Lankamuslim.org

One World One Ummah

நீதிமன்றம் ஞானசார தேரரின் குற்றத்துக்கான தண்டனையை இன்று அறிவிக்கவுள்ளது !!

leave a comment »

qazaqaபொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மீதான தண்டனையை இன்று ஹோமாகம நீதிமன்றம் அறிவிக்கவுள்ளது ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொடயின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு  மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு மீதான வழக்கில் இவர் குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இவருக்கான தண்டனையை குறித்த நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது இதேவேளை நீதிமன்ற வளாகத்துக்கு பலத்த பாதுகாப்புவழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுன்றது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் எண்  386 மற்றும் எண் 486 ஆகிய சட்டத்தின் கீழ்   இவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கலபொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று இடம்பெற்றபோது அவ்வழக்கு எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு தலங்கம, தலாஹேன பிரதேசத்திலுள்ள கிஸ்தவ சமய தலம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, அதன் சொத்துகளுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பிலான வழக்கே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் குறித்த 13 பேரும் குற்றவாளி அல்ல என, தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், குறித்த தீர்ப்பை மீள்பரிசிலனை செய்யும் வகையில், சட்ட மா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, நேற்றைய தினம்மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, தீபாலி விஜேசுந்தர மற்றும் அச்சல வேங்கப்புலி முன்னிலையில் நேற்று (13) எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisements

Written by lankamuslim

ஜூன் 14, 2018 இல் 11:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: