Lankamuslim.org

One World One Ummah

போதை பொருள் கடத்தல்காரர்களின் வருமானத்திற்கான வழிகள் துடுக்கப்பட்டுள்ளது: பொலிஸ்

leave a comment »

DRAGநாட்டில் முக்கிய போதை; பொருள் கடத்தல்காரர்களின் வருமானத்திற்கான வழிகள் முழுமையாக துடுக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலை இல்லாதொழிப்பதற்காக பொலிசார் மேற்கொண்ட தந்திரோபாய செயற்;பாடுகளே இதற்குக் காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்;தர மற்றும் குற்றச் செயல் பிரிவு பொறுப்பு பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீப் ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கையின் காரணமாக பாதாள உலக கும்பலின் உறுப்பினர்கள் பலர் உயிரிழந்தமை,கைது செய்யப்பட்டமையும் இதற்குக் காரணமாகும்.

விசேடமாக தற்பொழுது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் மடுஸ் மற்றும் அங்கொட லொக்கா என்ற முக்கிய குற்றச் செயல்களின் தலைவர்கள் போதைப்பொருள் கடத்தல் மூலமாக பெற்றுவந்த கோடிக்கணக்கான வருமானம் தற்பொழுது இழக்கப்பட்டுள்ளது.

ஈசி –காஸ் முறையில் பணத்தைப் பரிமாறி தந்திரோபாயமான முறையில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்தவர் சமீபத்தில் கொல்லப்பட்டார். இவர் பாதாள உலக கும்பலின் அங்கத்தவரான இரேஸ் என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் மத்தேகம பிரதேசத்தில் பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தார். இந்த நபர் போதைப்பொருள் கடத்தல், கப்பப் பணம் பெறல் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் மூலம் பணத்தை சம்பாதித்துள்ளார். வெளிநாட்டில் உள்ள திட்டமிட்ட குற்றச்செயல் தலைவரி;ன் நேரடி வழிகாட்டலில் இவர் செயற்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இவருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக் தொடர்பில் 18 வழக்குகள் இருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Advertisements

Written by lankamuslim

ஜூன் 17, 2018 இல் 3:11 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: