Lankamuslim.org

இந்த மக்கள் பிரதிநிதியின் சிறந்த முன்மாதிரி !!

with one comment

sibilyநகர சபை அமர்வுகளின் போது அதில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகையில் தனக்குரிய கொடுப்பனவு பணத்தினை நகர சபை பொது நிதியில் வைப்புச் செய்து அதனை மக்கள் தேவைகளுக்காக பயன்படுத்துமாறு காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கான கோரிக்கை அடங்கிய கடிதம் ஒன்றினை காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி MRF. றிப்கா அவர்களுக்கு காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் தபால் மூலம் அனுப்பி வைத்தார்.

மேலும் தான் கலந்துகொண்ட முதலாவது நகர சபை அமர்விலேயே நகர சபை அமர்வுகளின்போது தனக்கு வழங்கப்படும் சிற்றுண்டிக்கான செலவினை தனது சொந்த நிதியில் இருந்து நகர சபைக்கு மீள வழங்குவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பொறியியலாளர் ஷிப்லி பாறூக்

“அரசியல் என்பதனை முழுக்க முழுக்க மக்களுக்கான சேவையாகக் கருதியே நான் செயற்பட்டு வருகின்றேன். அரசியலினூடாக எந்தவொரு வருமானங்களையும் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவையோ, விருப்பமோ எனக்கு கிடையாது.

ஆகவேதான் இவ்வாறான மக்கள் பணிக்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை நான் எனது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு மாறாக மக்களுக்காக செலவு செய்கின்றேன்” எனவும் தெரிவித்தார்.

கடந்த கிழக்கு மாகாண சபை ஆட்சிக்காலத்தின்போது மாகாண சபையின் உறுப்பினராக பதவி வகித்த பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மாகாண சபையினால் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை மக்கள் சார்ந்த பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தியமை மாத்திரமன்றி மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொள்கின்றபோது தனக்கென வழங்கப்பட்ட உணவுக்குரிய மொத்த கொடுப்பனவுத் தொகை மற்றும் மாகாண சபையினால் தனது அலுவலகத்திற்கென வழங்கப்பட்ட பொருட்களில் மக்கள்பணி சார்ந்த நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமைபோக மீதமாகவிருந்த காகிதாதிகள், உள்ளிட்ட அனைத்து அலுவலக பொருட்களையும் மாகாண சபைக்கு மீள வழங்கியிருந்தார்.

மேலும் மாகாண சபை உறுப்பினர்களுக்களுக்கு அரசினால் வழங்கப்படும் வாகனங்களுக்கான விஷேட வரிவிலக்குக்குரிய பெறுமதியினை பயன்படுத்தி அவர் சுமார் 62 இலட்சம் ரூபா செலவில் காத்தான்குடி பாம் வீதியினை முற்றுமுழுதாக கொங்ரீட் வீதியாக புனரமைப்பு செய்து வழங்கியிருந்ததோடு மீதித் தொகையினை பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அரச அதிகாரங்களை பெறுகின்றவர்கள் ஊழல் மோசடிகளைச் செய்து மக்கள் பணத்தினை சூறையாடுகின்றதொரு காலகட்டத்தில் நகர சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் இவ்வாறான செயற்பாடு முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மிகச் சிறந்ததொரு படிப்பினையாகும்.

மேலும் பிற சமூகத்தவர்கள் முஸ்லிம்கள் சம்மந்தமாக கொண்டிருக்கின்ற தவறான அபிப்பிராயங்களுக்கு பதிலளிக்கக்கூடிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவரின் முன்மாதிரியான செயற்பாடொன்றாகவும் இது அமைந்துள்ளது.

எம்.ரீ. ஹைதர் அலி

Advertisements

Written by lankamuslim

ஜூன் 1, 2018 இல் 10:32 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

 1. “NFGGயின் முன்மாதிரியான அரசியல் நடை முறைகளை ஏனைய மக்கள் பிரதிநிதிகளும் அமுல்படுத்த முன்வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது”

  முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சபீல் நழீமி

  (NFGG ஊடகப்பிரிவு)

  “நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்மாதிரியான அரசியல் நடை முறைகளை ஏனைய மக்கள் பிரதிநிதிகள் சிலரும் அமுல்படுத்துவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியளிக்கிறது.

  அந்த வகையில், நாம் நீண்ட காலமாக நாம் நடைமுறைப்படுத்தி வருவதைப் போலவே, தனக்குக் கிடைத்த நகரசபைக் கொடுப்பனவை சொந்தமாக்கிக் கொள்ளாமல் நகரசபை நிதிக்கே மீண்டும் ஒப்படைத்த பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் நடவடிக்கையை நான் பாராட்டுகின்றேன்.

  கடந்த 12 வருடங்களாக இது போன்ற பல முன்மாதிரிகளை கொள்கையாகவும் நடமுறையாகவும் கொண்டுள்ள எமது கட்சி ஏனையோர்களும் இது போன்று முன்மாதுரியாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றது.” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி(NFGG)யின் ஸ்தாபக உறுப்பினரும் முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் சபீல் நழீமி தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

  “அரசியல் என்பது மக்களுக்கானதாகும். அரசியலில் கிடைக்கும் பதவிகள் அமானிதமாகவே வழங்கப்படுகின்றன. அதனைப் பயன்படுத்தி சொந்த இலாபங்களையோ அல்லது சொந்த அனுபவிப்புக்களையோ செய்வதனை அனுமதிக்க முடியாது. முழுக்க முழுக்க மக்கள் நலனுக்காக மாத்திரமே அரசியல் அதிகாரம் பாவிக்கப்பட வேண்டும் என்பதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொள்கையாகக் கொண்டுள்ளது. துஸ்பிரயோகங்களும் ஊழல் மோசடிகளும் நிறைந்த அரசியல் சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றால் இது போன்ற முற்போக்கான கொள்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் பல முன்மாதிரியான நடை முறைகளை NFGG அமுல்படுத்தி வருகின்றது.

  மக்கள் பிரதி நிதிகளாக பதவி வகிப்பவர்கள் அப்பதவி மூலம் கிடைக்கும் கொடுப்பனவுகளையோ அல்லது ஏனைய சலுகைகளையோ சொந்த இலாபமாக மாற்ற முடியாது என்பதும் அவை அனைத்தும் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் NFGG யின் அடிப்படைக் கொள்கையாகும்.

  2006 இல் எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இந்தக் கொள்கை இன்று வரை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. காத்தான்குடி நகர சபையில் ஆரம்பத்தில் ஒரு பிரதிநிதியும் அதன் பின்னர் இருவரும் தற்போது நான்கு பிரதிநிதிகளும் என NFGG பிரதிநிதிகள் காணப்படுகின்றனர். இவர்கள் எவரும் தமக்குக் கிடைக்கும் கொடுப்பனவுகள் எதனையும் சொந்தமாக எடுத்துக் கொள்வதில்லை. அவை கட்சியின் தீரமானத்திற்கமைவாக பொது நலன்களுக்காகவே செலவு செய்யப்படுகின்றன.

  கடந்த நகர சபைக் காலத்தில் மானிய அடிப்படையில் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன. காத்தான்குடி நகர சபையின் சகல உறுப்பினர்களும் அவற்றை சொந்தமாக்கிக் கொண்டனர். ஆனாலும், NFGG பிரதிநிதிகள் மாத்திரம் அவ்வாறு செய்யவில்லை. தமது சொந்தப் பணத்தையும் செலவழித்தே அந்த மோட்டார் சைக்கிள்களை அவர்கள் பெற்றுக் கொண்டிருந்த போதிலும், கட்சியின் கொள்கைக்கு அமைவாக கட்சியிடமே அவற்றை ஒப்படைத்தனர். த ற்போது 18 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள NFGG இதே முன்மாதிரியையே சகல இடங்களிலும் அமுல்படுத்தி வருகின்றது.

  முஸ்லிம் சமூகத்தில் இது போன்ற முன்மாதிரிகளைக் கொண்ட ஒரே கட்சி NFGG மாத்திரமே என்பது பெருமைக்குரியதாகும். இந்நிலையில், பொறியியலாளர் சிப்லி பாறூக் அவர்களும் இந்த முன்மாதிரிகளை நடைமுறைப்படுத்துவதானது வரவேற்புக்குரியதாகும்.

  அவர் சாந்திருக்கும் கட்சி இது போன்ற சிறந்த முன்மாதிரி நடைமுறைகளை கொண்டிராத கட்சியாக இருந்தாலும் தாமாக முன்வந்து அவர் இதனை செயற்படுத்துவதை நான் பாராட்டுகின்றேன்.இன்னும் பலரும் இது போன்ற விடயங்களை செய்ய முன்வர வேண்டும்”

  news man

  ஜூன் 2, 2018 at 4:44 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: