Lankamuslim.org

One World One Ummah

இனவெறியராக இருந்த ஐன்ஸ்டீன்

leave a comment »

ayyyஅல்பட் ஐன்ஸ்டீன் தனது ஆரம்ப நாட்களில் ஒரு இனவாதியாகவும் இனவெறி கருத்துகள் கொண்டவராகவும் இருந்திருப்பது புதிதாக வெளியாகி இருக்கும் அவரது தனிப்பட்ட பயண நாட்குறிப்பு ஒன்றின் மூலம் தெரியவருகிறது. 1922 ஒக்டோபர் மற்றும் 1923 மார்ச் மாத்தில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாட்குறிப்பில் ஐன்ஸ்டீன் தனது ஆசிய மற்றும் மத்திய கிழக்கு பயண அனுபவம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

இதில் அவர் பொதுப்படையான பாதகமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். உதாரணத்திற்கு, சீனர்களை அவர், “கஷ்டப்பட்டு வேலை செய்யும், அருவருப்பான, அறிவுக்கூர்மை அற்ற மக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். பிற்காலத்தில் அமெரிக்காவின் சிவில் உரிமையாளராக இருந்த ஐன்ஸ்டீன், இனவெறி என்பது, “வெள்ளை மக்களின் ஒரு நோய்” என்று குறிப்பிட்டிருந்தார்

இந்த நாட்குறிப்பு முழுமையாக ஆங்கிலாத்தில் பிரசுரிக்கப்படுவது இது முதல் முறையாக இருந்தது. ஐன்ஸ்டீன் ஸ்பெயினில் இருந்து மத்திய கிழக்கு சென்று இலங்கை வழியாக சீனா மற்றும் ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் கொழும்பில் இருந்த நாட்களில் எழுதி இருக்கும் குறிப்பில், “அவர்கள் இழிந்த நிலையில் வாழ்வதோடு, தரைக்கு கீழே கணிசமான துர்நாற்றம் வீசுகிறது. கொஞ்சமாக இயங்கும் குறைவான தேவையுடையவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பெளதீகவியலாளரான ஐன்டீன், அடொல்ப் ஹிட்லரின் வருகையை அடுத்து 1933 இல் அமெரிக்காவுக்கு குடியேறியபின் தனது விஞ்ஞான கோட்பாடுகளால் மாத்திரமன்றி மனிதாபிமான நடவடிக்கைகளாலும் பிரபலமடைந்தார்.

யூத இன விஞ்ஞானியான அவர் 1946இல் பன்சில்வேனியாவின் லிங்கன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையிலேயே இனவெறி, “வெள்ளை மக்களின் ஒரு நோய்” என்று குறிப்பிட்டார்.

 

Advertisements

Written by lankamuslim

ஜூன் 17, 2018 இல் 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: