Lankamuslim.org

One World One Ummah

முஸ்லிம்களிடம் கோத்தா மன்னிப்பு கேட்கவேண்டும் : முஜீப்

with one comment

mujeeb rahmaanமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, தனது ஆட்சியில் முஸ்லிம்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறுகின்றார். அவர் முஸ்லிம்களை பாதுகாக்கும் முன்னர் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹுமான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்த) சட்டமூலம் குறித்த இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் யுத்த குற்றம் இடம்பெற்றதாக அரசாங்கம் எந்த இடத்திலும் ஏற்றுகொள்ளவில்லை. இராணுவ தண்டிப்பு அவசியம் என்று எந்தவொரு இடத்திலும் கூறவுல்லை. எமது அரசாங்கம் எமது இராணுவத்தை பாதுகாக்கும் கொள்கையில் இருந்தே செயற்பட்டு வருகின்றது.

சர்வதேசம் இன்று நாம் கூறுவதை கேட்கின்றது. எம்முடன் இணைந்து நாட்டினை முன்னெடுக்க விரும்புகின்றது. எம்மை சர்வதேச நாடுகள் நம்புகின்றது. எனினும் ஒரு சிலருக்கு இன்று மீண்டும் விடுதலைப்புலிகள் வேண்டும் என்ற அவசியம் உள்ளது. மீண்டும் புலிகள் உருவாக வேண்டும் நாட்டில் குழப்பம் ஏற்படவேண்டும் என்ற கனவு கண்டுகொண்டுள்ளனர்.

வடக்கில் விக்னேஸ்வரன் நாட்டினை துண்டாட நினைப்பதை போலவே தெற்கில் உள்ள சிங்கள தலைவர்களும் நாட்டை துண்டாட நினைக்கின்றனர். இரண்டு தரப்பும் ஒரே கொள்கையில் இருந்தே செயற்பட்டு வருகின்றது.

கோத்தாபய ராஜபக்ஷ இன்று முஸ்லிம் மக்களுடன் இணைந்து இப்தார் நிகவுகளில் கலந்துகொண்டு முஸ்லிம் மக்களுடன் நட்புறவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார். அது ஆரோக்கியமான விடயம், ஆனால் அவர் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலத்தில் முன்னெடுத்த வேலைத்திட்டங்களை மறக்கக்கூடாது.

அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் கோத்தாபய ராஜபக்ஷ இருந்து செயற்பட்டமை, தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை, ஏனைய பல இடங்களில் இடம்பெற்ற முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் என்பன மறக்க முடியாது. இன்று தூக்கத்திலிருந்து எழும்பிய அவர், முஸ்லிம்களை பாதுகாப்பதாக கூறுகின்றார். அவர் முஸ்லிம் மக்களை பாதுகாக்க முன்னர் முஸ்லிம் மக்கள் முன்னிலையில் மன்னிப்புகேட்க வேண்டும் என்றார்.

Advertisements

Written by lankamuslim

ஜூன் 8, 2018 இல் 9:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. கடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார்.

    இன்று (08) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

    கடந்த அரசாங்கத்தின் இறுதிக் கட்டத்தில் முஸ்லிம்கள் அந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு முயற்சித்தனர் என்பது இரகசியமல்ல. இதற்காக வேண்டிய உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் பல முயற்சிகளை முன்னெடுத்தனர்.

    சமூகத்துக்குள் பரவிய பல்வேறு விதமான பொய்யான பிரச்சாரங்கள், முஸ்லிம்களைக் கோப மூட்டக் கூடிய நடவடிக்கைகள் என்பன திட்ட மிட்ட அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் ராஜபக்ஷ ஆட்சியின் மீது முஸ்லிம்களுக்கு குரோதத்தை ஏற்படுத்த ஒரு குழு முயற்சி செய்தது.

    உண்மை நிலை அவ்வாறல்ல. இதன் பின்னால் உள்ள உண்மை நிலையை எம்முடன் நெருக்கமாக இருந்த முஸ்லிம் தலைவர்கள் விளங்கியிருந்தனர்.

    நாட்டில் ஏற்பட்ட நிலைமைகளுக்கு நாம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருந்தது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    அவ்வாறு செய்யாதிருந்ததனால், இதனைப் பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு வாய்ப்பு உருவாகியது எனவும் அவர் மேலும் கூறினார்.

    Ibrahim Ali

    ஜூன் 9, 2018 at 12:48 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: