Lankamuslim.org

One World One Ummah

ஆக்கிரமிப்பு இஸ்ரேல் சிரியாவின் இலக்குகள் மீது தாக்குதல்

leave a comment »

qzaswqazaqsசிரியாவிலுள்ள ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் விமானகுண்டு தாக்குதல்களை நடாத்தித்துள்ளது இஸ்ரேல் படையினர் மீது ஈரானியப் படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டோர் லீபர்மேன் தெரிவித்துள்ளார். சிரியாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ஏவிய ஏவுகணைகளில் பாதிக்கு மேற்பட்டவற்றை சிரியா வானில் இடைமறித்து வீழ்த்தியதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டமாஸ்கஸ், ஹாம்ஸ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமானப் படைத்தளங்கள், ஆயுதக் கிடங்குகள், படை முகாம்கள் ஆகியவற்றின் மீது 70 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் இவற்றில் பாதிக்கு மேற்பட்ட ஏவுகணைகளை சிரியா இடைமறித்து அழித்ததாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் சிரியாவைச் சேர்ந்த படைவீரர்கள் 5பேர், ஈரான் ஆதரவுபெற்ற படைவீரர்கள் 18பேர் என மொத்தம் 23பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்க நடவடிக்கைகள்

ஈரான் மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஆறு நபர்கள் மற்றும் மூன்று நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் திறைசேரியினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாடுகளுடன் ஈரான் செய்து கொண்டிருந்த அணுத் திட்ட ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகிக் கொண்டுள்ள நிலையில் அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஈரானுடன் தொடர்பு கொண்டிருப்பதாக குறிப்பிட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா மீண்டும் தடை விதித்துள்ளதை பிரான்ஸ் கண்டித்துள்ளது. இதை “ஏற்றுக் கொள்ள முடியாது” என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஐரோப்பிய நிறுவனங்கள் பணம் செலுத்த தேவையில்லை என்று பிரான்ஸ் வெளியறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்குள் தங்கள் தொழில்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் புதிய ஒப்பந்தங்கள் போடக்கூடாது என்றும் அப்படி செய்தால் மேலும் புதிய தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் தடை நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று பிரான்ஸ் கூறியுள்ளது.

இத்தடையினால், ஏர்பஸ், எண்ணெய் நிறுவனமான டோடல், கார் நிறுவனங்கள் ரெனால்ட் மற்றும் போஷொ ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.2015ல் இரான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு, இந்நிறுவனங்கள் பில்லியன் டாலர் கணக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

 

Advertisements

Written by lankamuslim

மே 11, 2018 இல் 8:08 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: