Lankamuslim.org

One World One Ummah

சர்வதேச நிதி நிறுவனங்களின் சதி விளையாட்டு துருக்கியிலும் ஆரம்பமா ?

with one comment

qaqzaqazaswqaஏ.அப்துல்லாஹ் : துருக்கி ஜனாதிபதி துருக்கிய மக்கள் தம்மிடமுள்ள டொலர் , மற்றும் யூரோ நாணயங்களை துருக்கிய நாணயமான லிரா வுக்கு மாற்றிக்கொள்ளுமாறு அறிவிப்பு செய்துள்ளார் , தூக்கியின் நாணயப்பெறுமதி டொலர் , மற்றும் யூரோவுக்கு எதிராக பெறுமதி சரிவை எதிர்கொள்வதால் அதை முறியடிக்கும் விதமாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது .

அதேவேளை துருக்கி நாணயத்தின் பெறுமதி சரிவானது வெளிநாட்டு சக்திகளின் சதி என துருக்கி தொடர்ந்து கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.  ”சகோதர்களே உங்களின் தலையணிகளின் கீழ் இருக்கும் டொலர் அல்லது யூரோ நாணயங்களை லிராவுக்கு மாற்றிக்கொள்ளுங்கள், இந்த விளையாட்டை (Game) மற்றுமொரு விளையாட்டால் எதிர்கொள்வோம் ” “உலகளாவிய ஆட்சி வகைகள்” எனது நாட்டை பாழ்படுத்த அனுமதிக்க முடியாது எனவும் துருக்கி ஜனாதிபதி ரஜப் தையூப் எர்தோகான் தெரிவித்துள்ளார் . இதேவேளை துருக்கி நாணயத்தின் பெறுமதி சரிவானது எதிர்வரும் தேர்தலை மையமாக வைத்து செய்யப்படுவதாக பிரதமர் பின் அலி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் துருக்கிய நாணயமான லிரா டொலருக்கு எதிராக 20 வீத சரிவை சந்தித்து வருகின்றது இதேவேளை இது வளர்முகநாடுகள் தற்போது எதிர்கொண்டுவரும் பிரச்சினை மற்றும்உள்நாட்டில் சில அரசியல் மற்றும் பொருளாதார மாதிரியும் இதன் மீது தாக்கம் செலுத்துவதாக துருக்கி பொருளாதார நிபுணர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். தற்போதைய நாணயத்தின் பெறுமதி சரிவை வைத்து துருக்கியின் பொருளாதார வளர்ச்சியை மதிப்பிடமுடியாது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். துருக்கியின் பொருளாதாரம் உலகில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார தகமையை  துருக்கி கடந்த ஆண்டு வரை தக்கவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

 

Advertisements

Written by lankamuslim

மே 27, 2018 இல் 6:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. HELLO EDITOR ……..DDNT YOU GET THE NEWS OF AN INDU RACIST WHO PUBLICLY TOLD ALL MUSLIMS TO VACATE SRI LANKA AND GO TO ARAB COUNTRIES , IF THEY WANT TO EAT BEEF IN SRI LANKA – JAFFNA ? WHY YOU DONT POST THE VIDEO AND NEWS IN YOUR WEBSITE ?

    HSNAZ

    மே 28, 2018 at 8:02 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: