Lankamuslim.org

One World One Ummah

காஸாவின் 60 இலக்குகள் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தாக்குதல், நூற்றுக்கணக்கான ரொக்கெட்டுகளினால் ஹமாஸ் பதில் தாக்குதல் !!

leave a comment »

qazsaqazaqsaqM.ரிஸ்னி முஹம்மட்: கடந்த 24 மணித்தியாலத்தினுள் பலஸ்தீன் காஸாவின் 60 இலக்குகள் மீது ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது பீரங்கிகள் ,யுத்த விமானங்கள் , ஆட்லறி குண்டுகள் மூலம் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது , இதேவேளை ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகள் இஸ்ரேலின் மீது ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர் கடந்த 2014 ஆம் ஆண்டின் பின்னர் இடம்பெற்ற இரு தரப்புக்கும் இடையிலான மோசமான தாக்குதல்களாக இது வர்ணிக்கப்படுகின்றது , கடந்த 2014 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் கொலைவெறித்தாக்குதலில் 2251 பலஸ்தீனர்களும் அதிலும் பெரும்பாலும் சிறுவர் ,சிறுமியர் அடங்கலான பெரும்தொகை பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு தரப்பில் 66 ஆக்கிரமிப்பு சிப்பாய்களும் 6 இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களும் கொல்லப்பட்டிருந்தனர் .

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம் போராளிகள் தரப்பும் , இஸ்ரேலிய தரப்பும் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது , கடந்த மார்ச் 30 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படை மேற்கொண்டுவரும் காஸாமீதான கொலைவெறித் தாக்குதல்களில் இதுவரை 121 பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் சிறுவர் சிறுமியரும் அடங்கும். காஸாமீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் போர்விமானத் தாக்குதல்கள் செல் தாக்குதல்கள் என்பனவற்றால் மக்களில் உடமைகளுக்கும் உயிர்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டு வருகின்றது .

காஸாவை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தனது முழு முற்றுகையின் கீழ் வைத்திருக்கும் அதேவேளை எகிப்தும் காஸாவை முடக்கிவைப்பதில் இஸ்ரேலுக்கு பெரும் உதவியாக செயல்பட்டு வருகின்றது , தற்போது இது தரப்பும் இங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் யுத்தநிறுத்தம் எகிப்திய உளவு பிரிவின் அனுசரணையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ,

இந்த உடன்பாடு முறியுமாக இருந்தால் ஹமாஸ் அமைப்பின் தலைமைத்துவம் மீது குறிவைக்கப்படும் என இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை இந்த உடன்பாட்டின் எதிர்காலம் இஸ்ரேலிய நடவடிகையில் தங்கிகியுள்ளது என போராளிகள் அமைப்பும் தெரிவித்துள்ளன .

qazsaqazaqsaq

Advertisements

Written by lankamuslim

மே 30, 2018 இல் 9:46 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: