முஸ்லிம்களை பின்தங்கிய நிலையிலேயே வைத்திருப்பதற்கான மற்றும் இஸ்லாம் ஒரு சக்தியாக மீண்டும் உருவெடுப்பதை தடுப்பதற்கான ஒரு திட்டமிட்ட சதியே இதுவாகும்.

‘குட்பை ஐரோப்பா ஹலோ குழப்ப நிலை’ என்ற நூலை எழுதி உள்ள வாஷிங்டனைச் சேர்ந்த சட்டத்தரணி ஜே.மைக்கல் ஸ்பிரிங்மன் ஜெர்மனி இந்தியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் பணியாற்றிய முன்னாள் ராஜதந்திரியும் ஆவார். அவர் தனது நூலில் அகதிப் பிரச்சினை அமெரிக்காவாலும் ஐரோப்பாவாலும் உற்பத்தி செய்யப்பட்டது என்றும் அது ஒரு பெரும் சதுரங்கப் பலகை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்புக்கள் மூலம் நாடுகளை வலுவிழக்கச் செய்வது. மத்திய கிழக்கில் அமெரிக்க இலக்கினை அடைவதற்காக பாரிய அளவில் அந்த நாடுகளை வேவு பார்ப்பது, புலம்பெயர் அலைகளை உருவாக்குவது, வடக்கு மேற்கு என ஐரோப்பாவை பிளவு பட வைப்பது குறிப்பாக ஜெர்மனியை சீர்குலைப்பது, ஜெர்மனிக்கு சொந்தமான அகதித் திட்டம் ஒன்றை உருவாக்குவது, மலிவான தொழிலாளர்களாக மக்களை புலம் பெயரச் செய்யும் வகையில் அதை வடிவமைப்பது போன்ற திட்டங்களை உள்ளடக்கிய இந்தச் செயற்பாடுகளை அமெரிக்க புலனாய்வுச் சேவைகள் இலகுவாக்கி விட்டன என்று குறிப்பிட்டுள்ள ஸ்பிரிங்மேன், புகலிடம் கோருபவர்களின் துயரங்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

சிரியா மீதும் ஏனைய நாடுகள் மீதும் சட்ட விரோதமாக நடத்தப்பட்ட இராணுவ
ஆக்கிரமிப்புக்களின் பயங்கர வெளிப்பாடாக இது அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் உற்பட மேற்குலகத்தால் தொடுக்கப்பட்ட வேண்டத்தகாத யுத்தங்களின் விளைவுகளே இவை. இஸ்ரேல் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் வெளிப்படையாகச் சாடும் ஸ்பிரிங்மேன் குழப்பங்களை ஏற்படுத்த மட்டுமே அது எப்போதும் துணை போயுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டு மொத்தத்தில் இந்த சதித் திட்டங்களின் வடிவமைப்பானது அமெரிக்க ராஜ்ஜியத்தின் முன்னேற்றங்களை கருத்திற் கொண்டவை. அதன் விளைவாக ஏற்படும் குழப்பங்கள் இரத்தக் கறை படிந்த மூலோபாயங்களைக் கொண்டவை எனக் குறிப்பிடும் அவர் அதற்கான பல சான்றுகளையும் முன்வைத்துள்ளார். ஐரோப்பா கண்டம் பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் ஒரு பிராந்தியமாக அமைந்து விடக் கூடாது என்பதில் அமெரிக்க மிகவும் கண்ணும் கருத்துமாக உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்தப் போக்கு 1979ல் தற்போது செயல் இழந்துள்ள அன்றைய சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தான் மீது நடத்திய ஆக்கிரமிப்போடு தொடங்கியது. அதன் பிறகு தான் ஒவ்வொரு முஸ்லிம் நாட்டுக்கு எதிராகவும் போர் தொடுக்கப்பட்டது. க்கிரமிப்புக்களும் நடத்தப்பட்டன. முஸ்லிம் நாடுகள் மீது குண்டு மழை பொழியப்பட்டது. நாடுகள் அழிக்கப்பட்டன. மில்லியன் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மேலும் பெருந் தொகையானவர்கள் அகதிகளாக்கப்பட்டனர். முஸ்லிம் நாடுகளின் வளங்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டன. அந்த நாடுகளில் கைக் கூலிகள் பதவிகளில் அமர்த்தப்பட்டனர்.

பொஸ்னியா, கொசோவோ, செச்னியா, சோமாலியா, ஈராக், சிரியா, லிபியா, யெமன், மியன்மாரில் றொஹிங்யா முஸ்லிம்கள், பிலிப்பைன்ஸில் முஸ்லிம்கள் மீதான படுகொலைகள், பலஸ்தீனத்திலும், காஷ்மீரிலும் இடம்பெறும் படுகொலைகள் என இந்தப் பட்டியல் நீண்டு செல்கின்றது.

ஐ.நா அகதிகள் முகவராண்மை அறிக்கையின் படி இந்த யுத்தங்களும் மோதல்களும் உலகில் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு அகதிகள் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. 2015 இறுதியில் இந்த எண்ணிக்கை 65.3 மில்லியன்களாகக் காணப்படுகின்றது. அதற்கு சுமார் ஒரு வருடத்துக்கு முன் இந்த எண்ணிக்கை 59.5 மில்லியன்களாகவே இருந்தது.

ஐ.நா அகதிகள் உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிறாண்டி விடுத்துள்ள குறிப்பில் ‘ஒவ்வொரு வருடமும் வேறு நாடுகளுக்கு புலம் பெயரும் முயற்சியில் ஆயிரக்கணக்கான அகதிகள் கடலில் உயிரை விடுகின்றனர். தரையில் யுத்தத்துக்கு அஞ்சி இடம்பெயர முயலும் மக்களின் முயற்சிகளுக்கு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு தடை விதிக்கப்படுகின்றன. எமது அமைப்பின் வரலாற்றில் முதற் தடவையாக அகதிகளின் எண்ணிக்கை 60 மில்லியன்களாகப் பதிவாகியுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

 மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான அகதிகள் ஐரோப்பாவுக்கு மிக அண்மையில் இருக்கின்றனர். சில ஐரோப்பிய நாடுகள் இவர்களுக்கு அனுமதி அளிக்கின்றன. இவர்களுள் அநேகமானவர்கள் முஸ்லிம்கள். இந்த நாடுகளில் வாழும் தீவிர வலது சாரி சக்திகள் முஸ்லிம்களுக்கு இவ்வாறு இடம் அளிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்தும் வருகின்றன.

இந்த நாடுகளை குண்டு வீசி தாக்கி, தகர்த்து அழித்து வரும் பாரிய சக்திகளில் ஒன்று துரதிஷ்டவசமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அகதிகள் தஞ்சம் புகும் ஒரு நாடாகவும் இருக்கின்றது. பூகோள ரீதியான ஆக்கிரமிப்புக்களுக்குப் பின்னால் இருக்கின்ற உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

 உலகைப் புரிந்து கொண்டுள்ள அவதானிப்பாளர்களை இனிமேலும் பொய்யான சாட்டுக்களைக் கூறி ஏமாற்ற முடியாது. யுத்த வெறியர்களால் உலகில் இழைக்கப்பட்டு வரும் அநீதிகளை முடி மறைக்க பிரதான பிரிவு ஊடகங்கள் பெரும் பிரயத்தனங்களை எடுத்துள்ளன. இருந்தாலும் உலகின் எல்லா மூலை முடுக்குகளிலும் இந்த யுத்த வெறியர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களும் கோஷங்களும் தலைதூக்கத் தொடங்கி உள்ளன. ஆயுத மோதல்களின் பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கிய தாக்கங்களை அவை உலகுக்கு பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

லிபிய அகதிகளைத் தடுத்து வைக்கத் தூபமிடும் ஐரோப்பிய யூனியனின் கொள்கைகளை மிக வன்மையாகக் கண்டித்து சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த மே மாதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடுக்கடலில் லிபிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட அகதிகள் அழுக்கு நிறைந்த தடுத்து முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நடுக்கடலில் தடுத்து நிறுத்தப்படும் லிபிய அகதிகள் அங்கிருந்து அந்த நாட்டின் சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் திணைக்களத்தால் நடத்தப்படும் முகாம்களுக்கு (னுஊஐஆ) மாற்றப்படுகின்றனர். அங்கு அவர்கள் மிகவும் பாரபட்சமாக நடத்தப்படுவதோடு காலவரையறை இன்றி தடுத்து வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்களது அடிப்படை மனித உரிமைகள் மிக மோசமான அளவுக்கு மீறப்படுகின்றன.

ஐரோப்பிய நாடுகள் இந்த நடவடிக்கைகளுக்கு உடந்தையாகவும் லிபிய அதிகாரிகளுக்கு இந்த விடயத்தில் ஆதரவாக இருப்பதாகவும் உலக அளவில் மனித உரிமை அமைப்புக்கள் பல பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளன. ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்புடனேயே இந்த அகதிகள் நடுக்கடலில மறிக்கப்பட்டு மீண்டும் லிபியாவுக்குள் அகதி முகாம்களுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

 ‘ஐரோப்பிய நாடுகளின் ஈவு இரக்கமற்ற குடிவரவுக் கொள்கைகளால் இந்த மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். அதை கண்டும் காணாமலும் இந்த நாடுகள் இருந்து வருகின்றன. அது மட்டுமன்றி லிபியா அதிகாரிகள் மேற்கொள்ளும் மூர்க்கத்தனமான செயற்பாடுகளுக்கும் இவை ஆதரவாக இருந்து வருகின்றன’ என்று மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியத்துக்கான சர்வதேச மன்னிப்புச் சபை பணிப்பாளர் ஹேபா மொராயப் சுட்டிக்காட்டி உள்ளார். சர்வதேச மன்னிப்புச் சபை ஆய்வாளர்கள் இந்த அகதிகளோடு நடத்திய நேர் காணல்களின் போது லிபிய அதிகாரிகளால் தமக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள், பலவந்தமான வேலைகள், பணம் பறித்தல், கொலைகள், கடத்தல்கள், ஆயுதக் குழுக்களின் அட்டகாசங்கள் என்பன பற்றி திடுக்கிடும் தகவல்களையும் வெளியிட்டுள்ளனர்.

2016 மார்ச்சில் ராஜேஷ் மக்வானா அகதிகள் நிலையும் அதற்கு ஐரோப்பாவின் பதிலும் பற்றி தெரிவித்துள்ள தகவலில் இப்படி எழுதி உள்ளார். முற்கம்பி வேலிகள், தடுப்பு முகாம்கள், அந்நிய நாட்டவர்கள் மீதான அச்சம், அரசியல் ஒழுங்கீனம் என எல்லாமே அரசுகளின் கொடூரமான பண்புகளை விளக்குவதாகவே அமைந்துள்ளன. அவர்கள் தேசியவாத நலன் கலந்த போக்கை தீவிரமாகப் பின்பற்றி வருகின்றனர். இதனால் யுத்தம் மற்றும் மோதல்கள் காரணமாக வெளிNயுறும் அகதிகள் விடயத்தில் இவர்களின் பொறுப்பு மனிதாபிமானம் அற்றதாகவே உள்ளது.

முன்னொருபோதும் இல்லாத வகையில் ஐரோப்பாவை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் இவர்களை தார்மீக ரீதியாக ஏற்றுக் கொள்ளும் மனிதப் பண்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. உடனடி பிரச்சினை முன்னரை விட நன்றாகப் புலப்படுகின்றது. பொறுப்புக்களை பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் சர்வதேச சமூகம் இழிவான தோல்வியைத் தழுவி உள்ளது. சர்வதேச சட்டங்களின் பிரகாரம் புகலிடம் கோருபவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வளங்கள் அவசியமாகின்றன.

 எவ்வாறேனும் ஐரோப்பிய யூனியன் முழுவதும் தேவைப்படும் உடனடி கரிசனை கொள்கை வகுப்பாளர்கள் தீவிர வலது சாரி மற்றும் குடியேற்றத்துக்கு எதிரான குழுக்களின் செல்வாக்கின் கீழ் சிக்குண்டுள்ளமையாகும். இந்த நிலை அரசுகள் அகதிகள் விடயத்தையும் குடியேற்றவாசிகள் விடயத்தையும் எவ்வாறு கையாள வேண்டும் என்ற தீவிர விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.

இனரீதியான சகிப்புத்தன்மை அற்ற நிலை பிரஜைகள் மத்தியில் அதிகரித்து வருகின்ற நிலையில் ஐரோப்பிய நாடுகளின் பாரம்பரியமான தாராளப் போக்கு மிக வேகமாக மங்கி வருகின்றது. இந்நிலையில் எந்த விதமான நியாய உணர்வும் கருணையும் அற்ற சர்வதேச அகதிகள் தொடர்பான சட்டத்தை பற்றிப்பிடித்து அதன் வியாக்கியானங்களில் நாடுகள் தங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அகதிகளுக்கு பாதுகாப்பான சட்ட ரீதியான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பதிலாக கிரேக்கம் முதல் மேற்கு ஐரோப்பா வரையான புலம்பெயர் பாதையில் உள்ள பல நாடுகள் டொனால்ட்டிரம்ப் தீர்வை அமுல் செய்து வருகின்றன. மக்களை தடுத்து நிறுத்தும் வகையில் மதில்களை கட்டுதல், எல்லைகளை இராணுவ மயமாக்கல் முற்கம்பி வேலிகளை அமைத்தல் என இந்நடவடிக்கைகள் தொடருகின்றன. ஆவணப்படுத்தப்படாத அகதிகள் (பெரும்பாலானவர்கள் பெண்களும் சிறுவர்களும்) ஐரோப்பிய எல்லைகளில் பிரவேசிக்க முயலுகின்ற போது அவமானப்படுத்தப் படுகின்றனர். சில சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது வன்முறைகளும் பிரயோகிக்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் உயிர்வாழத் தேவையான அடிப்படை வசதிகள் மிகக் குறைவாகக் கிடைக்கும் வகையிலான இடங்களில் தடுத்து வைக்கவும் படுகின்றனர்.

மேலோட்டமாகப் பார்க்கின்ற போது ஆயுத மோதல்களால் பாதிக்கப்பட்டு தமது உயிர்களைப் பாதுகாக்க முயலும் மக்கள் மீதான ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் செயற்பாடுகள் இனவாத பாரபட்சம் கலந்தவையாகவே காணப்படுகின்றன.

அகதிகள் விடயத்தில் ஐரோப்பாவின் பொறுப்புக் கூறல் பாரபட்சமானது என்பதில் சிறிதளவே சந்தேகம் இருந்கக் கூடும். தார்மீக ரீதியாக இது ஆட்சேபனைக்கு உரியது. அரசியல் ரீதியாக இது ஆபத்தானது. மக்களது சிவில் உரிமைகளை இது அலட்சியப்படுத்துவதாலும் நீண்ட காலமாகப் பேணப்பட்டு வந்த சமூக விழுமியங்களை இது மீறுவதாலும்; சுய தோல்விக்கும் உரியது. ஐ.நா சாசனத்தின் கீழ் அகதிகளுக்கு உறுதி அளிக்கப்படடுள்ள சில ஒத்துழைப்புக்களை வழங்குவதை விடுத்து இத்தகைய கொள்கைகளைப் பேணுவதால் ஐரோப்பாவையே ஆட்டம் காணச் செய்யும் நிலையும்ஏற்படலாம். அரசாங்கங்களின் இந்தப் பிற்போக்குத் தனமானது இஸ்லாம் பற்றி பீதியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட குழுக்களின் கரங்களில் அரசாங்கங்கள் சிக்கி விடவும் வழியமைக்கும். இது ஸ்திரப்பாடற்ற நிலையையும் ஆத்திரமூட்டல் நிலையையும் ஏற்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு மத்தியில் மோதல்களை ஏற்படுத்தவும் கூடும். அத்தோடு மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் பயங்கரவாதத்துக்கு ஆதரவான ஆள்திரட்டலுக்கும் இது வழியமைக்கலாம்.

ஐரோப்பாவுக்கு வெளியே உண்மையான அவசர நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்திடம் மேலதிக உதவிகள் வேண்டப்படும் தவிர்க்க முடியாத ஒரு நிலை அங்கு தோன்றி உள்ளது. உதாரணத்துக்கு துருக்கியில் இன்று சுமார் 30 லட்சம் அகதிகள் உள்ளனர். ஜோர்தானில் 27 லட்சம் அகதிகள் உள்ளனர். இது அந்த நாட்டின் சனத் தொகையில் சுமார் 41 வீதமாகும். லெபனானில் 15 லட்சம் சிரியா நாட்டு அகதிகள் உள்ளனர். அந்த நாட்டு சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்காக இது அமைந்துள்ளது.

இந்த நாடுகளிலும் உலக அளவில் அகதிகளுக்கு பெரும் இடம் அளிததுள்ள ஏனைய பல நாடுகளிலும் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் மிகவும் கவலைக்குரிய விதத்திலேயே காணப்படுகின்றன. காரணம் இந்த நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் பட்டியலிலேயே உள்ளன. இங்கு வேலை இல்லாதோர் விகிதமும் அதிகம். போதியளவு நலன்புரி வசதிகள் இல்லை. சமூக அமைதியீனமும் இங்கு அதிகளவில் காணப்படுகின்றன. ஒப்பீட்டளவில் (ஜெர்மனியைத் தவிர) ஐரோப்பிய யூனியனின் 28 வளம் மிக்க நாடுகள் 2015ல் ஐரோப்பாவுக்குள் பிரவேசித்த சுமார் பத்து லட்சம் அகதிகளுள் ஒரு லட்சத்து அறுபதாயிரம் பேரை மட்டுமே தமக்கிடையில் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளன.

2018 ஜுன் 29 வெள்ளிக்கிழமை அன்று ஐரோப்பிய தலைவர்கள் அகதிகள் மற்றும் வழமைக்கு மாறான புலம் பெயர்ந்தோர் விடயங்கள் சம்பந்தமான ஒரு உடன்பாட்டுக்கு வந்துள்ளனர். ஏனைய பல ஐரோப்பிய யூனியன் விடயங்களைப் போலவே இதுவும் மாறுபட்ட கருத்துக்களைக் கொணடுள்ளவர்களைத் திருப்திப் படுத்தும் வகையிலான மிகவும் கவனமான ஆனால் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்ட ஒரு அறிவிப்பாகவே உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு தீர்க்கமானதோர் தீர்வினைக் காண்பதை இது மீண்டும் தாமதப்படுத்தி உள்ளது. ஆனால் இந்தப் பிரச்சினையை கட்டி எழுப்புவதற்கான ஒரு அடித்தளத்தை இது அமைத்துள்ளது.

இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைக்கால அறிக்கை ஒன்றின் படி உலகின் 7.4 பில்லியன் சனத்தொகையில் உலகளாவிய ரீதியில் 113 பேரில் ஒருவர் என்ற ரீதியில் ஒன்றில் புகலிடம் கோருபவராக அல்லது உள்நாட்டில் டம்பெயர்ந்தவராக அல்லது அகதியாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இதற்கு முன்னர் எப்போதும் இருந்திராத ஆபத்தான ஒரு நிலை என்றும் ஐ.நா அகதிகள் அலுவலகம் கூறுகின்றது. ஒப்பீட்டளவில் இதைப் பார்க்கின்ற போது இந்த எண்ணிக்கையானது பிரிட்டன், கனடா ஆகிய நாடுகளின் சனத்தொகையிலும் பார்க்கவும் அதேபோல் அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்து ஆகிய நாடுகளின் இணைந்த சனத்தொகையிலும் பார்க்கவும் அதிகமானது. 2015 முடிவில் கைத்தொழில் நாடுகளில் புகலிடத்துக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 32 லட்சமாக இருந்தது. ஐ.நா அகதிகள் அலுவலகம் அதன் வரலாற்றில்; பதிவு செய்துள்ள ஆகக் கூடுதலான எண்ணிக்கை இதுவாகும். இதில் மிகவும் கவலைக்குரிய விடயம் இந்த அகதிகளின் மொத்த எண்ணிக்கையில் 51 வீதம் சிறுவர்களாகும். இவர்களுள் பலர் பெற்றோரைப் பிரிந்து அல்லது பறிகொடுத்து தனியாக வந்தவர்கள்; அல்லது பயணத்தின் போது பறிகொடுத்தவர்கள்.

லிபியா, ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், யெமன், சோமாலியா மற்றும் முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்களின் இன்றைய பரிதாபகரமான நிலை இதுதான். இந்த நாடுகளை அமெரிக்கா,பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் இஸ்ரேலிய யூத மற்றும் சுவிசேஷ கிறிஸ்தவ சக்திகள் வெற்கக் கேடான கொடுமைக்கார அரபு ஆட்சியாளர்களின் ஒத்துழைப்போடு வேட்டையாடிசூறையாடியதால் ஏற்படுத்தப்பட்ட விளைவு தான் இது
(முற்றும்)

Advertisements

Written by lankamuslim

ஜூலை 7, 2018 இல் 6:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: