Lankamuslim.org

One World One Ummah

ரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது தடவையும் பூட்டின்

leave a comment »

G20 leaders summit in Hamburgநான்காவது முறையாக பூட்டின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக கடந்த 18 ஆண்டுகளாக பூட்டின் அதிகாரத்தில் உள்ளார். பூட்டின் எதேச்சதிகாரமாக ஆள்பவர் என எதிர்கட்சிகள் விமர்சிக்கின்றனர். பதவியேற்றுள்ள அவர் 2024-ம் ஆண்டு வரை பதவியில் இருப்பார். ரஷ்ய அரசியலமைப்பின் படி நான்கு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக இருக்க முடியாது. , 2024-ம் ஆண்டுடன் பூட்டினின் ராஜ்ஜியம் முடிந்துவிடும். ஆனால், சீனாவை போல ஜனாதிபதியாக பதவியில் எத்தனை முறை வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற சட்டதிருத்தத்தை பூட்டின் கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

கிரெம்ளின் மாளிகையில் எந்த பிரம்மாண்டமும் இல்லாமல் நடந்த பதவியேற்பு விழாவில், அரசியல் சாசனத்தை கையில் வைத்துக்கொண்டு அவர் பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் பூட்டினுக்கு சவாலாக இருப்பார் என கருதப்பட்டு, பின்னர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்ட அலெக்ஸி நாவன்லி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூட்டினின் பதவியேற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கைதாகியுள்ளனர் . ரஷ்யா முழுவதும் 19 நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பாதிபேர் மாஸ்கோவில் போராடி கைதாக்கியுள்ளனர்

பூட்டினின் அரசியல் எதிரிகளை அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கடுமையாகக் கையாள்வதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.76 சதவிகிதத்திற்கு அதிகமான ஓட்டுகளைப் பெற்று, ரஷ்ய அதிபராக புதின் மீண்டும் தேர்தேடுக்கப்பட்டார். ஆனால், இத்தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக சில சர்வதேச பார்வையாளர்களால் கூறப்பட்டது.

அதிபர் புதினுக்கு சவாலாக இருக்கக்கூடிய ஒரே வேட்பாளராகப் பரவலாக கருதப்பட்ட, அலெக்ஸி நவால்னி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால், தேர்தலில் போட்டியிடும் தகுதியை நவால்னி இழந்துவிட்டார் என கூறப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை நவால்னி மறுத்துள்ளார்.

சனிக்கிழமை மாஸ்கோவில் புதினுக்கு எதிராக நடந்த அனுமதிக்கப்படாத பேரணியில் கலந்துகொண்ட நவால்னி கைது செய்யப்பட்டார்.ரஷ்யாவில் ஜனநாயகத்தை வலுவிழக்கும் செயலை புதின் செய்துவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகின்றன.

Advertisements

Written by lankamuslim

மே 7, 2018 இல் 5:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: