Lankamuslim.org

One World One Ummah

புலிகளை ஊக்குவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்

leave a comment »

JHU logo 2_CIபோர் வெற்றியை அனுஷ்டிக்கும் நாளில் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் எந்த தரப்பாவது நடந்து கொண்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இதனை கூறியுள்ளார்.

1988- 89 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் உக்கிரமடைந்த யுத்தம் காரணமாக பெரிய உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. போர் வெற்றி அனுஷ்டிக்கும் வகையில் கொண்டாடங்களை மேற்கொள்ளாது, அமைதி, நல்லிணக்கம், சகவாழ்வுக்கு வழிவகுக்கும் வகையில் போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் கெடுபிடிகள் தளர்த்தப்பட்டன.

எனினும் இந்த சந்தர்ப்பத்தை திட்டமிட்ட வகையில் பயன்படுத்தும் சில குழுக்கள் மீண்டும் தமிழ் சமூகத்திற்குள் மோதல்களை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

இதன் மூலம் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டாலோ அல்லது அந்த அமைப்பின் கொள்கைகளை பிரச்சாரப்படுத்த முயற்சித்தாலோ, அரசாங்கம் அதில் கட்டாயம் தலையிட வேண்டும்.

இந்த தலையீடு வெறும் வார்த்தையாக மட்டும் இருக்காது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் நிஷாந்த வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அனுஷ்டிப்புகளை தடுக்க இயலாது: அரசாங்கம்

இதேவேளை வடக்கில் எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள அனுஷ்டிப்புகளை தடுக்க இயலாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், மே 18ஆம் திகதி புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை நினைவு கூறி படையினரை கௌரவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த தினத்தில் புலிகளுக்கு ஆதரவாக வடக்கில் அனுஷ்டிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற செய்தியாளரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலே அமைச்சரவை துணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சரவை துணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவிக்கையில்,

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை வடக்கில் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனுஷ்டிக்கவில்லை. எமது தமிழ் மக்களே அனுஷ்டிக்கின்றனர். இதில் எந்த தவறுமில்லை.

ஜேவிபியினரும் இவ்வாறான தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இதேபோன்றே வடக்கில் யுத்தத்தின் போது இறந்த தமது சகோதரர் உள்ளிட்ட உறவுகளை நினைவுகூறியே வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இவ்வாறான ஒரு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இதில் எந்தவித தவறும் இல்லை. அங்குள்ள மக்களும் எமது மக்களே.

வடக்கில் உள்ள தமிழர் , உறவுகளை இழந்தவர்களே இந்த தினத்தை அனுஷ்டிக்கின்றனர். ஜேவிபியும் புலிகளைப்போன்று பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அவர்களும் இன்று நினைவுகூறி இவ்வாறு நினைவேந்தல் தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர். இதேபோன்றே வடக்கு மக்களும் அனுஷ்டித்துவருகின்றனர்.

வடக்கு மக்களை வேறு பிரதேச மக்களாக பிரித்து பார்க்ககூடாது. அவர்களுக்கும் தமது உறவுகளின் இழப்புகள் தொடர்பில் உணர்வுகள் உண்டு. யுத்தத்தின் போது எந்வொரு நாட்டிலும் பயங்கரவாதிகள் இறந்ததில்லை .பொதுமக்களும் இறந்ததுண்டு. அதுபோல் தான் இங்கும். வடக்கு மக்கள் இதனை அனுஷ்டிப்பதாலேயே உங்களுக்குப் பிரச்சினை இருப்பதாக தெரிகின்றது. இது தவறானதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Advertisements

Written by lankamuslim

மே 16, 2018 இல் 4:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: