Lankamuslim.org

One World One Ummah

மஹதிர் – அன்வர் இப்ராஹிம் கூட்டு மலேஷியாவில் சாதனை படைத்துள்ளது !!

leave a comment »

qazaqsazaqமலேஷியாவில் நடந்த பொதுத் தேர்தலில், முன்னாள் பிரதமர் மஹதிர் முஹமத் வெற்றி பெற்றுள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளார் 92 வயதாகும் மஹதீர் முஹமத். நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காகவும், 222 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கும் இந்தத் தேர்தல் நடைபெற்றது.

இதேவேளை தனது முன்னாள் அரசியல் எதிரியான மஹதிர் மொஹமதுக்கு வாக்களிக்குமாறு சிறையில் இருக்கும் செல்வாக்குமிக்க எதிர்க்கட்சி தலைவரும் மலேசியாவின் முன்னாள் துணை பிரதமருமான அன்வர் இப்ராஹிம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது மலேஷியாவில் கடந்த ஆறு தசாப்தங்களாக ஆட்சியில் இருக்கும் பரிசான் நசினல் கூட்டணியின் பிரதமர் நஜிப் ரசாக்கை எதிர்த்து நாட்டின் செல்வாக்கு மிக்கவர்களான அன்வர் மற்றும் மஹதிர் ஒன்றிணைந்திருந்தனர்

பிரதமர் நஜீப் ரஸாக் தலைமையிலான ஆளும் கட்சிக்கும், முன்னாள் பிரதமர் மஹதிர் முஹமத் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேற்றுமுன்தினம் மாலை 5 மணியுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவில் 69 சதவிகிதம் பேர் வாக்களித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில், மஹதிர் முஹமத்தின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மலேசியாவில் ஆட்சியமைக்க குறைந்தது 112 இடங்கள் தேவை. பிரதமரின் பதவியேற்பு நேற்று நடைபெறுமென மஹதிர் முஹமத் நம்பிக்கை தெரிவித்திருந்தார். உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மட்டத்திலான தலைவர்களில் மிக வயது மூத்தவர் என்ற பெருமையை மஹதிர் முஹமத் பெற்றுள்ளார்.

பிரதமர் நஜீப் ரஸாக் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பை முறைப்படுத்தாமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் இவருக்கு தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக கருத்துக்கணிப்புகள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. தேர்தல் முடிவுகளும் அதேபோல வந்துள்ளன.

கடந்த 1957ம் ஆண்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஒரே கட்சி ஆட்சிதான் அங்கு நடந்து வந்தது. மஹதிர் முஹமத்தும் 1981 முதல் 2003 வரை, 22 வருட காலம் பிரதமராக ஆட்சி செய்து பின்னர் ஓய்வு பெற்றவர். ஆனால் நஜீப் ரஸாக் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, கோபத்தின் காரணமாக, எதிர்க்கட்சிகளின் கூட்டணியோடு மீண்டும் களம் கண்டார் மஹதிர் முஹமத். மலேசியா வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே கட்சி ஆட்சி வீழ்த்தப்பட்டு எதிர்க்கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேஷியாவின் அபிவிருத்தியை உயர்ந்த மட்டத்தில் கட்டியெழுப்பிய வரலாற்றுத் தலைவரான மஹதிர் முஹமத்தின் மீள்வெற்றியானது சிறப்புமிக்கது. மற்றுமொரு வரலாற்றில் தடம்பதித்ததாக இதனைக் கருத முடியும். இதேவேளை அன்வர் இப்ராஹிம் தொடர்பில் கருத்துரைத்துள்ள பலரும் மலேசியாவின் எதிர்பார்க்கப்படும் அடுத்த பிரதமர் அன்வர் இப்ராஹிம்தான் என தெரிவித்துள்ளனர்

 

Advertisements

Written by lankamuslim

மே 11, 2018 இல் 7:47 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: