Lankamuslim.org

One World One Ummah

புனித ரமழானில் மார்க்க கல்விச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்குக

leave a comment »

quranஎம்.எஸ்.எம்.ஸாகிர்: புனித ரமழான் நோன்பு காலங்களில் முஸ்லிம் மாணவ, இளைஞர், யுவதி சமூகம் ஆன்மீக வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்தும் அதேவேளை, இஸ்லாமிய சன்மார்க்க அறநெறி வகுப்புகளிலும், செயலமர்வுகளிலும், பயிற்சிகளிலும் ஈடுபட சமூகப் பெரியார்கள். முன்னோடிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஊடக இணைப்பாளரும் விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் பழீல் மௌலானா (நழீமி) விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு மாதம் முழுவதும் விடுமுறை வழங்கப்படுவது இலங்கை முஸ்லிம்கள் அனுபவித்துவரும் முக்கிய உரிமையாகும். இந்த உரிமையை எமது சமூகம் சரியாகப்பயன்படுத்துகின்றதா? என்பது முக்கிய வினாவாகும். உண்மையில் முஸ்லிம் பாடசாலை அபிவிருத்திச்சபை மேற்படி ரமழான் விடுமுறையை மாணவர்களின் ஒழுக்க, பண்பாட்டு, விழுமிய விருத்திக்கான அரிய சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, மஸ்ஜிதுகளின் நிர்வாகிகள் – உலமாக்களோடு இணைந்து அல் – குர்ஆன் ஓதல் பயிற்சி, ஹதீஸ் மஜ்லிஸ், பிக்ஹ் சட்ட வகுப்பு, தர்பிய்யா நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தி மேற்படி ரமழானில் அறநெறி விருத்தியை உருவாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதேபோல ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றுவரும் அஹதிய்யா அறநெறிப் பாடசாலைகளின் செயற்பாடுகளை தீவிரப்படுத்தும் ஒரு காலப்பகுதியாக அமைத்து ஆன்மீகப் கல்விச் செயற்பாடுகளில் கூடுதல் ஈடுபாடு காட்ட முன்வருமாறு மேற்படி பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.

புனித ரழமான் கால இரவு நேரவணக்க வழிபாடுகளில் பலர் ஈடுபடும் போது, ஒரு சில இளைஞர்கள், மாணவர்கள் வீணான விøளாட்டுக்களில், அரட்டை அடித்தலில், பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடாமல் மாற்று மத சகோதரர்களுக்கு தொந்தரவு, இடையூறு ஏற்படுத்தாமல் முன்மாதிரியாக நடந்து கொள்வதற்கான வழிகாட்டல்களை இஸ்லாமிய பிரசார இயக்கங்கள் தமது நடவடிக்கைகளில் முன்னுரிமைப்படுத்த வேண்டுமெனவும் பேரவை வேண்டிக்கொள்வதோடு, ஸஹர், இப்தார் சிந்தனைகளை வழங்கும் உலமாப் பெருமக்கள் தமது பயான்களில் இளைஞர் ஒழுக்கம், பண்பாடு பற்றி வலியுறுத்த வேண்டுமெனவும் கிழக்கு முஸ்லிம் கல்விப் பேரவை வலியுறுத்துகின்றது.

Advertisements

Written by lankamuslim

மே 24, 2018 இல் 2:17 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: