Lankamuslim.org

எல்லை மீள்நிர்ணயம் மூலம் எமது செயற்பாட்டு எல்லைகளை நிர்ணயிக்க இடமளியோம்: திலகராஜ்

leave a comment »

340A6644ஹட்டன் நகரில் பொன்னகர் பகுதிக்கும் நீதிமன்றத்துக்கும் இடையிலான தூரம் சில நூறு மீற்றர்களே ஆகும். எனினும் 2012 எல்லை மீள் நிர்ணயகுழு பொன்னகர் பகுதியை தொலைவில் உள்ள நோர்வுட் பிரதேச சபையில் சேர்த்துள்ளார்கள். இன்று பொன்னகருக்கு அண்மித்த பூல்பேங் தோட்டத்தில் வீடமைப்புத் திட்டத்தை நகரம் போல் உருவாக்கியுள்ளோம். நகரின் காமினிபுர, வில்பிரட்புர போன்று இன்று கந்தையாபுரமும் நிமிர்ந்து நிற்கிறது. அடுத்த உள்ளுராட்சி மன்றத்துக்கான எல்லை மீள் நிர்ணயத்தின்போது பொன்னகருடன் கந்தையாபுரத்தையும் ஹட்டன் நகரசபை எல்லைக்குள் கொண்டுவருமாறு கோரிக்கை வைப்போம் என தொழிலாளர் தேசிய முன்னணியின் செயலாளர் நாயகமும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ஹட்டன் நகரை அண்டிய பெரிய தொப்பித் தோட்டம் என அழைக்கப்படும் பூல்பேங்க் தோட்டத்தில் புதிய வீடமைப்புத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரான தொழிற்சங்கவாதி பி.வி.கந்தையாவின் நினைவாக அமையப் பெற்ற கந்தையாபுரம் பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட எல்லை மீள்நிர்ணய குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட வட்டார எல்லைகளின் அடிப்படையிலேயே இடம்பெற்றது. அந்த எல்லை மீள்நிர்ணயம் முழுக்க முழுக்க ஒரு கட்சி அல்லது கூட்டணி தனது ஆட்சியத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டது. கிராமப்பகுதிகளில் மூவாயிரம் சனத்தொகைக்கு ஒரு வட்டாரம் என்ற நிலை காணப்படுகின்றபோது பெருந்தோட்டப் பகுதிகளில் ஒன்பதினாயிரம் சனத்தொகைக்கு ஒரு வட்டாரம் என்ற நிலை காணப்படுகின்றது. அத்தகையதொரு வட்டாரமே வனராஜா வட்டாரம். அது நோர்வூட் பிரதேச சபைக்கான வட்டாரம். ஆனால், அட்டன் நகரசபைக்கும் நீதிமன்றத்துக்கும் சில மீற்றர் தூரங்களைக் கொண்ட பொன்னகர் பகுதி பல கிலோமீற்றர் தொலைவில் உள்ள நோர்வூட் பிரதேச சபைக்கு சேர்க்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அரசியல் நிகழ்ச்சி நிரலைக் கொண்டது.

ஆனால், இத்தகைய எல்லை மீள்நிரணயங்களினால் எமது செயற்பாட்டு எல்லைகளை நிர்ணயிக்க இடமளியோம்.இன்று ஹட்டன் நகரை அண்டிய காமினிபுர, வில்பிரட்புர போன்று கந்தையாபுரமும் நிமிர்ந்து நிற்கிறது. நகர்புற வீடுகளுக்கு நிகரான தோற்றத்தில் கந்தையாபுரம் காட்சியளிக்கின்றது.பொன்னகருடன் கந்தையாபுரத்தையும் ஹட்டன் நகரசபைக்குள் இணைக்குமாறு கோரிக்கை வைப்போம். ஒவ்வொரு தொட்டத்திலும் எமது முன்னோடி தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள், கலைஞர்கள் எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்களின் பெயர்களை சூட்டுவோம். என்னதான் எல்லை மீள்நிரணயங்களைச் செய்து எங்களை முடக்க நினைத்தாலும் எல்லைகளைக் கடந்து சென்றும் வல்லமையை எமது தலைவர் பழனி திகாம்பரம் கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

 

Advertisements

Written by lankamuslim

மே 22, 2018 இல் 3:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: