Lankamuslim.org

One World One Ummah

அன்வர் இப்ராஹிம் மஹதிர் மொஹமத்துக்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு !!

with one comment

qazaqwsadffமலேஷிய வரலாற்றில் மிக தீர்க்கமான தேர்தலாக மாறி இருக்கும் இன்று நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தனது முன்னாள் அரசியல் எதிரியான மஹதிர் மொஹமதுக்கு வாக்களிக்குமாறு சிறையில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

மலேஷியாவில் கடந்த ஆறு தசாப்தங்களாக ஆட்சியில் இருக்கும் பரிசான் நசினல் கூட்டணியின் பிரதமர் நஜிப் ரசாக்கை எதிர்த்து நாட்டின் செல்வாக்கு மிக்கவர்களான அன்வர் மற்றும் மஹதிர் ஒன்றிணைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆளும் கட்சி வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் சவாலை இந்த தேர்தலில் எதிர்கொண்டுள்ளது. தேர்தலில் பலவீனமான முடிவு நஜீபுக்கு எதிராக கட்சிக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

“மாற்றத்திற்காக அனைவரும் மக்கள் முன்னணியில் ஒன்றிணையும்படி நான் அழைப்பு விடுக்கிறேன்” என்று குவாலாலம்பூரில் உள்ள மருத்துவமனையில் இருந்து திங்கட்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்ட அன்வர் குறிப்பிட்டார்.

ஒருபாலுறவில் ஈடுபட்டதான குற்றச்சாட்டில் அன்வர் கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் ஐந்து ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்த குற்றச்சாட்டு அரசியல் நோக்கம் கொண்டது என்று அவரது அரசியல் ஆதரவாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

1998 ஆம் ஆண்டு துணைப் பிரதமராக இருந்தபோதே 70 வயது அன்வர் இப்ராஹிமை அப்போது பிரதமராக இருந்த மஹதிர் பதவி விலக்கு சிறையில் அடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஒன்றிணைந்த இரு தலைவர்களும் பிரதமர் நஜீபை பதவி கவிழ்க்க பிரசாரங்களில் ஈடுபட இணங்கினர்.

மஹதிருடனான கூட்டணி அரசுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தி இருப்பதாக அன்வர் குறிப்பிட்டார். மலேசியாவில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் 15 மில்லியன் வாக்காளர்கள் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கத் தயாராகியுள்ளனர். இதில் ஆளும் கட்சிக்கு எதிரான கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக 92 வயது மஹதிர் மொஹமது போட்டியிடுகிறார்.

qazaqwsadff

 

Advertisements

Written by lankamuslim

மே 9, 2018 இல் 7:39 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. Polls have closed in Malaysia in what is being billed as the country’s tightest-ever election, clouded by a corruption scandal linked to one of its leading candidates.

    With nearly 15 million registered voters, polls opened at 00:00 GMT on Wednesday across the country and closed at 09:00 GMT.

    Malaysia’s 14th general election pits incumbent Prime Minister Najib Razak, who is seeking a third term, against his one-time mentor and former Prime Minister Mahathir Mohamad.

    Imran

    மே 9, 2018 at 10:49 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: