Lankamuslim.org

One World One Ummah

அமைச்சர் ரிஷாதின் புதிய எம்.பி. குறித்து உயர் கல்வி அமைச்சர் கடும் விசனம்

leave a comment »

vijaiஅமைச்சர் ரிஷாத் பத்தியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் இன்று (08) பாராளுமன்றத்தில் சத்திப்பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் உப வேந்தருக்கு எதிராக லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இப்படியான ஒருவர் இன்று சபையில் பதவிப் பிரமாணம் செய்தமை ஆச்சரியமாகவுள்ளதாகவும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் நவவி இராஜினாமா செய்ததனால் ஏற்பட்ட இடைவெளிக்கு முன்னாள் உபவேந்தர் அக்கட்சியின் தலைவரினால் நியமிக்கப்பட்டார்.

இன்று (08) அவர் பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இதனையடுத்து உயர் கல்வி அமைச்சர் இன்று சபையில் ஆற்றிய உரையிலேயே இதனைக் கூறினார்.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை நடாத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில்தான், இவர் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். இதுதான் நாம் இன்று நாட்டில் முகம்கொடுக்கும் யதார்த்தம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஒலுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் பாலியல் லஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஒலுவில் பல்கலைக்கழகத்திலுள்ள குறிப்பிட்ட ஒரு விரிவுரையாளருக்கு, பாலியல் லஞ்சம் கொடுக்காவிடின் அவரது பாடத்தில் யாரும் சித்தியடைய முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதுதான் இன்று அந்தப் பல்கலைக்கழகத்தின் நிலைமை எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

உயர் கல்வி அமைச்சர் ஒருவர் பொறுப்பு மிக்க ஒரு சபையில் குறிப்பிட்ட ஒரு சிலர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து முழுப் பல்கலைக்கழகத்திலுள்ள மாணவிகளையும் பாதிக்கும் வித்தில் கருத்துத் தெரிவித்துள்ளமைக்கு புத்திஜீவிகள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

அப்பல்கலைக்கழகத்தில் படித்த மாணவிகளின் பெற்றோரும் அமைச்சரின் கருத்துக் குறித்து கவலை வெளியிட்டுள்ளனர். DC

Advertisements

Written by lankamuslim

ஜூன் 8, 2018 இல் 12:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: