Lankamuslim.org

One World One Ummah

முஸ்லிம் நாடுகள் தமக்குள் மோதுகின்றன இஸ்ரேலை எதிர்கொள்ள அச்சப்படுகின்றன : துருக்கி ஜனாதிபதி

leave a comment »

qazaqazsaqazsaqM.ரிஸ்னி முஹம்மட்: ஜெருஸலத்தை இஸ்ரேலின் தலைநகர் என அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக அறிவித்து அமெரிக்க தூதரகத்தை ஜெருசலத்தில் இஸ்தாபித்ததை தொடர்ந்து பலஸ்தீனில் ஒரே நாளில் 62 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் துருக்கி ஜனாதிபதி அர்துவானின் விசேட அழைப்பிப் பேரில் துருக்கியில் இடம்பெறும் இஸ்லாமிய ஒத்தழைப்பிற்கான அமைப்பின் (OIC) விசேட கூட்டத்தில் உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி அர்துவான் முஸ்லிம் நாடுகள் தமக்குள் ஐக்கியப்பட்டு இஸ்ரேலை எதிர்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

அங்கு உரையாற்றிய அர்துவான் முஸ்லிம் நாடுகள் ஐக்கியப்பட்டு இஸ்ரேலை எதிர்கொள்ள வேண்டும் . பரந்த அளவிலான சர்வதேச கண்டனத்தை உருவாக்கிய கொலைகள் தொடர்பாக இஸ்ரேல் பொறுப்புக் கூற வேண்டும் , “பாலஸ்தீனியர்களை படுகொலை செய்த இஸ்ரேலிய கொள்ளைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து மனிதாபிமானம் இறந்து போகவில்லை என முழு உலகிற்கும் காட்ட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் .

இதேவேளை இஸ்லாமிய ஒத்தழைப்பிற்கான அமைப்பு பலஸ்தீனர்களை பாதுகாக்குமாறு சர்வதேச சமூகத்தை வேண்டியுள்ளதுடன் மீண்டும் ஒரு முறை இஸ்ரேலிய தலைநகரம் ஜெருசலம் என்ற அமெரிக்க ,இஸ்ரேல் பிரகடனத்தையும் நிராகரித்துள்ளது.

இதேவேளை துருக்கியின் ஜனாதிபதி பலஸ்தீனியர்களை படுகொலை செய்தமையை “குற்றம், அட்டூழியம் மற்றும் அரச பயங்கரவாதம்” எனவும் வர்ணித்துள்ளார் . இதேவேளை பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்தன்பூளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஜனாதிபதி அர்துவான் முஸ்லிம் நாடுகள் தமக்குள் மோதிக்கொள்வதிலும் ,முரண்பட்டுக் கொள்வதிலும் கடும் பிசியாக இருக்கும் அதேவேளை இஸ்ரேலை எதிர்கொள்வதை பயத்தினால் தவிர்த்துக்கொள்கின்றன (“Muslims are way too busy fighting and disagreeing with themselves, and shy away when confronted by their enemies,”) என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டின் தலைவர்கள் கலந்துகொள்ளும் இஸ்லாமிய ஒத்தழைப்பிற்கான அமைப்பின் (OIC) விசேட கூட்டத்திற்கு சவூதி தனது வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி ஒருவரை மேட்டுமே அனுப்பியுள்ளது இதேவேளை எகிப்து , துபாய் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தனது கீழ் நிலை அமைச்சர்களை அனுப்பியுள்ளது . சவூதி , எகிப்து ,துபாய் ஆகியன நாடுகள் பலஸ்தீன் மற்றும் அல் குத்ஸ் விடயத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு சார்பான இரகசிய நிலைப்பாட்டை கொண்ட நாடுகள் என குற்றசாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றன .

qazaqazsaqazsaq

Advertisements

Written by lankamuslim

மே 20, 2018 இல் 12:04 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: