Lankamuslim.org

One World One Ummah

காக்கா, இறுதிச் சுற்றில் முதல் பலி நீ

leave a comment »

qazaqazaqqபஷீர் ஷேகுதாவூத் : காத்தான்குடி பெட்டிக் கடை வயோதிபரின் கொலை இலங்கையருக்கு- விசேடமாக முஸ்லிம்களுக்கு ஒரு முக்கிய செய்தியை தந்துள்ளது.நீங்கள் சுதாகரித்துக் கொள்ளாவிட்டால் தொலைத்துக் கட்டப்படுவீர்கள் என்பதே அம்முக்கிய செய்தியாகும்.

காத்தான்குடி ஊருக்குள் வைத்து இனந்தெரியாதோரால் மனிதர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் இறுதியாக 2008 ஆம் ஆண்டு இடம்பெற்றது. சரியாகப் பத்துவருடங்களுக்குப் பிற்பாடு நேற்று ஒரு எளிய முஸ்லிம் வயோதிபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை, இக்கொலைக்கான காரணம் வெறும் கஞ்சாக் கோப்பி விவகாரமாக இருக்கமுடியாது. ஒன்று அல்லது சில உளவுச் சேவை நிறுவனங்கள் இணைந்து பகடைக் காயாகப் பாவிக்கக் கூடிய ஏதோவொரு வகை வெறி ஏற்றப்பட்ட முஸ்லிம் இளைஞர் சிலரை பயிற்றுவித்துவிட்டன என்பதையும் அவர்களைப் பாவிக்கவும் தொடங்கி விட்டன என்றும் சந்தேகப்படவேண்டியுள்ளது.

சில முஸ்லிம் பிரதேசங்களில் தொடர்ந்தும் இவ்வாறான கொலைகளும் வேறு வன்முறை சம்பவங்களும் வருங்காலத்தில் நிகழக்கூடும். பின்னர் நாடு தழுவிய ரீதியில் முஸ்லிமல்லாத மக்கள் வாழும் பிரதேசங்களிலும் இந்தக் கூத்து அரங்கேறவும் வாய்ப்புண்டு.

மேல் சுட்டிய நிகழ்வுகளை சாட்சியாக வைத்து இதே உளவுச் சக்திகளின் திட்டத்தின்படி இலங்கை அரசும், மேற்குலகும், எல்லை நாடுகளும் இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதம் குடியேறிவிட்டதாகப் பிரகடனப்படுத்தவும் கூடும்.

பிறகென்ன முஸ்லிம்கள் இடி உரலுக்குள் அகப்பட்ட தக்காளியின் கதியைத்தான் அடைவார்கள். மேலும் கொஞ்சக்காலம் செல்ல, இலங்கையரில் அநேகர் மத அடிப்படையில் மாறி மாறி வன்முறையைக் கட்டவிழ்ப்பர். 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னான 10 வருட கால அமைதி வாழ்க்கையை அனுபவித்த இலங்கையர் அனைவரும் மீண்டும் பாதுகாப்பற்ற வாழ்க்கைக்குள் வலிந்து தள்ளப்படுவர்.

இலங்கையில் யுத்தத்தை நீ உட்பட நாம் பலர் சேர்ந்து முடித்து வைத்தோம். ஆனால் சீ..நாய்.. நீ மட்டும் இங்கு வந்து ஆதிக்க நடனம் ஆடுகிறாய்!

பணத்தை இறைத்து கடலை நிரப்பி உனது நாட்டின் ஒரு துண்டை இங்கு நடுகிறாய்! தீவின் ஓரத்தில் தீவமைத்து நீ மட்டும் குளிர்காயத் தீ மூட்டுகிறாய்!

அதிவேகப் பாதையமைத்து நாட்டை அடகு பிடிக்கிறாய்! துறைமுகம் தோண்டி எங்களை அண்டாமல் ஆக்குகிறாய்!

இப்போது பார் இஸ்லாமியத் தீவிரவாதம் உன்னைத் தாக்கி அழிக்கப் போகிறது. நாங்கள் உனக்கெதிராய் ஒன்றுமே செய்யவில்லை. உனக்கெதிரான வலையை நெய்யவில்லை.இது 1400 வருடங்களுக்கு முன்னர் நெய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத வலை என்பதை அறிந்துகொள்.

வா, எல்லோரும் சேர்ந்து இந்த இஸ்லாமிய வலையை அறுப்போம். இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதத்தை ஒழிப்போம்.
இலங்கைத் தீவு நம் எல்லோருக்குமானது.நீ எம்மோடு உடன்பட்டு வராவிட்டால் பட்டுப்பாதை கெட்டுப் போகும்! என்று “அவர்கள்” பேரம் பேசுவர்.

இலங்கையை தியனன்மன் சதுக்கத்தைக் கையாண்டது போல் கையாள முடியுமா என்ன!

பேரப் பேச்சு வெல்லக் கூடும், ஆனால் கிழிந்த இலங்கைக்கு ஒட்டுப் போடவும் வக்கில்லாது போகும்.

மேற் சொன்னபடிக்கு காலம் நம்மை நரகத்துக்குள் தள்ளவும் கூடும்.

சந்தேகப்படுவதை சரியாகவும் கொஞ்சம் அதிகமாகவும் படல் வேண்டும். இல்லாவிட்டால் உரிய காலத்துக்குத் தேவையான சுதாகரிப்பு சாத்தியமாகாது.

 

Advertisements

Written by lankamuslim

ஜூன் 10, 2018 இல் 6:22 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: