Lankamuslim.org

One World One Ummah

தேசியவாதம் பற்றிய அர்துகானின் அணுபவப் பகிர்வு: நான் ஒரு முஸ்லிம்

leave a comment »

erdogan-quranதமிழில் : முஹம்மத் பகீஹுத்தீன்: என்னுடை தீனில் துருக்கி, குர்திஷ், லாசி, ஜோர்ஜி, அப்காசியன் என வேறுபாடுகள் இல்லை. என்னுடைய தீன் எனக்கு கற்றுத்தரும் தெளிவான பாடம் யாதெனில் ‘முஃமின்கள் யாவரும் சகோதரர்களே’ என்பதாகும்.

எனவே மேற்கூறிய எல்லா இனங்களைச் சார்ந்தவர்களும் எனது இஸ்லாமிய தோழர்களாகும். புகழ்பூத்த துருக்கிய கவிஞன் யூனுஸ் இம்ரா சொல்வது போல் ‘நான் படைத்தவனுக்காக படைப்புக்களை விரும்புகிறேன்’

இனம், மதம், மத்ஹப், தேசியம், சமூக பாகுபாடு, வர்க்கபேதம் என்ற பிரிவுகளையும் வகுப்பு வாதங்களையும் புறந்தள்ளி விட்டு மனிதன் என்பவன் இறைவன் படைப்பு என்பதற்காக அனைவர் மீதும் அன்பு கொள்ள வேண்டும் என்பதே யூனுஸ் இம்ராவின் கவிவரிகளின் பேசு பொருளாக அன்று இருந்தது.

எனவே நான் இவர் துருக்கியர் என்பதற்காக அவரை விரும்புவதில்லை. அவர் லாசி அல்லது குர்திஷ் அல்லது போஸ்னியன் அல்லது அல்பேனியன் என்பதற்காக விரும்புவதில்லை. யாரையும் தேசத்தை அடிப்படையாக வைத்து நான் நேசிக்கவில்லை.

நான் ஒரு தேசியவாதி அல்ல. நான் ஒரு முக்கியமான விடயத்தை இங்கு கூற விரும்புகிறேன். ஒரு முறை நான் காலஞ்சென்ற என் தந்தையிடம்: நாம் துருக்கிய இனமா அல்லது லாசிகளா என்று வினவினேன். காரணம் நான் ரீஸா மாநிலத்தில் பிறந்தவன். ரீஸாவாசிகளை லாசிக்கள் என்று மக்கள் அழைப்பர். என் தந்தை சொன்னார் இதே கேள்வியை நான் என் பாட்டனிடம்; வினவியுள்ளேன். என் தந்தையின் தாத்தா அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு பகீஹ் (மார்க்க சட்டக்கலை வல்லுனர்) ஆக திகழ்ந்தார். அவர் மிகச் சரியான விளக்கத்தை தந்தைக்கு பின்வருமாறு கூறினார்.

என் அன்பிற்குரிய பேரணே! ஒரு நாள் வரும். நாம் மரணிப்போம். கப்ரில் அடக்கப்படுவோம். அப்போது நாம் கப்ரில் நிச்சயமாக விசாரிக்கப்படுவோம். அந்த விசாரணையில் உனது ரப்பு யார்? உனது மார்க்கம் என்ன? உனது நபி யார் என்று தான் வினவப்படுமே தவிர உனது தேசியம் என்ன என்று விசாரிக்கப்பட மாட்டாது. என பதில் தந்தார்.

எனவே மகனே அவர்கள் நீ யார் என்று கேட்டால் இறையருளால் நான் ஒரு முஸ்லிம் என்று பதில் கூறுவீராக.

எனவே இதுதான் அளவுகோள். நாம் முஸ்லிம்கள். எமது தீனில் தேசியவாதத்திற்கு இடமில்லை. நாம் தேசியவாதத்தை தத்தெடுக்க வேண்டிய அவசியமுமில்லை.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 2, 2018 இல் 9:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: